மஷுராவின் மடியில்

  • 17

இறைவன் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கை மறுமையை மரணத்தை நோக்கியே நகர்ந்தபடி உள்ளது. அதற்கிடைப்பட்ட வாழ்வை அடுத்தவர் மனம் கோணாது வாழத்தான் இறைவன் வழிகாட்டல்களை வேதத்தினூடாகவும் நபியின் போதனை ஊடாகவும் தெளிவுபடுத்துகின்றான்.

என்னதான் நமக்கு நாம் நல்லவர்களாக இருந்தாலும் ஒருசிலருக்கு கெட்டவர்களாக மாறியிருப்போம்.அது நாம் தெரிந்து செய்த தவறாக இருக்கலாம். அல்லது புரிதலில் தடங்கள் இருந்திருக்கலாம். எவ்வாறெனினும் மஷுரா என்ற ஒன்றை விட்டு விலகி தன் கால் போன போக்கில் தன்னிச்சையாக நடந்தேர இன்றைய காலம் நம்மை மாற்றி இருக்கிறது.

சமூகத்தின் ஆணிவேர் குடும்பம். குடும்பத்தின் கட்டமைப்பு சிறந்து விளங்கினால் சமூக பிணைப்பு அறுபடாது. நிதியும், நீதியும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சிறந்து விளங்கின், ஏமாற்றும் பண்பு வெளியிலும் வராது.

கணவனும் மனைவியும், பிள்ளைகளும் பெற்றோர்களும், மருமகளும் மாமா மாமியாரும் என மனம் விட்டுப் பேசிய காலம் மலையேறிப் போயிடிச்சு. அன்றைய தினம் நடந்த விடயங்களை அந்த நொடியில் பேசாவிடினும் தூங்குவதற்கு முன்பாவது எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசலாம்.

அத்தோடு அடுத்த நாள் ஒவ்வொருவரும் என்ன செய்ய போகின்றோம் என்பது ஓரளவாவது ஊகித்து இருப்போம். அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதெல்லாம் செவ்வனே நடந்தேறினால் குடும்பம் சீர்பெறும் என்று சிந்தித்து செயலாற்றினால் போதும். இது எங்க? அடுத்த நாள் எங்கே போகின்றனர் எத்தனை மணிக்கு வீட்டை அடைகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. காரணம் மஷுரா இல்லை.

இதே நிலை இரண்டு நாள் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்தால் சந்தேகத்தின் புள்ளி கறுமையாய் வைக்கப்படும் இதயத்தின் ஒரு ஓரமாய்.அன்றிலிருந்து தொடங்கும் ஷைத்தானின் சகலகலா வித்தைகள்.

இதன் அடுத்த கட்டம் விவாகரத்தை நோக்கியதாக இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத தனது விடயங்களை நாம் சம்பந்தப்பட்ட விடயங்களை இன்னொருவர் ஊடாக கேட்டறிகின்ற எந்தவொரு ஆணும் சரி பெண்ணும் சரி குடும்ப வாழ்வில் திருப்தி காணமாட்டாள். இதுவே விவாகரத்து வரை இழுத்துச் செல்லும். இதன் வளர்ச்சிப்படியில் அல்லல்படுவது சிலவேளைகளில் குழந்தைகளும் உறவினர்களுமே. இலங்கையில் அன்னளவாக ஒரு நாளைக்கு 400 பேருக்கு மேல் விவாகரத்து பெறுவதாக புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.

”அஷ்ஷூரா” (கலந்தாலோசிப்பது-42) என்ற பெயரிலான தனியான ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில் உள்ளது. அந்த அத்தியாயத்திலுள்ள, ”அத்துடன் அவர்கள் தமக்கு மத்தியில் கலந்தாலோசித்துக் கொள்வர்.” (42:38)எனும் வசனம் கலந்தாலோசிப்பது பற்றி குறிப்பிடுகின்றது.

குடும்பம் தாண்டி சென்று சற்று சிந்திப்போமேயானால் அங்கு ஒருவருடன் மனஸ்தாபம் என்றால் அதனை அவரோடு பேசுவதை விட்டுவிட்டு பல பேரோடு அவரை பற்றி பேசுகின்றோம். இழிவு படுத்துகின்றோம். நம்மீதும் பிழையிருக்கலாமென சற்றும் பொறுமை கொள்வதில்லை. இதன் அடித்தளம் குடும்பம் என்ற நிலையில் தோன்றியது என்றால் பிழையல்ல. பிறகு அவதூறாகி அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகி விடுகின்றோம். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மஷுராவை கைக்கொள்ளுங்கள்.

அடுப்பங்கரை தொட்டு
அரசியல் வரை
ஆலோசனை ஆதியாய்
அடியெடுத்தால்
மாற்றங்கள்
மனம் நெகிழச் செய்யும்.

மஷுராவின் மடியில்
தவழும் குழந்தையானால்
தவறுகள் தவறியும்
தவறிழைக்காது

ஒற்றுமையை எனும்
ஒளி பெறுகிட இறைவன்
அருள் புரிவானாக!

கவிச்சாரல் சாரா

இறைவன் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கை மறுமையை மரணத்தை நோக்கியே நகர்ந்தபடி உள்ளது. அதற்கிடைப்பட்ட வாழ்வை அடுத்தவர் மனம் கோணாது வாழத்தான் இறைவன் வழிகாட்டல்களை வேதத்தினூடாகவும் நபியின் போதனை ஊடாகவும் தெளிவுபடுத்துகின்றான். என்னதான் நமக்கு…

இறைவன் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கை மறுமையை மரணத்தை நோக்கியே நகர்ந்தபடி உள்ளது. அதற்கிடைப்பட்ட வாழ்வை அடுத்தவர் மனம் கோணாது வாழத்தான் இறைவன் வழிகாட்டல்களை வேதத்தினூடாகவும் நபியின் போதனை ஊடாகவும் தெளிவுபடுத்துகின்றான். என்னதான் நமக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *