விடையளித்தான் றப்பு

  • 10

ஆயிஷா பிரமல்யமான வியாபாரி ஒருவரையே திருமணம் செய்து நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். கணவர் நேர்மையானவராயினும் கஞ்ஞத்தனணுடையவர், சொத்துகளில் ஆசைமிக்கவர். எனவே ஆயிஷாவின் தந்தையிடம் மேலும் சொத்துக்களை தரும்படி கேட்டவேலையில் சில சிக்கல்களினால் ஆயிஷாவை, மற்றும் பிள்ளைகளை அவளுடைய குடுப்பத்தாரோடு இணையவிடுவதில்லை. அவள் அதனை எண்ணி கலங்கிப்போவாள். நான்கு பிள்ளைகளுக்காக வாழ்வோம் என்ற எண்ணத்தில் வாழ்நாளை கழிக்கிறாள்.

இவ்வாறாக காலச் சக்கரம் சுழல்கிறது. பிள்ளைகளும் வளர்ந்து ஆளாகிவிட்டனர். அவளது ஒரு பிள்ளை ஊணமானவன, ஆனால் அதிலும் குறைக்காணாமல் மனம் தளராமல் இறைவன் வழங்கிய அருளை நன்கு பராமறித்தாள்.

ஆஷிக் தன் குடும்பத்திற்கு மிகவும் சிக்கனமாகவே செலவழித்து வந்தான். அவளுக்கு எதையும் தாராளமாக அணுபவிக்க விடவில்லை. பிள்ளைகளும் தாயுடனே ஒட்டி உறவாடினர்.

“ஆயிஷா இதுல மீன், மரக்கறிகள் இரிக்கி அளவாக சமைத்துட்டு மீதிய எடுத்துட்டு வைங்க என்றான். சரி நேரத்தோடு வாங்க என்று வழியனுப்பினாள்”

கணவனைப்பற்றி எந்த கட்டத்திலும் குறை காணவே மாட்டாள். அனைவருடனும் அந்நியொன்னியமாகவே நடந்துக்கொள்வாள். மறைவாக பிறருக்கு உதவிகளையும் செய்வாள்.

“என்ன சமையல் முடிந்ததா?”

என்றவாறு உள்ளே வந்தான். உணவு மேசையில் எல்லாம் வைத்து பரிமாறினாள். நீ சாப்பிட்டியா என்று ஆயிஷாவிடம் அவன் கேட்டதே இல்லை. ஆயிஷாவும் அதை பொருட்படுத்தவும் மாட்டாள். ஆஷிக் உண்ட பின்பே பிள்ளைகளுக்கு உணவு வழங்குவாள்.

“ஓம். பிள்ளைகளா வாங்களேன் சாப்பிட என்றதும்“ நாள் வரும் ஒரு சகனில் உண்டனர். எனினும் தாய் உண்ணவில்லை. ஏனெனில் சாப்பாடு அளவோடு சமைக்க வேண்டும் என்பதினால் அவள் உண்ணுவது இல்லை. இவ்வாறு எத்தனையோ நாட்களை கடத்தினால் சற்று குடற்புண்ணும் வந்துவிட்டது.

“ஸைனப் கிளாஸ் இரிக்கே அவசரமாகக் போங்க“ என்று மகளை வகுப்புக்கு அனுப்பி விட்டு, மற்ற இருவரையும் பள்ளிக்கு அனுப்பினாள். பானையில் எஞ்சியிருந்த சோற்றை கறிசட்டியில் பிரட்டி உணவை உண்டு விட்டு ஊணமுற்றவனை நீராட்டி மருந்தும் வழங்கி உறங்கவிட்டாள். பின் வழமைப்போல வேளைகளை செய்யத் துவங்கினாள்.

அவ்வேலை ஆஷிக் வந்து.

“ஆயிஷா வாப்பாட்ட இருக்கிர இரண்டு கடையும் உனக்கு தாரண்டாரே கேட்டியா?”

“என்ன கடையா? அத என்னால கேட்க ஏலாது.” என்றாள்.

”அப்போ உன் ட வலவெல்லாம் என்ட பெயருக்கு மாத்து” என்று எறிந்து விழுந்தான்.

“என்னப்பா? என்ன நடந்த? என்றால் மெதுவாக, அது பொம்புல புள்ள இரண்டுக்கும் தான் எழுதனும்” என்றாள்.

“என்ன என்னையே மீறி நடக்கப் போரியா என்று ஓங்கி வயிற்றில் உததை்தான், அப்படியே ஆயிஷா கீழே சுருண்டு வீழ்ந்தாள்”

ஆஷிக் கண்டுக்கொள்ளாமல் விரு விருப்பாக நடையைக்கட்டினாள் சற்று நேரத்தில் தேமித்தேமி அழுதவளாய், இறைவனிடம் மன்றாடினாள்.

“யாரப்பே! எப்போது எனக்கு விடையளிப்பாய்? கணவனுக்காய் உறவைத்துறந்து, அவரது பிள்ளைகளையும் ஸாலிஹாக்கி, அவருடைய உடைமைகளையும் பாதுகாத்த என்னை இருபது வருடமாகவே என் கணவர் புரியவில்லையே! அவருடைய உள்ளத்தில் நற்குணத்தை விதைப்பாயாக! உன்விடயத்தில் சரியாக நடக்கும் என் கணவர் உன்படைப்பினங்களுடன் மிகவும் கடினமாக இருக்கிறாரே! ரப்பே நீயே என்குடுப்பத்திற்கு அருள் செய்ய வேண்டும், நான் வாழ்வது நலவாக இருந்தால் வாழவை. இல்லாவிட்டால் இப்போலி உலகில் பாவம் செய்யாமல் உன்பக்கம் என்னை அழைத்து விடு”

என மன்றாடி விட்டு கண்களை துடைத்துக்கொண்டு பிள்ளைகளது வருகைக்காக காத்திருந்தாள்
ஆஷிக் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்து சேர்தான். இறைவனிடம் ஆயிஷாவுக்கு விடை கிடைக்கிறது அதுதான் உலகை உலுக்கிய “கொரோனா”

“ஆஷிக் சத்தமாக ஆயிஷா ஏதோ தொற்று நோய் பரவுதாம், அவசரமாக தேவையான சாமான்கள எழுதுங்க என்றான்”

ஏனெனில் ஆஷிக் மூவேளையும் வித விதமாய் உண்பவன். எனவே ஹோட்டலில் குடும்பத்தை விட்டு விட்டு உண்ட ஆஷிக்கு மிகவும் கஷ்டம்தான். எனவே அவன் பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரன் என்பதினால் எந்தக் கவலையும் இருக்கவில்லை.

ஆயிஷா பயந்து சில பொருட்களை மட்டும் எழுதினாள் ஆஷிக் தனது மகனையும் அழைத்துக்கொண்டு வகைவகையான அனைத்து உணவுபண்டங்களையும் குவித்தார். குளிர்சாதணப்பெட்டி நிரம்பி வலிந்தது. ஆயிஷாவுக்கு பேரதிர்ச்சி. அடுத்த நாள் இருவாரமாக லொக் டவுன், எனவே ஆஷிக் வீட்டோடு அடைப்பட்டான்.

அன்றுதான் ஆயிஷாவின் அனைத்துப் பணிவிடைகளும் நேரடியாகப்பார்க்கிறான். ஊனமுற்றவனின் குழப்படிகளுடன் மனம்சளிக்காமல் கணவன் விருப்பத்திற்கேற்ப உணவுகளை செய்து பரிமாறினாள். மனம் குறுகுறுத்து. எனவே அவனும் பிள்ளைகளது கல்வி விடயத்தை வீட்டிலிருந்தே கவனித்தான்.

அத்தோடு ரமழானும் வந்தது நிறைய உணவுபொதிகளும் கிடைத்தது. அவளது குடும்பமும் நிறைய உதவிகளை செய்தனர்

“ஆயிஷா நிறைய சாமான்கள் இரிக்கே, சுபைதா தாத்தாக்கும் கொஞ்சம் குடுக்கலாமே, என்றான்.”

“ஓம் நானும் அத நினைத்தேன் பாவம் பிள்ளைக்குட்டி காரி என்றாள். அவளுக்கும் கொண்டு போய்குடுத்தாள்”

“சுபைதாத்தா ஏதும் தேவபட்டா கேளுங்க இவரு எல்லாம் கொண்டு வந்து தந்திருக்கிறாரு என்றாள்.

“அல்ஹம்து லில்லாஹ்! ஆயிஷா ஆஷிக் மாரிட்டான் போலும்”

“ம் ம், அவருக்கு நல்லா சாப்பிடனுமே, அதுதான் என்றாள்”

“சரி எல்லாம் ஹைராகும் என்றாள் சுபைதா பெருமூச்சுடன்!!

“சரி போய்வாரேன் இன்று இரவு நோன்பும் வருது” என்று கூறியவளாய் விடைபெற்றாள்.

ஆயிஷா வீட்டை பெருக்கி சுத்தப்படுத்தி ரமழானுக்காய் ஆயத்த மாகினாள் ஆஷிக் பிள்ளைகளுடன் இணைந்து முற்றத்தை சுத்தம் செய்தான். பிள்ளைகளுக்கும், ஆயிஷாவுக்கும் மட்டில்லா மகிழ்ச்சி தந்தையின் மாற்றத்தை எண்ணி இவ்வாறாக நோன்பும் பத்தும் கழிந்து விட்டது லொக் டவுன் இடைக்கிடை நீக்கியதும் தேவையான உணவுபண்டங்களை கொண்டு வருவான்.

இவ்வாறே அவளுடைய பிரார்த்தனை அவனுள் பிரதிப்பளித்தது ஆயிஷா மார்க்க விஷயத்தில் மிகவும் ஈடுபாடுடையவள், அதே போல் பிள்ளைகளையும் வளர்த்திருந்தால். அதிகமாக குர்ஆனையும் ஓதி முடிப்பாள்.

இப்தார், சகர் உணவையும் வீட்டிலே சமைத்தாள். பிள்ளைகளும் பலவருடங்களின் பின் அன்னியொன்னியகமாக நெருங்கிப்பழகினர். வீட்டில் பாரிய மாற்றம். அல்ஹம்துலில்லாஹ்!

ஸைனப், ருகைய்யா, அஹ்மத், ஊனமுற்றவன் முஹம்மத் என அனைவரையும் அருகில் வைத்துக்கொண்டு ஒன்லைனில் பிள்ளைகளுக்கு பிடித்த பெருநாள் உடைகளை ஓடர் செய்தான். மனைவிக்கும் ஆஷிக்கும் ஒரே நிறத்தில் ஓடர் செய்தான். அனைவரும் உள்ளம் பூரித்து போனார்கள்.

இவ்வாறு வெளி உலகில் மட்டும் அந்நியொன்னியமாக இருந்த ஆஷிக்கிற்கு மனைவி மக்களிடம் இருந்த கண்குளிர்ச்சி இக்கொரோனா உணர்த்தியது.

மறுநாள் லொக் டவுன் இல்லை என்றதால் ஆயிஷாவின், குடும்பத்திற்கும் இப்தார் ஏற்பாடு செய்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்தது ஆயிஷாவுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஆஷிக் ஆயிஷாவின் ஆளுமைகளைகண்டு வியந்தான்.அனைவருக்கும் வீட்டிலே உணவுகளை தயாரித்து மனமகிழ்வுடன் கவனித்தாள்.

அனைவரும் பிரார்த்தனையுடன் கலைந்தனர்.

பின் மறு நாள் அனைவரும் வெளியில் அமர்ந்து உறையாடிக்கொண்டிருந்த போது ஆயிஷா வயிற்றைப்பிடித்துக்கொண்டு கீழே சுருண்டு வீழ்ந்தாள். ஆஷிக்கிற்கு ஒரேபயமும் பேரதிர்ச்சியும் அன்று அவன் உதைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ஹொஸ்பிடல் போகவும் ஏலா கொரனா வரும் என்று பயம், ஆஷிக் சுபைத்தாத்தாவை கூட்டி வந்தான்.

“ஆயிஷா நான் சுபைத்தாத்தா, என்னடியம்மா செய்து உனக்கு என்று தலையை வருடினாள்”

“இல்ல எனக்கு கடும் உதிரப்போக்காக இரிக்கிதே! சுபைத்தாத்தா, நான் என்ன செய்வேன்” என கதறி அழுதாள் பிள்ளைகளும் அழுதார்கள், ஆஷிக்கை அறியாமல் கண்கள் குலமாகின. சுபைத்தாத்தா கைமருந்து செய்துக்கொடுத்தாள், ஒருவாறு குறைந்தது.

ஆஷிக்கிடம் குடி கொண்ட மகிழ்வு பீதியாய் மாறியது. அவனுடைய உதை அவளது கருப்பையை தாக்கியது. எனவே தொடர்ந்தும் இரத்த கசிவு ஏற்படவே, அவளுடைய உடம்பு பலவீனமடைந்தது. என்ன செய்வேன் என ஏக்கத்துடன் மனைவியை மடியில் சார்த்தியவனாய் தலையை வருடினான்.

“ஆயிஷா வஸிய்யத் செய்வதுபோல் பிள்ளைகளையும் அருகில் அழைத்து மன்னிப்புக் கேட்டவளாய், எக்கட்டத்திலும் தந்தையை கைவிட்டு விட வேண்டாம், அனைவரும் ஒத்துமையாக சந்தோசமாக இருங்கள்” என்று கூறியவளாய், தனது பெற்றோருடனும் தொலைப்பேசியில் உரையாடி மன்னிப்புக் கேட்டாள்”

பெற்றோரும் இரவோடு இரவாக ஓடோடி வந்தனர்.

“என்ன மகள் என்ன நடந்த?” என்று அழுதனர்.

“இல்ல உம்மா கொஞ்சம் வயிறு வலி உம்மா, கடுமையான இரத்தம் போகுதும்மா மனசுக்கு பயமாக இருக்கிதும்மா” என்றழுதாள்.

உடனே கவர்பண்னி ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போய் செக்பண்னினார்கள். பரிதாப நிலை அவளது உயிர் போகும் அளவுக்கு இரத்தம் வெளியாகி இருந்தது. வைத்தியர்கள் கைவிட்டு விட்டனர். ஆஷிக் பேரதிர்ச்சியடன் மனைவியை சுமந்தவளாய் வீட்டை வந்தடைந்தான் இறைவனிடம் மன்றாடினார். ஆனால் அல்லாஹ்வின் நியதி முந்தி விட்டது.

கணவனிடம் வுளுசெய்துவிடுமாறு கேட்டவளாய், இஸ்திஃபாருடன், பிள்ளைகளையும் பெற்றோரையும் பார்த்தவளாய், திருக்கலிமாவுடன் உயிர்நீத்தாள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

பேரழுகையுடன், மனைவியுடன் ஒழுங்காக நடக்காமல், இவ்விரண்டு மாதமாக இல்லத்திலும், இல்லரத்திலும் இன்பமாக இருந்த என் வாழ்வு கேள்விக் குறியாக மாறிவிட்டது. இருக்கும் போது அவளின் அருமைப் பெருமையை உணராமல், போலி உலகின் சொத்துக்களுக்காய் அவளை தாக்கிவிட்டேனே எனப்புலம்பினால், ஆனால் ஆயிஷா மரணிக்கும்வரை கணவர் உடைத்ததை யாரிடமும் கூறவில்லை. அதனையும் எண்ணி மனம்நொந்துப்போனான். ஜனாஸா வீட்டுக்கு வந்த அனைவருமே ஆஷிக்கையும், பிள்ளைகளையும் பார்த்து கண்ணீர் சிந்தினர்.

“நிழலில் அருமை வெயிலில் தெரியும்” என்பது போல சில ஆண்களுக்கு திர்மணத்திற்கு முன்பு, அல்லது திருமணமாகி ஆரம்பக கட்டத்தில் மட்டுமே மனைவிமார்களை மதிப்பார்கள், பின் அவள் குழந்தை பார்க்கும் ஆயம்மாவாக மாறிவிடுவாள், அல்லது வேலைக்காரியாய் மாறிவிடுவாள். ஒவ்வொரு பெண்ணும் அன்பையும், அரவணைப்பையும் எதிர்ப்பார்ப்பாள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர். அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை புறக்கணித்தால், அல்லாஹ் நம்மிடமிருந்து அதனை பறித்து விடுவான்.

ஆயிஷாவின் இக்கதையும் உண்மை சம்பவத்துடன் ஒத்ததே, அவளுடைய வேண்டுதலுக்கு விடையளித்தான் ரப்பு!

Ummu Adheeba
SEUSL
Badulla

ஆயிஷா பிரமல்யமான வியாபாரி ஒருவரையே திருமணம் செய்து நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். கணவர் நேர்மையானவராயினும் கஞ்ஞத்தனணுடையவர், சொத்துகளில் ஆசைமிக்கவர். எனவே ஆயிஷாவின் தந்தையிடம் மேலும் சொத்துக்களை தரும்படி கேட்டவேலையில் சில சிக்கல்களினால் ஆயிஷாவை, மற்றும்…

ஆயிஷா பிரமல்யமான வியாபாரி ஒருவரையே திருமணம் செய்து நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். கணவர் நேர்மையானவராயினும் கஞ்ஞத்தனணுடையவர், சொத்துகளில் ஆசைமிக்கவர். எனவே ஆயிஷாவின் தந்தையிடம் மேலும் சொத்துக்களை தரும்படி கேட்டவேலையில் சில சிக்கல்களினால் ஆயிஷாவை, மற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *