இதற்கு வீரம் தேவை தானா ?

  • 84

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம் போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டலாம். தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

இந்த தற்கொலை சர்வதேச அளவில் மிகவும் அதிகரித்து வருகின்ற அபாயகரமான ஓர் செயற்பாடாகும். தற்கொலைக்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள் நாடுகளுக்கு இடையே வேறுபடுகின்றன, மேலும் இம்முறைகள் அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைச் சார்ந்துள்ளன. தூக்கில் தொங்குதல், பூச்சிக்கொல்லி நஞ்சு அருந்துதல் மற்றும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுதல் போன்றவை பொதுவான சில தற்கொலை முறைகளாகும்.

இவ்வாறான முறைகளை மேற்கொண்டு தான் அதிகளவில் தற்கொலைகள் நடை பெறுகின்றன. இது அல்லாமல் இன்னும் பல முறைகளிலும் தற்கொலைகள் இன்று நடைப்பொறுகின்றது.

தற்கொலை எண்ணம்

தற்கொலை எண்ணம் வந்தவர்கள் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். `My way or no way’ என்று. இதை `Tunnel vision’ என்று சொல்வார்கள். குதிரைக்கு நேர்த்திசையில் பார்ப்பதற்காக கண்ணாடி மாதிரி ஒன்றைப் போடுவார்கள். குதிரையால், தான் போகும் நேர்ப் பாதையைத் தவிர வேறு பாதையைப் பார்க்க முடியாது. `இது எனக்குப் பெரிய அவமானம். வேற வழியில்லை. நான் செத்துட்டா எல்லாம் சரியாகப் போயிடும்’ என நினைத்துக்கொள்வது தவறு. எவ்வளவோ பேர் எத்தனையோ அவமானங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஊரைவிட்டு, இன்னோர் ஊருக்குப் போய்க் கூட நாம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் வர வேண்டும். இப்படி பல வழிகள் இருப்பதை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே அடைத்துக்கொள்கிறார்கள். உளவியல் முறையில் இவர்களுக்கு இந்த எண்ணம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால், அவர்களைச் சரிப்படுத்திவிடலாம். தீராத நோய்க்கு ஆட்பட்டவர்களைக்கூட கவுன்சலிங்குக்கு அனுப்புவார்கள். மன நோய், மனரீதியான பிரச்னைகள் வரும்போது மனநல நிபுணர்களிடமும், கவுன்சலர்களிடமும் ஆலோசனை பெறலாம். எப்படி இருந்தாலும், தற்கொலை எந்த விஷயத்துக்கும் தீர்வல்ல. இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணம் தோன்றுபவர்களைக் கண்டுபிடித்தால், அவர்களுக்கு மருத்துவரீதியாக, உளவியல் ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

தற்கொலைக்கான காரணங்கள்
  • சிறுவயதில் ஏற்பட்ட இன்னல்கள், வறுமை.
  • இளம் வயதில் பள்ளியைவிட்டு நீங்குதல், நீக்கப்படுதல்.
  • பெற்றோருக்கு இடையே பிரச்னை, அதன் காரணமாக பெற்றோர் பிரிதல்.
  • நண்பர்களோடு கருத்து மாறுபாடு, பிரச்னை, உறவு முறிதல்.
  • காதல் தோல்வி.
  • போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல்.
  • ஏதோ காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுதல்; நிறுவனத்தில் இருந்து ஆள்குறைப்பு காரணமாக நீக்கப்படுதல்.
  • குடும்ப உறவுகளால் மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளுதல். மனப் பதற்றம், மனஅழுத்தம் ஏற்படுவது போன்றவை.
  • குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு.
  • சமுதாயரீதியாக ஒதுக்கப்படுதல். மாற்றுத்திறனாளியாக இருந்து, அதன் காரணமாக மற்றவர்களால் மனக்கசப்புக்கு ஆளாகுதல்.
  • சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது.
  • சுயகௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் நிலைமை வந்தால், அதனால் மனதளவில் பாதிக்கப்படுவது.
  • சமீபத்தில் ஏற்பட்ட இழப்பு. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எதிர்கொண்ட நோய் அல்லது பிரச்னை.
  • உறவினர்களில் முக்கியமானவர் இறந்துபோவது அல்லது பிரிந்துபோவது.
  • உறவினர்களோடும் மற்றவர்களோடும் தான் சேர்ந்து இல்லை (Belongingness) என்கிற எண்ணம். தான் மற்றவர்களுக்கு பயனில்லாமல் இருக்கிறோம் என்கிற நினைப்பு.
  • மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்று நினைத்துக்கொள்வது.
  • துயரம் மிக முக்கியமான காரணம். உதாரணமாக, திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்த மகன் இறந்து போவது, பெற்றோரை பாதிக்கும்; தாங்க முடியாது. சிலருக்கு அந்தத் துயரம் வாழ்நாள் முழுக்க தோய்ந்து இருக்கும். எப்போது சமயம் கிடைக்கும், அவர்களோடு சேர்ந்து போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
  • `Role Transition’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உதாரணமாக, ஒரு தம்பதி. கணவன் வேலைக்குப் போகிறார்; மனைவிக்கு வீட்டு வேலை மட்டும்தான் தெரியும். கணவர் விபத்தில் இறந்துவிடுகிறார். வளர்ந்த, பள்ளிக்குப் போகும் பிள்ளைகள். அப்போது அவர்களுக்கு வீட்டுக்கான பொறுப்பே மாறிவிடும். வேலைக்குப் போகவேண்டியிருக்கும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்தப் பொறுப்புச் சுமையைத் தாங்க முடியாமல் கூட தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றும். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர். அதனால், அவரின் மனைவி வேலைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்படும். சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், பொறுப்பின் சுமையைத் தாங்க முடியாமல்கூட தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படும்.
  • நிறுவனம் எதிர்பார்க்கும் அளவுக்குத் தன்னிடம் திறமை இல்லை (Skill Deficiency) என்கிற எண்ணம். அதை வளர்த்துக்கொள்ள முடியாமை. மற்றவர்கள் மாதிரி தன்னால் சிறப்பாக வேலை செய்ய முடியவில்லை, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்கிற இந்த யோசனையேகூட இதற்குக் காரணமாகலாம்.
  • குழந்தையாக இருந்து பெரியவராக வளர்ச்சியடையும்போது, அதை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை. உதாரணமாக, குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள் சிலர். வெளியே அனுப்புவதில்லை; யாரோடும் விளையாடவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட பிள்ளையை திடீரென்று, கல்லூரியில் ஹாஸ்டலில் கொண்டுபோய்ச் சேர்த்தால் கஷ்டப்படுவார்கள். அந்த நிலை வரும்போது இந்த எண்ணம் தோன்றலாம்.
  • எல்லாவற்றையும் ஒரு தோல்வியாக நினைத்துக் கொள்வதால் கூட இந்த எண்ணம் ஏற்படலாம்.
  • ஆளுமைக் குறைபாடு காரணமாகவும் இது தூண்டப்படலாம்.
உலக அளவில்

உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஒருவரின் தற்கொலையால் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (General Tedros Adhanom Ghebreyesus ) கூறியுள்ளார்.

ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஓர் உயிர் தற்கொலையால் பறிபோகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். 12-29 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளுக்கு இரண்டாவது காரணமாக தற்கொலை அமைகிறது.

45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கிறார்கள். வருவாய் குறைவாக உள்ள மற்றும் நடுத்தர குடும்பத்தினரே அதிகம் இந்த முடிவை எடுக்கிறார்கள். தூக்கு மாட்டிக்கொள்வது மற்றும் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது இவை இரண்டிலும்தான் அதிக தற்கொலைகள் நடக்கின்றன. குறிப்பாகக் கிராமங்களில் இந்த நடைமுறை அதிகமாக உள்ளது.

2016-ம் ஆண்டு இறுதியில் தற்கொலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது ஒரு லட்சம் பேருக்கு 10.5 சதவிகிதமாக இருந்த தற்கொலை விகிதம் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, மியான்மர் போன்ற சில நாடுகளைத் தவிர பிற அனைத்து நாடுகளிலும் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்தியா, இலங்கை, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 13 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், ரஷ்யா, குயானா போன்ற நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 26 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `அனைத்து நாடுகளிலும் தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால், தற்கொலைகளை 100 சதவிகிதம் தடுக்க முடியும். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களுக்கு முறையான உளவியல் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதன் மூலம் உயிரிழப்பை நிச்சயம் தவிர்க்க முடியும்.

மன அழுத்தத்துடனும் தற்கொலை எண்ணத்துடனும் ஒருவர் இருந்தால் அவருடன் இருப்பவர்கள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையற்ற ஆலோசனைகள், அறிவுரைகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ‘நீ தனியாக இல்லை. உனக்காக எப்போதும் நான் இருக்கிறேன்’ என்பன போன்ற நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளைப் பேசி, பிரியத்துடன் பழகினால் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்கலாம்.

NAFEES NALEER (IRFANI)
Irfaniya Arabic and Islamic College,
BA Reading (SEUSL),
Diploma in counseling R (NISD),
Editor of veyooham media center.

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம் போன்ற பல காரணங்களில் ஒன்றோ…

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம் போன்ற பல காரணங்களில் ஒன்றோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *