பணம் என்றால் பிணமும்
வாய் திறக்குமாம் அன்று
பிணத்தை விற்று
பணமாக்குகின்றனர் இன்று.
குணமிழந்து குற்றமிழைத்து
சுற்றம் துறந்து சுய புத்தி அற்று
சுயனலமாக சுற்றுகின்றனர்
இன்றைய பணமனிதர்கள்.
மனிதத்தின் மகத்துவம் அறியாமல்
பணத்தின் பின்னே படையெடுக்கின்றனர்
படித்தவன் முதல் பாமரன் வரை.
பணத்தால் பதவி பெற்று
பறை முழங்குகின்றனர் பலர்
சில்லறை பேச்சுக்களால்
சிறைப்படுகின்றனர் சிலர்.
பணமுள்ளவன் பாராளுகின்றான்
பணமற்றவன் பிணமாகின்றான் பாரினிலே.