இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறாய்?

உயிர்கொல்லி கொரோனாவே!
உலகைச்சுற்றி வந்த
உன் பயணம் போதாதா?
நீ இன்னும் எவ்வளவு தூரம்
பயணிக்கப் போகிறாய்?

மனிதர்களின் உடலில் நுழைந்து
விளையாடும் உந்தன் விந்தையான விளையாட்டிலிருந்து நமக்கு
விடிவு கிடைக்காதா?

மனிதர்களில் தொற்றி
துன்பம் கொடுக்கின்றாய்!
துன்பப்பட்ட மக்களை தொற்று
நோயாளி ஆக்குகின்றாய்!

உயிர்களை அநியாயமாக
காவு கொள்கின்றாய்!
அப்பாவி மக்களை வீட்டோடு
அடங்கிப்போக செய்துவிட்டாய்!

ஒட்டி இருந்த உறவுகளை
வெட்டி விலகச் செய்துவிட்டாய்!
சுதந்திமாகத் திரிந்த மனிதரையெல்லாம்
வீட்டினுள்ளே சிறைப்பிடித்து அடக்கி விட்டாய்!

அன்பு என்பது அற்பமும்
இல்லாத அரக்கன் – நீ
வயது வித்தியாசமின்றி மனித
உயிரோடு விளையாடுகின்றாய்!

கண்ணுக்குப் புலப்படாத அளவில்
இருந்து கொண்டு – நீ
மண்ணகத்தையே ஆட்டிப்படைக்கின்றாய்!

உன்போல் அராஜக ஆட்சியை
ஒருபோதும் கண்டதில்லை
இனி ஒருபோதும் காணும்
வலிமையும் எமக்கு இல்லை

உன்னுடன் அழைத்து வந்த
உன் சந்ததியினரோடு
விடைபெற தயாராகு!
எண்ணிலடங்கா துயரம் தந்த
உன் விளையாட்டை இத்துடன் நிப்பாட்டு!

உயிர்கள் அழிந்தது போதும்!
உறவுகளை இழந்தது போதும்!
இனங்களுக்கிடையே வன்முறைகளை
தூண்டிவிட்டது போதும்!
வறுமையில் மக்கள் வாடியது போதும்!

இனியும் வேண்டாம் உந்தன்
வேடிக்கை விளையாட்டு!
தினம் தினம் வேதனையில்
துடிக்கிறோம் உன் பரவல் கேட்டு!

உயிர்கொல்லி கொரோனாவே! – நீ
இன்னும் எவ்வளவு தூரம் இவ்வுலகில் பயணிக்கப்போகிறாய்?

சஸ்னா பானு நவாஸ்
திஹாரி.

One Reply to “இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறாய்?”

Leave a Reply

Your email address will not be published.