அழகிய அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள்!

பிள்ளைகளுக்கு பெயர்கள் சூட்டும் போது அழகிய அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள், மொழிவதற்கு இலகு அல்லது modern அல்லது internet இல் நல்ல அர்த்தத்தில் இருந்தது எனும் பெயரில் தவறான கருத்துள்ள பெயர்களை சூட்டாதீர்கள்.

எடுத்துக்காட்டாக நடைமுறையிலுள்ள சில தவறான பெயர்கள்

  1. பர்ஜானா- இரு மர்மஸ்தானங்கள்
  2. மஸ்(z)னா: விபச்சார விடுதி
  3. ஸா(z)னியா: விபச்சாரி
  4. மிக்னஸா: தும்புக்கட்டை
  5. மஸ்பலா: குப்பைத் தொட்டி
  6. ஆஸியா: பாவி

ஆக இத்தகைய தவறான கருத்துக்களைத் தவிர்த்து நல்ல அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுவது சாலச்சிறந்ததாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீய அர்த்தமுள்ள பெயர்களை மாற்றியுள்ளார்கள், அத்துடன் அவ்வாறான பெயர்களை மாற்றுமாறு ஸஹாபாக்களை வேண்டியுமுள்ளார்கள்.

பாவிகள், காபிர்கள், பட நடிகை நடிகர்கள், மார்க்கத்திற்கு முரணான செயற்களில் ஈடுபடும் துறைசார் வீரர்கள், விற்பண்ணர்கள், அதன் அறிஞர்கள், தீய செயற்களில் பிரபல்யமானவர்கள் போன்றவர்களது பெயர்களை வைப்பது மார்க்கம் தடைசெய்ததாகும்.

“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான்” அத்துடன் அல்லாஹ்வுடைய அஸ்மாஉல் ஹுஸ்னாவிலிருந்து பெயர் சூட்டுவதாக இருப்பின் “அப்து” அடிமை எனும் அர்த்த்தமுள்ள பதத்தை இணைப்பது பொருத்தமாகும்.

“மறுமையில் உங்களது பெயர்கள் மற்றும் உங்களது தந்தைகளது பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவீர்கள், ஆதலால் உங்களது பெயர்களை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்” எனும் நபியவர்களது வழிகாட்டல் மற்றும் மீற்குறித்த அவர்களது செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டு பிள்ளைகளுக்கு அழகிய அர்த்தமுள்ள பெயர்களை வைக்க முயல்வோம்.

Azhan Haneefa
Author: admin