நித்யா… அத்தியாயம் -39

  • 11

”பிளீஸ் சொல்லுங்க? ”கத்தியவளை அடக்கி விட்டு,

”அந்த டய்ம் விக்னேஷ் தா அவன கொம்பனீலிருந்து கொழும்புகு அனுப்பி வெச்சிருக்கான்”

”ஓ அவ்ளோ ப்ளேனா?” கண்களில் ஈரத்தோடு பவித்ராவை பார்த்தவள்,

“ஹ்ம் வினோத் பாவம் எவ்ளோ கஷ்டபட்டான்.”

“ஓ அண்ணனும் தம்பியும் சேர்ந்து போட்ட பிளேன் மாய் எனக்கு படுது.” அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,

”நீ என்ன சொல்ற? தெரிஞ்சுதா பேசுறியா?” நடுங்கிய குரலுடனே கூறியதும், வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே,

”ஆமா ஆமா லட்சுமிக்கா இதுல ஏதோ சதி இருக்கு போங்க” அவ்விடத்தை விட்டு நகர்ந்தவளிடம்,

”பவி பவி நில்லு ராத்ரீல தனியா போகாத நா நானும் வாரன்.” கத்தியபடியே அவள் பின்னால் ஓடினாள்.

”பிளீஸ் பின்னாடியே வராதீங்க நா போய்கிறேன். போங்க எல்லாரும் சேர்ந்து அக்காவ கொல பண்ணீட்டிங்களே.” மேலும் பேசமுடியாமல் நெஞ்சு கனக்கவே ஓடினாள் பவித்ரா.

”நா சொல்றத கேளு.” அவள் வேகமாக சாலையைக் கடக்க முயன்றாள்.

”பவி பவி வேணாம்.” கூச்சலிட்டுக் கொண்டே ஓடினாள் லட்சுமி. மின்னலைப் போல வேகமாக வந்த கார் பவித்ராவை மோதியது.

”பவி”

காரிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் வியர்த்துக் கொட்டியது லட்சுமிக்கு. அவசரமாக புதரினுள் ஒழிந்து கொண்டாள். காரை திறந்து கொண்டே,

”ஓ சிட் யாருக்கு சாக ஏ வண்டி கெடச்சுது?” கோபத்துடன் ,

”டேய் கார்த்திக் அந்த டோர்ச் லைட்ட எடுத்துட்டு வா.” இப்பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி நடுங்கிப் போனாள்.

காரினுள் இருந்த டார்ச் லைட் உடன் வெளியே வந்தவனின் பார்வை சுருண்டு கிடந்த பவித்ராவைக் கண்டதும் அதிர்ந்தான்.

”டேய் விக்கி பவி பவி டா” புருவங்களை உயர்த்திக் கொண்டே,

”வாட் அவளா செப்ரைஸ் அப்போ தூக்கி கார்ல போடு” சிரித்தவனை நோக்கி,

”ஓகே வா ஹாஸ்பிட்டலுக்கு போலாம்”

இருவரும் அவளைத் தூக்கிக் கொண்டு காரில் போட்டுவிட அந்தக்கார் பறந்தது. இவையனைத்தையும் பொம்மை போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி அப்போது தான் உயிர் பெற்றவள் போல அந்த பங்களாவை நோக்கி ஓடினாள்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

”பிளீஸ் சொல்லுங்க? ”கத்தியவளை அடக்கி விட்டு, ”அந்த டய்ம் விக்னேஷ் தா அவன கொம்பனீலிருந்து கொழும்புகு அனுப்பி வெச்சிருக்கான்” ”ஓ அவ்ளோ ப்ளேனா?” கண்களில் ஈரத்தோடு பவித்ராவை பார்த்தவள், “ஹ்ம் வினோத் பாவம் எவ்ளோ…

”பிளீஸ் சொல்லுங்க? ”கத்தியவளை அடக்கி விட்டு, ”அந்த டய்ம் விக்னேஷ் தா அவன கொம்பனீலிருந்து கொழும்புகு அனுப்பி வெச்சிருக்கான்” ”ஓ அவ்ளோ ப்ளேனா?” கண்களில் ஈரத்தோடு பவித்ராவை பார்த்தவள், “ஹ்ம் வினோத் பாவம் எவ்ளோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *