நிஜத்தின் நிழல்

Advertisements

திருமண ஏற்பாடு
திடும் திடுமென
நகர்ந்தது.

பெண்ணும் பார்த்தாயிற்று
மணமகன் சகிதம்
அடையாளம்
அணிந்தாயிற்று
அணிகலனாய்.

நிகாஹ் நிகழ்ந்தது
திடிரென
ஜன்னல் மின்னல் போல

முதலிரவே
மனைவி வயிற்று வலியால்
துடித்தாள்
துவண்டாள்.

அவள் பருமன் என்பதால்
இந்த பாவ ஜீவனுக்குப்
புரியவில்லை போலும் அது

வைத்திசாலை நோக்கி
வாகனம் விரைந்தது.
வைத்தியர் சொன்னார்
வாட்டில் சேர்க்க
வாரிப்போட்டது
இவனுக்கு,

காலையில் விரைந்தான்
தேநீருடன் பாலப்பமும்

அதிர்ச்சி தகவலால்
அறைந்து விட
வைத்திய மாதுவின்
சோபனச்செய்தி

வைகறையில்
மகவொன்று பிறந்ததாக.
சுகப் பிரசவம்
கவலை வேண்டாம் என

ரூபா ஆயிரத்தை நீட்ட
அகல மறைந்தாள்
ஆறுதலோடு வைத்திய மாது

வீடேகினான்
அதரப் பதற

பெண் பார்த்த உறவுகள்
பேதலித்து நிற்க
பொல்லாலும்
சொல்லாலும்
புரட்டியெடுத்தான்

பிரளயம் நடந்திட
பிள்ளையும்
பிறந்திட

பதிவு வைக்கத்தானே
பத்தாயிரம்
மகர்கொடுத்தான்!

ஆதலினால்
மண்ணம்பிட்டி சோதனைச்
சாவடி
நினைவிருக்கட்டுமே

இது ஓர் நிஜத்தின் நிழல் வடிவம்

ஓட்டமாவடி நளீம்

Leave a Reply

%d bloggers like this: