18 முடிஞ்சே
கலியாணம் பேசலயா
கரச்சல் தாங்காமல்
தரகரிடம் போனது போட்டோ.

ஒரு எடம் வந்து ஈக்கிது
தொடர்ந்தது
பொண் பார்த்தல்

காரில் வந்தனர்
கட்டயாம் புள்ள
கலர் போதாதாம்.

சின்ன வீடாம்
சீதனம் வேண்டுமாம்.

மஹருக்கு எடுக்குராங்கலாம் ஆனா
மாநிறமாம்.

பண்பான புள்ளயாம் ஆனா
பணம் இல்லையாம்.

நெறம் ஈக்கிதாம் ஆனா
நெறய படிசாம்.

வடிவா ஈக்கிதாம் ஆனா
வயசு கூடயாம்.

எல்லாம் சரியாம் ஆனா
ஊர் சரியில்லையாம்.

புள்ள நல்லமாம் ஆனா
படிச்சி இல்லையாம்.

குடும்பம் நல்லமாம் ஆனா
புள்ள கொஞ்சம் கொழுதாம்.

கல்யாண பேச்சு
கதைகள் ஆச்சு.
பெண் என்ன சந்தை
பொருளா சாக்கு சொல்ல?
என்று மாறும் எம் சமூகம்!

(அனைவரையும் குறிப்பிடவில்லை)

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help