புரிதல் உடனான திருமண வாழ்க்கை

  • 12

இன்றைய காலச்சூழலில் திருமண வாழ்வியல் என்பது ஓர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றது , என்பது தான் உண்மையாகும். அதன் உள்ளடக்கம் மறைக்கப்பட்டு விட்டது. அதன் புனிதத்தன்மை கூட இன்றைய கால சூழலில் இல்லாமல் தான் உள்ளது. அந்த அளவு அதன் புனிதம் மாற்றப்பட்டு விட்டது. இதை எமது உள்ளம் ஏற்காமல் விட்டாலும் இது தான் யதார்த்தமாகும்.

அல் குர்ஆன், நபி மொழி, வாழ்க்கை வரலாறு என பலதும் சிறந்த முறையில் இதைப்பற்றிப்பேசி இருந்தும் ஏன் அதை நாம் ஏற்று நடக்காமல் இருக்கின்றோம் என்பதே எனது வினாவாக உள்ளது.

இவைகளை தாண்டிப் போய்தான் நாங்கள் இதைப்பற்றி பேச வோண்டுமா? என்ற வினாவும் என்னில் உள்ளது. எது எப்படி இருந்தாலும் ஒரு புரிதலுக்காக ஒரு திரைப்படத்தின் கதையை உங்கள் யோசனைக்காக முன் வைக்கின்றேன் .

நடிகர் அர்ஜுன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த “வேதம்” திரைப்படம் திருமணம் பற்றி மிக அழகாகவும், மிக ஆழமாகவும் பேசுகின்றது . அதன் கதை உள்ளடக்கம் நபிகளாரின் உன்னத வழிக்காட்டுதல்களை பின்பற்றத்தக்கவையாக காணப்படுகின்றது .

அறிமுகம்

வேதம் 2001 இல் வெளிவந்த இந்திய; தமிழ் மொழி; காதல்; நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அர்ஜுன் மற்றும் சாக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினீத், திவ்யா உன்னி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் இப்படத்தின் இயக்குநர். படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இந்த படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராக நடிகர் விஷால் பணியாற்றினார். அர்ஜுன் தனது நிறுவனமான ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்தார்.

கதைக்கரு

சஞ்சய் (வினீத்) மற்றும் அனிதா (திவ்யா உன்னி) ஆகியோர் கோயம்புத்தூரில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். ஆனால் விவாகரத்து பெறும் விளிம்பில் உள்ளனர். சஞ்சயின் நண்பரான விஜய் (அர்ஜுன்) நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்களை ஒன்றாக இணைக்க முடிவு செய்கிறார். விஜய் சஞ்சயின் வீட்டிற்குச்சென்று தம்பதியினருடன் சில வாரங்கள் தங்கியிருக்கிறார். அவர்களின் உரையாடல்களின் போது, விஜய் தனது மனைவி சீதா (சாக்ஷி), இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பற்றி விவரிக்கிறார். மெதுவாக, சஞ்சய் மற்றும் அனிதா ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, விஜய் மற்றும் சீதாவைப் போன்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இறுதியாக விஜய் சொன்ன கதைகள் அனைத்தும் அவரது கற்பனை மட்டுமே என்பது தெரியவருகிறது. அது சஞ்சய் மற்றும் அனிதாவை ஊக்குவிக்கும் என்று விஜய் கற்பனைக் கதையை கூறியுள்ளார். உண்மையில், விஜய் சீதாவை காதலித்து வந்தார். ஆனால் சீதா தற்செயலாக அவர்களது திருமணத்திற்கு முன்பே காலமானார். அதன்பின் விஜய் சீதாவின் நினைவுடன் வாழ்கிறார். இருப்பினும், சஞ்சய் மற்றும் அனிதா உண்மையை அறிந்து கொள்ளாமல் இருப்பதை அவர் உறுதி செய்கிறார். இறுதியில், சஞ்சய் மற்றும் அனிதா ஒன்றுபடுகிறார்கள். சஞ்சயின் பிரச்சினைகளைத் தீர்த்த திருப்தியுடன் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார்.

முழுக் கதையும் திருமண வாழ்வியல் பற்றிய மிக ஆழமான கதையாகும். வேதத்தில் அவர் திருமணத்தின் புனிதத்தன்மை பற்றியும் குடும்பத்தின் மகிமை பற்றியும் அதிகம் பேசுகிறார். அவர் சொல்ல வரும் செய்தி சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அதனால் இப்படம் முழுக்க போதனை திரைப்படமாக மாறுகிறது.

இதில் இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும் என நினைக்கிறேன்.

திருமணத்தின் புனிதத்தை விளங்கிக் கொள்ள இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்பதே இல்லை. இக் திரைப்படத்தில் “கொஞ்சி கொஞ்சி பேசி வரும்.” என்று ஒரு பாடல் வருகின்றது. அப்பாடலில் நிம்மதியான, சந்தோஷமான திருமண வாழ்க்கை கூறிய அனைத்து விடயங்களும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கொஞ்சி கொஞ்சி பேசிவரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூத்தூவுகிறோம். (2)

இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட
காரணம் இருக்கிறதே
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி
அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம்
சிந்தித்து பாருங்களே
சரிசமமாய் உள்ள தூண்களில் தானே
நிற்கும் கோபுரங்கள்
சந்தேகம் தான் தீயை வைக்கும்
நம்பிக்கை தான் தீபம் வைக்கும்
இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க

கொஞ்சி கொஞ்சி பேசிவரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூ தூவுகிறோம்…

அவரவர் எண்ணம் அவரவர்க்குண்டு
ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவுருக்கிடையில்
அவசியம் இருக்கட்டுமே
ஒருவருக்கு ஒருவர் பாசம் தந்து
நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொரு நாளும் ஒரு மூறையேனும்
ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டு தந்தால்
சொர்க்கம் உங்கள் வீட்டை கட்டும்
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூ பூக்கும்.

கொஞ்சி கொஞ்சி பேசிவரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
நெஞ்சில் என்றும் தங்கும் சந்தக்கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்
பூ தூவுகிறோம்.

வைரமுத்து மற்றும் பா. விஜய் பாடல் வரிகளை எழுத, இதற்கான இசையை வித்திசங்கர் மிக சிறப்பாக அமைத்துள்ள இந்த வேலையில், எஸ்.பீ.பாலசுப்பரமணியம் அவர்களின் குறல் மேலும் ஒரு உற்சாகத்தை கொடுத்ததுள்ளது.

அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக அமையப் பெற்றுள்ள அதே வேலை மிக சிறந்த குடும்ப திரைப்படமாகவும் இது காணப்படுகின்றது.

திருமணம் செய்த, திருமணம் செய்ய உள்ள அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படமாகவே இது உள்ளது .

அந்த வகையில் திருமணத்தின் பின்னரான வாழ்க்கை எதில் தங்கியுள்ளது, என்ற உண்மை தன்மையை நாம் அனைவரும் விளங்கி சிறப்பான ஒரு வாழ்க்கயை வாழ முடியும்.

NAFEES NALEER
Editor of Veyooham Media Center,
News Reporter Tele Tamil Media Unit.

இன்றைய காலச்சூழலில் திருமண வாழ்வியல் என்பது ஓர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றது , என்பது தான் உண்மையாகும். அதன் உள்ளடக்கம் மறைக்கப்பட்டு விட்டது. அதன் புனிதத்தன்மை கூட இன்றைய கால சூழலில் இல்லாமல்…

இன்றைய காலச்சூழலில் திருமண வாழ்வியல் என்பது ஓர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றது , என்பது தான் உண்மையாகும். அதன் உள்ளடக்கம் மறைக்கப்பட்டு விட்டது. அதன் புனிதத்தன்மை கூட இன்றைய கால சூழலில் இல்லாமல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *