எளிமையில் பெருநாள்

  • 12

வீறிடும் இரவில் விழித்திடும் நாட்கள்
பசியை பகடைக் காயாய் மாற்றி
நோன்பு நோற்கும் புனித ரமழான்

ஏழையின் உணர்வுகள் உணர்விழந்த
உறக்கம் அத்தனையும் உலகமக்கள்
வாழ்வுதனை ஊற்றிடும் ரமழான்

நுண்ணங்கிகளின் விளையாட்டில் நூதனமாய்
கடக்கும் ரமலான் கூடிநின்று
உறவாட முடியாமல் பிரிந்திருக்கும்
நாட்கள் உதவிடு ரமழானே

கண்ணுக்கு தெரியாத எதிரிகள்
உயிரை பறிக்கும் நாட்களில் வந்தாயே
எம்மோடு கைகோர்க்க புனித ரமழானே உதவிடு

இறைவனை நெருங்கும் இம்மாதம் கூட
இறை இல்லங்களை நெருங்க முடியாமல்
போனதே உதவி ரமழானே

உழைக்கும் கரங்களும்
உழைப்பிலாந்து கிடைக்கிறது
உதவிடு ரமழானே

புத்தாடைகளை வாங்க பணம் இன்றி
புதியதோர் பெருநாளாம்
ஏழைகளின் நிலையோ பரிதாபம்

பணம் படைத்த உறவுகள் உதவிட முடியாது
வீழ்ந்து கிடக்கிறது உதவிடு ரமழானே

ஏழ்மையின் உச்சத்தில் ஏற்றதாழ்வுகள்
இன்றி கைகோர்க்கும் பெருநாள்

எளிமையோடு எண்ணிலடங்கா
ஏக்கங்களை இதயத்தோடு ஏந்தி
அடையும் பெருநாளை அழகா ஏற்றிடுவோம்

அர்த்தமற்ற ஆடம்பரம் தேவையில்லை
ஏழைகளின் மனதையும் ஒரு கணம் சிந்தித்து
ஏற்றிடுவோம் பெருநாளை

உச்சு முதல் உள்ள கால் வரையில்
உடலை நகையால் அழங்கரித்து
வண்ணங்கள் பல கொண்டு
ஜொலித்திடாமல் தடுத்து

அண்ணல் நபி கண்ட துன்பங்கள்
கண்ணேதிரே காட்சி கொள்ள
ஏழையும் பணக்காரனும்
சமனென்று உணர்ந்து
புத்தாடைகளை பொதுவாய்
மெருதுவாய் கலந்து எளிமையாய்
அண்ணல் நபியின் சொல் கொண்டு
அழங்கரித்திடும் மாதம்

கடந்து போன காலங்கள்
கரைசேர முடியாத பொருளாதாரம்
வீழ்ந்து கிடக்கும் இன்னாலில்
எளிமைதனை ஏற்று
கடந்திடுவோம் பெருநாளை

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

வீறிடும் இரவில் விழித்திடும் நாட்கள் பசியை பகடைக் காயாய் மாற்றி நோன்பு நோற்கும் புனித ரமழான் ஏழையின் உணர்வுகள் உணர்விழந்த உறக்கம் அத்தனையும் உலகமக்கள் வாழ்வுதனை ஊற்றிடும் ரமழான் நுண்ணங்கிகளின் விளையாட்டில் நூதனமாய் கடக்கும்…

வீறிடும் இரவில் விழித்திடும் நாட்கள் பசியை பகடைக் காயாய் மாற்றி நோன்பு நோற்கும் புனித ரமழான் ஏழையின் உணர்வுகள் உணர்விழந்த உறக்கம் அத்தனையும் உலகமக்கள் வாழ்வுதனை ஊற்றிடும் ரமழான் நுண்ணங்கிகளின் விளையாட்டில் நூதனமாய் கடக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *