இருட்டறைக்குள் வெளிச்சத்தை தேடி

Advertisements

இயற்கை அழகு
எழில் கொஞ்சும் பேரழகு
மத்திய மலை நாட்டினழகு

பச்சைப் பசேலெனும் தோட்டம்
சலசலவெனும் நீரோடை
இதயத்தை இதமாக்கிடும்
கண்கவர் காட்சிகள்

தோட்டத் தொழிலாளர் குடும்பம்
வறுமை தலைகாட்டிடும்
தங்கையர் ஐவருக்கும்
தலை நங்கையாகப் பிறந்தாள்

மூத்த பிள்ளையவள்
வெளிநாட்டின் கதா நாயகியவள்
வீட்டின் செல்லப் பிள்ளையவள்
‘செல்லம்மா’ தானவள்

வறுமை வாட்டி வதைக்க
எதிர்காலம் கண்முன் நிழலாட
வெளிச்சத்தைத் தேடி
பறந்தாள் வெளிநாட்டிற்கு

ஆகாய விமானம்
விண்ணிலே இறகுவிரிக்க
அடங்காத் துயரம்
காற்றிலே சங்கமிக்க

அடைந்தாள் மாளிகையை
சேர்ந்தாள் பணிப்பெண்ணாக
இயங்கினாள் இயந்திரமாக
மறந்தாள் நினைவலைகளை

காலச்சக்கரம் வெருண்டோடியது
வாழ்க்கை விசிறியோ சுழன்றோடியது

நிம்மதியாய் அமரநேரமில்லை
நிமிடமொன்றும் ஓய்வில்லை
ஒட்டி உறவாடிட உறவுகளில்லை
கொஞ்சிக் குலாவிட உணர்வுகளில்லை

பணத்திமிர் ஏழ்மைக் குணத்தை
வேறோடு வேறாக பிரித்துக்காட்ட

ஒதுக்கப்பட்டாள் தனிமரமாக
நிழல்கள் காணா
நிம்மதியற்ற வாழ்வில் மூழ்கி
அலைந்தாள் வெளிச்சத்தை தேடி

புயலோடு புயலாக
இடியோடு இடியாக
‘சோ’ வென்று அழுதது
கறுத்த வானம்

வானத்து மழைத்துளி
தரணியை பதம்பார்க்க
செல்லம்மாவின் உள்ளமோ

இருட்டறைக்குள் வெளிச்சத்தை தேடி
சுழல்வண்டி நீர்த்துமியுடன்
பின்னோக்கி நகர்ந்தது
அவள் எண்ண அலைகளும்

பாசமாறியா பிஞ்சுமனம்
துள்ளியது இளமைப் பருவத்தோடு

வாழ்ந்தோம் உரிமையோடு
உறங்கினோம் நிம்மதியாய்
லயத்து காம்பராவிலே

இடி முழங்கியது
அவள் இதயத்திலும்
பேராவலுடன் வந்தவள்
அவலநிலையை எண்ணினாள்

எதிர்காலக் கனவுகள்
கானல் நீராக
மழை வெள்ளத்துடன்
கரைந்தே ஓடியது

வாயிழந்த சிறகொடிந்த
கூண்டுப்பறவை செல்லம்மா

இடித்துச் சென்றதே
இடி அவள் உயிரையும்
இருட்டறைக்குள்
வெளிச்சத்தைத் தேடியே.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

%d bloggers like this: