உறவே நீ முந்திவிட்டாய்

Advertisements

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார்.

இறந்து விட்டார்.
இல்லை இல்லை
இழந்து விட்டோம்.

ஒரு மறை சுமந்த இதயத்தை
ஒரு ஆளுமையை
ஒரு அறிஞனை
ஒரு சேவையாளனை
ஒரு உதவியாளனை
ஒரு அறிவிப்பாளனை
ஒரு நகைச்சுவையாளனை
ஒரு ஆலோசகனை
ஒரு நண்பனை
ஒரு தியாகியை
ஒரு கலைஞனை
ஒரு சகோதரனை
ஒரு நல்ல உறவை.

ஒரு கண்குளிர்ச்சி
காணமல் போய்விட்டது
காலம் முடிந்துவிட்டதென்று.

குணத்தில் சிறந்தவன்
மனத்தில் அதி உயர்தவன்
மண்ணரையை தன்னறையாய்
மாற்றிக்கொண்டான்.

இழந்து விட்டோம்
ஒட்டுமொத்தமாகவே
தொலைத்து விட்டோம்
ஒரு பிறவிப் புன்னகையை.

ஒரு அழகுக்கு அழகென்றே பெயர்
அகத்திலும் அழகு
அந்த முகத்திலும் அழகு
இழந்து விட்டோம் ஒரு அழகோவியத்தை

படைத்தவன் தந்து வைத்த கடனை
காலம் கழிய
மீளப் பெற்றுவிட்டான்.

அஸானா அக்பர்

Leave a Reply

%d bloggers like this: