உன் வாழ்விலும் ஓர் ஸம் ஸம்

  • 9

மனித சஞ்சாரமே மக்கி
வெறித்துப் போன
வெற்றிடமே உருவாய் கொண்ட
வெட்டவெளிப் பாலைவனத்தில்
தன்னந்தனியே பெண்ணொருத்தி
தட்டுத் தடுமாறி
விட்டுவிடப்பட்டாரே.
உஷ்ணத்தால் உழன்று
விறைத்திடும் சிசுவுடன்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடை நடுவே
வியாபித்த பூலோகமதில்
உண்ணவோ பருகவோ சிறிதன்றி வேறில்லையங்கு!!
இதுவே தனக்கான
இறை நியதியென்றறிந்ததும்
“அப்படியென்றால்
அல்லாஹ் எங்களைக்
கைவிடமாட்டான் ”
என்றே பதிலுரைத்தார்.
அன்னை ஹாஜரா.

பொறுமையே இவர்
பொறுமை கண்டு
பெருமை கொண்டது.
இறையோன் தனக்கென
இயம்பிய தாங்கொணாக்
கஷ்டத்தையும்
இஷ்டமென்றேற்றார்
புனிதமிகு நீரூற்றாம்
ஸம் ஸம்
பரிசளிக்கப்பட்டார்!
நினைவில் கொள்!

இதைவிடவா தனிமை உனக்கு?
இதைவிடவா தாகம் உனக்கு?
இதைவிடவா நிர்க்கதி உனக்கு?
இதைவிடவா மன்றாட்டம் உனக்கு?
இதைவிடவா துயருனக்கு?

பொறுமை கொள்
உன் வாழ்விலும் ஓர்
ஸம் ஸம் உதித்திடும்!

நிச்சயமாக துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:6)

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) Ⓡ  SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

மனித சஞ்சாரமே மக்கி வெறித்துப் போன வெற்றிடமே உருவாய் கொண்ட வெட்டவெளிப் பாலைவனத்தில் தன்னந்தனியே பெண்ணொருத்தி தட்டுத் தடுமாறி விட்டுவிடப்பட்டாரே. உஷ்ணத்தால் உழன்று விறைத்திடும் சிசுவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடை நடுவே வியாபித்த பூலோகமதில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *