ஆன்மீக வறுமையா? லௌகீக வறுமையா?

  • 21

மனது பதறுகின்றது!

“பெண் உனக்கு அமானிதம்! அவள் உனது விலாஎலும்பில் இருந்து படைக்கப்பட்டவள்.” “அவளைப் பாதுகாப்பது உனது கடமை” எனறு சொன்ன எங்கள் மார்க்கம் எங்கே?

வெறும் 2000 ரூபாய்க்காகத் தம் உயிரையே பணயம் வைத்த நமது முஸ்லிம் சமூகம் எங்கே?

தன் குடும்பத்தையும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு ஆயிரக் கணக்கில் எம் தாய்மார்கள் வெளியூர் செல்லும் போது மௌனமாக இருக்கும் எங்கள் பள்ளி நிர்வாகிகளும் இஸ்லாமியத் தலைமைத்துவங்களும் இஸ்லாமிய சட்டங்களும் எங்கே?

அடகுக் கடைகளில் நமது பெண்கள் வரிசையில் நிற்கும் போது கண்மூடி நிற்கும் நமது இஸ்லாமிய பொறுப்பாளர்கள் எங்கே?

பெண்களின் உடைக்கு அப்பாலும் ஒரு இஸ்லாம் மார்க்கம் உண்டு என்பதையும், இஸ்லாமிய வாழ்க்கை சட்டங்களுக்குள் வரையறுக்கப்பட்ட, ஒரு கட்டுக்கோப்பான சமூகமாக முஸ்லிம் சமூகத்தைக் கட்டி எழுப்புவதே உங்கள் பொறுப்பு என்பதை எப்போது உணரப் போகின்றீர்கள்?

இந்தப் பதவிகளும், தலைமைத்துவங்களும் VIP பாஸ்போர்ட் பெறுவதற்கும்,பணத்தை உழைப்பதற்கும், இடைக்கிடையே நாய்க்கு எலும்புத் துண்டுவது போல கொஞ்சம் பணத்தை அள்ளி வீசி எறிவதற்காகவும் அல்ல!

பெண்ணுக்குத் தலைமைத்துவம் முடியாது என்று அடித்துச் சொல்லும் நீங்கள் வெறுமனே ரூபாய் 2000 க்காக உயிரைக் கூட விடத் தயாராககும் ஒரு சமூகத்தையே உருவாக்கி கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கையாலாகாத தன்மையை நினைத்து வெட்கப்படுங்கள்.

இஸ்லாம் வெறும் மார்க்கமல்ல.அது ஒரு வாழ்க்கை முறை.

‎Zakkath is not just an action. ‎It is a well planned mechanism, that leads to a ‎”JUST MONETARY SYSTEM”

கைநீட்டி வாங்குகின்றவர்களை உருவாக்குவது ஸக்காத்தினதும் ஸதகாவினதும் நோக்கம் அல்ல. அப்படிப் பட்டவர்களை உருவாக்காமல் தடுப்பதே இத்திட்டத்தின் பாரிய நோக்கமாகும்.

‎கலாநிதி சுக்ரி, மர்ஹும் நளீம் ஹாஜியார் போன்றவர்கள் உருவாக்கிய பகுத்தறிவுடன் கூடிய, சுய சிந்தனையுடன் செயலாற்றக் கூடிய பலர் நம்மில் இருக்கின்றீர்கள்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று தன் உயிரையே பணயம் வைக்கக் கூடிய பல ரிஸ்வான்கள் நம்முள் இருக்கின்றீர்கள். தர்க்க ரீதியாக சிந்திக்கக் கூடிய பலர் இருக்கிறீர்கள்.

இந்த சமூக சிரழிவை எப்படிக் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? களத்தில் இறங்குங்கள்.

“‎பெண்களை ரோட்டில் திரிய வேண்டாம்” என்று சொல்வதை விட்டு விட்டு பெண்கள் ரோட்டில் திரிவதற்கான காரணங்களை வேரோடு அழியுங்கள்.

‎மனிதாபிமானமும், ஆழ்ந்த இஸ்லாமிய அறிவுமே உங்கள் வழிகாட்டியாக அமையட்டும். தலைமைத்துவங்கள் பலவீனமடையும் போது புதிய தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்தப் புனித ரமளான் மாதத்தில் 2000 ருபாய்ப் ‎பணத்திற்காக உயிரைவிட்ட இந்த நிகழ்வு எமது சரித்திரத்தின் முதலாவதும் கடைசி நிகழ்வாகவும் அமையட்டும். ஆமீன்!

Islam is a balanced and coherent way of life designated to cater human welfare. through the establishment of harmony between the moral and the material needs of human beings and the actualisation of socio economic justice in the human society.

My Question is DID THE INCIDENT AT MALIGAWATTE BRING HARMONY BETWEEN THE MORAL AND THE MATERIAL NEEDS OF HUMAN BEINGS?

WHERE DID WE GO WRONG?

HAVE WE NOT FAILED IN OUR DUTY IN ‎ERADICATING THE ROOT CAUSE OF ALL THESE ATROCITIES?

please note that I am not finding fault with the person who generously gave money to the poor, but the complete system which needs an immediate change.

பிற்குறிப்பு. பணத்தை வாரி வழங்கியவரை நான் குறை சொல்லவில்லை என்பதைக் கவனிக்க. அதற்குக் காரணமான முழுக் கட்டமைப்பும் மாற வேண்டும் என்பதே எனது வாதம்.

‎Dr.Faudina Zameek.

மனது பதறுகின்றது! “பெண் உனக்கு அமானிதம்! அவள் உனது விலாஎலும்பில் இருந்து படைக்கப்பட்டவள்.” “அவளைப் பாதுகாப்பது உனது கடமை” எனறு சொன்ன எங்கள் மார்க்கம் எங்கே? வெறும் 2000 ரூபாய்க்காகத் தம் உயிரையே பணயம்…

மனது பதறுகின்றது! “பெண் உனக்கு அமானிதம்! அவள் உனது விலாஎலும்பில் இருந்து படைக்கப்பட்டவள்.” “அவளைப் பாதுகாப்பது உனது கடமை” எனறு சொன்ன எங்கள் மார்க்கம் எங்கே? வெறும் 2000 ரூபாய்க்காகத் தம் உயிரையே பணயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *