தேவாவின் ஆவியா அது?

  • 10

யார் நீ
காட்சி : 01
களம் : பெட் ரூம் (ரமனியின் வீட்டின் அறைப்பகுதி)
கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், தேவா (தேவா மர்மமான ஒரு நபர்)

(மாலை நேரமும் கலிந்து இரவின் இருள் இலேசாக வானிலும், மண்ணிலும் கலக்கப் போகும் நொடியில். அதோ அலருகிறாள் ரமனி.)

ரமனி: ஐய்யோ! கடவுளே மறுபடியும் நீ வந்நுட்டியா? உண்மய சொல்லு யார் நீ? யே என்ன தொல்ல பண்ணுற? கடவுளே எதற்காக இந்த உருவத்த என் கண்ணுல காட்டுற?

கெளஷல்யா: கடவுளே கேக்குதா அந்தா மறுபடியும் ரமனி அந்த உருவத்தக் கண்டு கூச்சலிட ஆரம்பிச்சுட்டாள். அவள காப்பாத்த யாருமே இல்லையா???

ரஞ்சித்: ஐய்யோ! என் ரமனி! என்ன அத்த பாத்துட்டு இருக்கீங்க?? இங்க இருந்து சொல்லிட்டா மட்டும் அவ கத்தல் நிண்ணுடுமா?

(என கோபப்பட்டபடியே மேல் மாடியை நோக்கி ரமனியின் அறையை நோக்கி விரைகிறான்.) (அறையின் ஒரு மூளையில் பதுங்கிக் கிடந்த ரமனியைப் பார்த்து)

ரஞ்சித்: என் ரமனி. தங்கமே ஒனக்கு என்ன ஆச்சு. ரெண்டு மூனு நாளா தானே நிம்மதியா இருந்த. மறுபடியும் என்னடா ஒனக்கு??

(எனக்கூறிய படியே கட்டியைணத்துக் கொண்டான்)

ரமனி: நான் எப்படி சொல்றது? மறுபடியும் அந்த கறுப்புக் கோட் போட்ட அதே ஆலு வந்திருக்காங்க. இங்க தான் இருப்பான் ஒங்கள கண்டதும் மர்மமாயிட்டான். என் கூட மட்டும் பேசுறான். எனக்கு என்ன ஆச்சிண்ணு எனக்கே புரியலங்க. கடவுளே பைத்தியமே புடிச்சிரும் போல இருக்கே.

கெளஷல்யா: இது என்னடி புதுக் குழப்பமா இருக்கு. எத்தன இடத்துக்கு மாறியாச்சு? எங்க போனாலும் உனக்கு அந்த மனுசனா
வந்து அநியாயம் பண்ணனும்?கடவுளே.

ரஞ்சித் : அத்த எனக்குன்னா ஒன்னுமே புரியல. யே ரமனிய எவன் தான் இப்படி பண்ணுறானோ?.ஒரு வேல ஆவியா கூட இருக்குமோனு நெனக்கிது. கடவுளே என்னோட ரமனிய காப்பாத்து!

ரமனி: இல்லங்க அது ஆவியாக இருந்துச்சுன்னா யே என் பாசத்துக்காக ஏங்கனும்? ரமனி எதுக்காக என்ன விட்டுப்போன? யே என்ன மறந்தன்னு கேக்கனும்? உன் பாசம் இல்லாம என்னால வாழ முடியாது நித்தியானு எதுக்காக சொல்லனும்? நித்தியான்னு எனக்கு சொல்றது என் தேவா மட்டும் தான். என் தேவா எங்க இருக்காறோ?

(என அழுத படியே முனங்க த் தொடங்கி விட்டாள்)

ரஞ்சித்: அடடா! இவன் தானா இந்த வேல பாக்குறது? இருந்தாலும் என் அண்ணனுக்கு காதல் உணர்ச்சி கொஞ்சம் கூடுதலா தான் இருக்கு! இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்..
(என மனதால் முனங்கிய படியே அழுது கொண்டிருந்த
ரமனியை நோக்கி சென்றான்)

கெளஷல்யா: என்னடி சொல்ற தேவா! ஒரு வேல தேவாவோட ஆவிதான் ஒன்ன இப்படிப் பண்ணுதா? கடவுளே எனக்கு ஒன்னுமே புரியல.

ரஞ்சித்: ஆவியாவது கீவியாவது. சும்மா இருங்க அத்த! இது ரமனியோட மன பிரம்மை தான். இதுக்கு எல்லாம் நல்ல டாக்டரா நாம பாத்துக்கலாம். அப்ப இது எல்லாம் இல்லாம போயிடும்!

ரமனி: என்னங்க என்ன பைத்தியம்னு சொல்ல வாரிங்களா?

ரஞ்சித்: இல்லம்மா. நீ இப்ப டென்ஷனா இருக்க ஒனக்கு சொன்னா புரியாது!


தேவா: என் கண்மனியே இது மிச்சம் காலம் நிலைக்காது. என் மனைவி கண்ணு கலங்கும் போது நா பக்கததுல இல்லயே! எப்படி நா எல்லா உண்மயையும் வெளில சொல்லுறது? செத்தவ எப்படி உயிரோடு வருவான்னு நினைப்பாங்களே. ஆனாலும் யென்னோட நித்தியாவ நான் தானே கைதாங்கணும்!

(என மனம் கலங்கி ஜன்னல் சுவருக்கு அருகே இருந்து முனங்கி மெளனமாய் அழுதபடியே புறப்படத் தொடங்கினான் தேவா)

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

யார் நீ காட்சி : 01 களம் : பெட் ரூம் (ரமனியின் வீட்டின் அறைப்பகுதி) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், தேவா (தேவா மர்மமான ஒரு நபர்) (மாலை நேரமும் கலிந்து…

யார் நீ காட்சி : 01 களம் : பெட் ரூம் (ரமனியின் வீட்டின் அறைப்பகுதி) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், தேவா (தேவா மர்மமான ஒரு நபர்) (மாலை நேரமும் கலிந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *