ரமழானும் பெருநாளும்

  • 18

ஆயிரம் மாதங்ளைவிட
சிறந்த இரவு இங்குதான் உண்டு!
ஏழைகள் பசியுணர்த்தும்
மனித உணர்வும் இங்குதான் உண்டு!

தவ்பாவும், இஸ்திஃபாரும்,
கியாமுல்லையிலும்
இஃதிகாபும்! இங்குதான் உண்டு!
இங்குதான்! இவ்வருள்
மாதத்தில் தான் உண்டு!

ரமழான் இறைவனை உணர்த்துகிறது
ரமழான் மனித உணர்வுகளை உணர்த்துகிறது
ரமழான் பக்குவம் புகட்டுகிறது

வாயைப்பேண வந்த ரமழானில்
வதந்திகள் கதைத்து
பாவம் சுமப்பது சரிதானா?
ஏழை பசியுணர்த்தும் ரமழானில்
ஆடம்பரம் தேடுவது சரிதானா?
ஆரோக்கியம் நிறைந்த ரமழானில்
நோய்பரப்பும்படி ஊர் திரிவது சரிதானா?

வருகிறது பெருநாள்!
பெருநாள் என்றாலும்
வறுமையுடன் பலருக்கு
சிறுநாளாய் இருக்க போகிறது.

பரஸ்பரம் உதவிகள் செய்வோம்
ரமழான் பக்குவத்தை
எளிமை பெருநாளில் பிரசுவிப்போம்

கூட்டம் கூடி நின்று
சுகாதாரம் இழக்க காரணமாக
நாம் இல்லாமல் இருப்போம்.
உதவிடும் ரமழான்
எளிமையின் பெருநாள்!

பாத்திமா அப்துல்காதர்
தரம் – 04
அஸ்ஹர் ஆரம்ப நிலை பாடசாலை
அக்குரணை

ஆயிரம் மாதங்ளைவிட சிறந்த இரவு இங்குதான் உண்டு! ஏழைகள் பசியுணர்த்தும் மனித உணர்வும் இங்குதான் உண்டு! தவ்பாவும், இஸ்திஃபாரும், கியாமுல்லையிலும் இஃதிகாபும்! இங்குதான் உண்டு! இங்குதான்! இவ்வருள் மாதத்தில் தான் உண்டு! ரமழான் இறைவனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *