தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர்

தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர் நினைவிருக்கட்டும்! அனைத்து முஸீபதுகளும் குடிகொண்டுள்ள ஒரே மனிதர் தொழுகை இல்லாதவர். தொழுகை இல்லாத வீட்டில் பரகத், நிம்மதி, மகிழ்வு என்பவை சாத்தியமற்றவை.

தொழுகை,

  1. இறைப் பொருத்தத்தை ஏற்படுத்துகிறது.
  2. வாழ்வாதாரத் தேவைகளுக்கான அடிப்படைக் காரணி.
  3. தனிமனித, குடும்ப, சமூக சீர்திருத்தத்தை உண்டுபண்ண வல்லது.
  4. சுவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியமான திறவுகோள்.
  5. மண்ணறையில் பாதுகாக்கும் பிரதானமான கேடயம்.
  6. சந்தோசம், நிம்மதி, பரகத் என்பவற்றை தனிமனித, குடும்ப, பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தக்கூடியது.
  7. தீய குணங்கள், தவறான சிந்தனை மற்றும் நடத்தைகளை வாழ்விலிருந்து ஒதுக்கி மனிதனை நேறிய வழியில் நெறிப்படுத்தும் அருமையான வழிகாட்டி.
  8. கலிமாவுக்கு அடுத்தாக இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் முதல் இடத்தைக் கொண்டது.
  9. இறைவன் தனது அடியார்கள் தன்னுடன் நேரடியாக உரையாடுவற்கு தனது இறுதித் தூதரை விண்ணுலகத்திற்கு அழைத்து தனது சந்நிதானத்தில் கௌரவித்து வழங்கிய பெறுமதி மதிக்கமுடியாத சிறந்த அன்பளிப்பு.
  10. இதனை சரியாக விளங்கிய முஃமினின் ஆயுதம்.

தொழுகையை சரியாக, பொடுபோக்கின்றி உள்ளச்சத்துடன் அமைதியாக முழு உலகத்தின் இரட்சகனுடன் உரையாடுவதாக நினைத்து உரிய நேரத்தில் தொழும் பட்சத்தில் மேற்குறித்த பயன்களை அடையலாம்.

பருவ வயது முதல் மரணம் வரை தொழுகையை விடுவதற்கு புத்தியுள்ள யாருக்கும் எக்காரணம் கொண்டும் அனுமதியில்லை. ஆனால் புத்தி பேதலித்தவர், மாதவிடாய் மற்றும் பிரசவ ருது ஏற்படும் காலகட்ட பெண்கள் ஆகியோருக்கு குறித்த காலத்துக்கு மாத்திரம் தொழுகையை விட அனுமதியுள்ளது. தொழுகையை தண்ணீர் இல்லை என்று காரணம் காட்டி விடமுடியாது அங்கும் இஸ்லாம் இலகுபடுத்தி தயம்மும் முறையை வழங்கியுள்ளது, அத்துடன் பிரயாணம் சந்தர்ப்பத்தில் சுருக்கி மற்றும் சேர்த்துத் தொழுவதற்கும் அறவே நின்று தொழுவதற்கு வலிமையில்லாதவருக்கு இயன்றவாறு அடுத்தடுத்த முறைப்படி தொழுவதற்கும் இஸ்லாம் இலகுபடுத்தியுள்ளது.

ஆக உடலில் உயிர் இருக்கும் வரை புத்தியுள்ள காலமெல்லாம் தொழுகையை தவறாது முறையாக தொழும் கூட்டத்தில் வல்ல அல்லாஹ் அனைவரையும் சேர்த்தருள்வானாக!

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா
தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர்
தொழுகை இல்லாதவர் நிம்மதி இழந்தவர் 

Facebook like us

Author: admin