இஸ்லாஹியாவின் நினைவலைகள்

  • 10

நீளமாக இருக்கும் பொறுமையாக வாசியுங்கள். ஏதோ விருப்பு வெறுப்போடு இஸ்லாஹியா எனும் வளாகத்தில் காலடிவைத்தேன். காலம் கடந்தும் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளது. வாழ்கை என்பது அழகானது அதை ரசிப்பவர்களுக்கு மாத்திரம்.

நாம் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்லும் போது பல அனுபவங்கள், சுவாரஷ்யங்களை உணர்கிறோம். அவ்வாறு எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு வித்திட்ட என் கல்லூரி விடுதி வாழ்க்கையின் ஒரு சில நகைச்சுவை அனுபவங்களையும் ஆக்கபூர்வமான விடயங்களையும் பதிவிடுகிறேன்.

அல் ஹம்துலில்லாஹ்

நினைவுகள் எப்பொழுதும் அழகானது

Hostel ல் இருந்து பார்
குடும்பத்தின் பாசம்,
ஏக்கத்தை உணர்வாய்

Hostel ல் இருந்து பார்
உன்னைச் சுற்றி
புது நட்புவட்டம் தோன்றும்
உலகம் புரியும்

Hostel ல் இருந்து பார்
மனிதர்களின்
வாழ்க்கையின் ஏற்றம்,
இறக்கத்தை அறிவாய்

Hostel ல் இருந்து பார்
ஆசான்களின் தியாகத்தை
அன்பை கண்டுகொள்வாய்

Hostel ல் இருந்து பார்
உனக்கும்’டீ’ ஊத்த வரும்
சுடு நீரை கொதிக்க
வைக்கயாவது பழகிடுவாய்.

Hostel ல் இருந்து பார்
ஆடைகள் அழகாகும்
புது தோற்றமளிப்பாய்

Hostel ல் இருந்து பார்
Hotel காரன் நண்பனாவான்
Watcher எதிரியாவார்

Hostel ல் இருந்து பார்
உனக்கு பிடிக்கும்,
பிடிக்காத என்று
உன் மனநோவல்களை வைத்து
உஸ்தாத்மார்களை வகைப்படுத்துவாய்.

Hostel ல் இருந்து பார்
எப்படி படிப்பதென்பதேயே அறிவாய்

Hostel ல் இருந்து பார்
ஒரு தாய், தந்தையர்
மகனை காலையில்
எழுப்புவதின்
கஷ்டத்தை உணர்வாய்
பொறுப்பாளர் எனும்
அந்தஸ்த்திலிருந்து.

Hostel ல் இருந்து பார்
வெள்ளை தாள்களுடனும்,
பேனாவுடனும் அலைந்து
கடிதம் எழுத பழகுவாய்
என்றும் மறவாமல்
ஒரு வசனத்தை
திரும்ப திரும்ப எழுதுவாய்
“இனி இந்த தவறை
செய்ய மாட்டேன்”

Hostel ல் இருந்து பார்
உன் பிம்பம் விழுவதற்கு ஒரு
ஓட்டை கண்ணாடி இருக்கும்
தலையணை ஊத்தையாகும்
பெட்சீட் கழுவுவதற்கு நினைப்பே வராது

Hostel ல் இருந்து பார்
காசு வராவிட்டால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

Hostel ல் இருந்து பார்
நாட்களின்
அருமை பெருமை புரியும்
நேரத்தின் மகிமை புரியும்

Hostel ல் இருந்து பார்
அந்த ஏரியாவே
உன்னை கவனிக்கும்
ஆனால்
காக்கைகூட உன்னை
கவனிக்கவில்லை என உணர்வாய்

Hostel ல் இருந்து பார்
உன் வீட்டுக்கும்
Hostel க்குமாய்
உருவமில்லா
உன் உடம்பு
ஒடித்திரியக் காண்பாய்்

Hostel ல் இருந்து பார் !
பருப்பு, வட்டக்காய்,
நூடில்ஸ், சம்பல்,
இறைச்சி, துண்டில்லா ஆனம்
இவை எல்லாம்
Hostel ஐ கவுரவிக்கும்
உணவுகள் என்பாய்.

Hostel ல் இருந்து பார்
இருதயம் அடிக்கடி
பிரியாணி, கொத்து கேக்கும்
அந்த நேரம் மறக்காமல்
Hotel காரனுகளின்
ஞாபகம் கண் முன்னே
காட்சியளிக்கும்
அந்த நேரம்
நிசப்த
அலைவரிசைகளில்
“என்ன வாழ்கைடா இது”
என்று ஒரு குரல்
ஒலிபரப்பாகும்.

ஊர் உலகம் பற்றிய
செய்திகள் எல்லாம்
உனக்கு வந்து சேரும்.
உன் பழக்கங்கங்களின்
திரைச்சீலையைக்
புதுப்புது உறவுகள் கிழிக்கும்.

தேவைகள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்.
காசு மட்டும்
கரைந்துபோகும்.

மோகங்கள் சமுத்திரமாய்
பெருக்கெடுக்கும்.
சாட்டர் ஆகி
சமுத்திரம் அடங்கும்.

Hostel ல் இருந்து பார்
விடு முறை நாட்களில்
புது நண்பர்களுடன்
புதுப்பயணங்கள்,
புது இடங்கள்,
சுற்றுலாக்கள் என்று
பல சந்தோஷங்களை பெறுவாய்.

Hostel ல் இருந்து பார்
ஒரு புத்தகத்தை கூட
தொடாமல் இருப்பவர்களையும்
தொடுவதற்கு வேறு புத்தகங்கள்
இல்லையா என்று கேட்கும்
அளவுக்கு உன்னை மாற்றும்.

Hostel ல் இருந்து பார்
தலைமைத்துவம் கிடைக்கும்
உன் ஆளுமையை
நீயே வளர்த்துக்கொள்வாய்

Hostel ல் இருந்து பார்
யாராவது வீட்டிலிருந்து
பார்க்க வந்த செய்தி
கேட்டாலே போதும்
அந்த ஏரியாவில் காக்கைப்போல்
சுற்றிக்கொண்டே இருப்பாய்
Offer என்ற பெயர் தாங்கிய
உணவுகளை சாப்பிட

Hostel ல் இருந்து பார்
கள்ள புத்தி நிறையே வரும்
லீவ் எடுப்பதற்கு
Lectures கட்பன்னுவதற்கு,
கிடைத்த உணவுகளை
மறைப்பதற்கு இன்னும் பல

Hostel ல் இருந்து பார்
வாழ்க்கையை உண்மையாய்
விரும்புவாய், ரசிப்பாய்

Hostel ல் இருந்து பார்
சின்ன சின்ன கலாய்ப்புகளில்
சிலிர்க்க முடியுமே.
அதற்காகவேனும்
ஆசைகளை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே.
அதற்காகவேனும்
பக்குவம் என்ற சொல்லுக்கும்
வாழ்க்கை என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே.
அதற்காகவேனும்
வாழ்ந்துகொண்டே
Fun எடுக்க முடியுமே.
Fun எடுத்துக் கொண்டே
வாழவும் முடியுமே.
அதற்காகவேனும்
Hostel ல் இருந்து பார்

Hostel ல் இருந்து பார்
ஒரு Toffee கூட
பசியை போக்கும் என்பாய்.
மாங்காய் கூட
காலை உணவாக மாறும்
தேங்காயும் ஒரு நேரம்
அமையும் உணவாக

Hostel ல் இருந்து பார்
நீ சாப்பிடாத உணவுகளும்
விருப்பத்திற்குரிய உணவாக மாறும்
ஆரோக்கிய உணவு என்ற பேரில்
சமபோஷ, திரிபோஷ
காலை, மாலை, இரவு
உணவாக மாறும்

இந்த நினைவுகளோடு அல்ஹம்துலில்லாஹ் 6 வருடங்களை கடந்துவிட்டேன். வெறுமனே இந்த நினைவுகளை மாத்திரமா? இஸ்லாஹியா தந்தது இல்லை என்பேன்.

சொல்ல முடியாத அளவு என் அறிவில், நடத்தையில், என் சிந்தனையில் பாரிய மாற்றங்கள், உலகத்தை அறிய வைத்தது, என் திறமையை வெளிப்படுத்தியது, திறமைக்கான களத்தை தந்தது, சமூகப்பற்றை புரியவைத்தது, தஃவா உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. அல்ஹம்துலில்லாஹ். தற்போது இஸ்லாஹியா நான் எனும் விதையை பயிரிட்டுள்ளது. இதன் அறுவடையை கூடிய சீக்கிரத்தில் பெறும். Insha Allah உங்கள் துஆக்களிலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கான என் அனுபவ கடைசி வார்த்தைகள் இதோ இலட்சியங்களை அடைய பயணிக்கும் போது பல தடைகள் உன்னை எட்டிப்பார்க்கும். அதில் எதிலையும் வீழ்ந்து விடாது எதிர்த்து நில் வெற்றி அடைவாய். இன்ஷா அல்லாஹ்

Faslan Hashim
Islahiyya Arabic College®️
South Eastern University Of Sri lanka
BA®️

நீளமாக இருக்கும் பொறுமையாக வாசியுங்கள். ஏதோ விருப்பு வெறுப்போடு இஸ்லாஹியா எனும் வளாகத்தில் காலடிவைத்தேன். காலம் கடந்தும் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளது. வாழ்கை என்பது அழகானது அதை ரசிப்பவர்களுக்கு மாத்திரம். நாம் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து…

நீளமாக இருக்கும் பொறுமையாக வாசியுங்கள். ஏதோ விருப்பு வெறுப்போடு இஸ்லாஹியா எனும் வளாகத்தில் காலடிவைத்தேன். காலம் கடந்தும் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளது. வாழ்கை என்பது அழகானது அதை ரசிப்பவர்களுக்கு மாத்திரம். நாம் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *