பெண் என்பவள் யார்?

  • 36
ஒரு கவிதையுடன் ஆரம்பம் செய்கிறேன்.

ஒரு ஆண்மகன் தகப்பனாய் மாறுவது
தாய்மை என்னும் பெண்மையினாலே.
காதலன் கணவனாய் மாறுவது
மனைவி என்னும் பெண்மையினாலே.

உயிர் தோழன் உயிர் தரும்
காதலனாய் மாறுவது
காதலி என்னும் பெண்மையினாலே.
நட்பின் முழுமையை உணர்த்துவது
தோழி என்னும் பெண்மையினாலே.

மழலையை ஈன்றெடுக்க
மரண எல்லை வரை செல்லும் பெண்மையை
மனித சதையிற்காக சித்திரவதை
செய்பவர்கள் ஆண்கள் அல்ல

மனிதனை உணவாய் உண்ணும்
அகோராக்களை காட்டிலும்
பெரும் அரக்கர்கள்
பெண்கள் இப்பிரபஞ்சத்தை
பிராகாசிக்க வந்த தேவதைகள்

இம் மாபெரும் பெண்மைக்கு
ஒரு பாதுகாவலனாய் இருப்போம்
பெண்மை என்னும் பெரும்
சக்திக்கு சமர்ப்பனம்
(இது என்னுடைய கவிதை அல்ல)

பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் நிலை

இயற்கையின் படைப்பில், மனித சமுதாயம் என்பது ஆண், பெண் என்று இருவரும் சேர்ந்து உள்ள ஒரு சமுதாய அமைப்பு ஆகும். பிறப்பு வீதம், இறப்பு வீதம் இரண்டிலும் ஆண், பெண் ஒரேயளவில் உள்ளது. இவர்களின் உடல் அமைப்பைத் தவிர வேறு எந்த விதத்திலும் வேறுபாடுகள் இல்லை. ஆனால் குழந்தை பிறந்து பின், வளரும் காலங்களில் பல வழிகளில் பல காரணமாக இன வேறுபாடு பேணப்படுகின்றன. இதனால் பெண்களின் உரிமைகள், கல்வி, உணவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவை மறுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.

பெண்களின் உரிமைகள்

அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.

பெண்களின் உரிமைகள் என்பது அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது. அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்களிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட ஜக்கிய நாடுகளின் அவை மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சாசனம் இயற்றப்பட்டது.

இவள் தான் பெண்.

ஒரு பெண் விரைவாக எந்த ஆணையும் நேசிப்பதில்லை. அவளொரு ஆணை நேசிக்கத் தொடங்கினால் முழு வாழ்வும் அவனோடு தான் பயணிக்க வேண்டுமென்று உறுதி கொள்வாள். அப்படிப் பயணிப்பதில் தான் அவளுக்கு உண்மையான சந்தோசம் இருக்கின்றது.

எந்தப் பெண்ணும் தான் நேசிக்கும் ஆண் பிரிதோரு பெண்ணோடு தன்னை விட உரிமை பாராட்டுவதை அவள் ஒரு போதும் விரும்புவதில்லை. இதனை ஆண்களின் பாஷையில் சொன்னால் பொறாமை என்பார்கள். பெண்களின் பாஷையில் சொன்னால் அவனிடத்தில் உரிமை கோருபவள் நானாக மட்டுமே இருக்க வேண்டும். “அவன் எனக்கு மட்டுமே” என்று திமிராக தனக்குத் தானே எச்சரித்துக் கொள்வாள்.

பெண்கள் அப்படித்தான் ஆண்கள் மீதான தீராத காதல் அவளுக்குள் இருக்கிறது. அவனை காதலனாக, கணவனாக, தந்தையாகவும் அவனது அனைத்து நேசமும் அவனாக மாத்திரமே இருக்கும். அவளது காதல் தேசத்தில் அவன் மாத்திரமே அவள் அன்பின் ஆட்ச்சிக்கு உட்ப்பட்டவன். அவளது உலகில் அவன் தவிர வேறுயாருமில்லை.

இதனை உணர்ந்து கொண்ட ஆண்மகன் அவளது எதிர்ப்பார்ப்பின் பிரகாரமாகிறான். உத்தம புருஷன் ஆகி விடுகிறான். இதனைப் புரியாத ஆணோ அவளை பைத்தியம், என்றும் பொறாமைப் பிடித்தவள் என்றும் திட்டி விடுகிறான். இவன் மீதான அவளது பைத்தியக்காரத்தனமான காதலை மறுக்கின்றான். அவன் மீதான அன்பைப் பொழியும் பெண்ணைத் திட்டி விலகும் ஆணுக்குப் புரிவதில்லை. அந்தப் பெண்ணின் அன்பும் அதன் ஆழமும் அதன் பரிணாமத்தைக் கூட அவன் ரசிக்கவோ ஏன் சற்று நேரமொதுக்கி சிந்திக்கவோ முனையவே மாட்டான். அவர்கள் அப்படித்தான் என்றோ ஒரு நாள் கைசேதப்படும். மடையர்கள்.

சில நேரம் பெண் தனக்குள்ளே “ஏன் உனக்கு மட்டும் என் அன்பின் ஆழம் புரியாமலே போய் விட்டது?” என்னையும் உன்னிடமிருந்து பிரித்து வைத்து விட்டாய். தனிமையில் உலர விட்டாய்.

உண்மையாக ஒரு ஆணை நேசிக்கும் பெண்ணோ கயவர்களோடு சகவாசம் வைப்பதில்லை. ஏன் அவள் மாற்றானை மனதில் குடியமர்த்தி விட முனைய மாட்டாள். சொல்லப் போனால் கற்பனை கூட பண்ணி விட மாட்டாள். அவளது இலட்சியமெல்லாம் தனக்கான ஆணோடு இங்கும் மறு உலகிலும் துணையாக வாழ்வதே.

ஒரு அபூதர்தாவில் உம்மு தர்தாக் கனவென்பது சாலிஹான ஒரு மனைவியின் அடையாளம். என்னால் கதீஜாவை மறக்க முடியாது என்பதெல்லாம் ஒரு நபியோடு ஒரு பெண் வாழ்ந்த அந்த மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வின் வெளிப்பாடு. காதல் என்பது ஆன்மாக்களுக்கிடையிலான உறவு. அதனை உணர்ந்த ஆணும், பெண்ணும் வெற்றியடைகின்றார்கள். தன் மனைவியை ஒரு ஆயிஷா போன்ற குழந்தையாக கனவு கண்டு வழி நடத்துகிறான். அதனை அறியாத ஆணோ உலக இன்பத்தோடு ஒத்துப் போகும் பெண்ணோடு மாண்டு விடுகிறான்.

காதல் தேசத்தில் பெண்ணின் கனவுகள் பல. ஆனாலும் அவள் அவன் மீது கொண்ட காதலுக்காக எதையும் இழக்கவும் ஈமானியப் பாதைக்காக எதையும் பொறுக்கவும் கற்றுக் கொண்டவள். எல்லா ஆண்களுக்கும் கிடைப்பதில்லை ஒரு கதீஜாவோ உம்மு தர்தாவோ. அதனை அடைந்தவர்கள் பாக்கியசாலிகள்.

இப்படிப்பட்ட பெண்கள் தனக்கான ஒருத்தன் அவனோடு தான் அவள் பயணம் மறுமை வரை என்ற தூய எண்ணத்தோடு வாழக் கடமைப்பபட்டவள்.

Nafees Naleer

ஒரு கவிதையுடன் ஆரம்பம் செய்கிறேன். ஒரு ஆண்மகன் தகப்பனாய் மாறுவது தாய்மை என்னும் பெண்மையினாலே. காதலன் கணவனாய் மாறுவது மனைவி என்னும் பெண்மையினாலே. உயிர் தோழன் உயிர் தரும் காதலனாய் மாறுவது காதலி என்னும்…

ஒரு கவிதையுடன் ஆரம்பம் செய்கிறேன். ஒரு ஆண்மகன் தகப்பனாய் மாறுவது தாய்மை என்னும் பெண்மையினாலே. காதலன் கணவனாய் மாறுவது மனைவி என்னும் பெண்மையினாலே. உயிர் தோழன் உயிர் தரும் காதலனாய் மாறுவது காதலி என்னும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *