இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். 1987 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உடல் உள பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான பொருட்கள் போதைப்பொருள் என வரையறை செய்யலாம். இன்று போதைப்பொருள் என்ற நாமம் அதிகளவில் மொழியப்படும் வார்த்தையாக மாறியுள்ளது. சிற்றின்பம், துக்கத்தை மறத்தல், அசாதாரண வீரம், கேளிக்கை, சகபாடிகளின் அங்கீகாரம், நாகரிகம் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்கெல்லாம் நம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றது.

போதைப் பொருளினால் தனிமனிதன் மாத்திரமன்றி, குடும்பமும், அவன் சார்ந்துள்ள சமுதாயமும் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படுகின்றன. இதனால் அன்பும், அரவணைப்பும், வழிகாட்டுதலும் கிடைக்க வேண்டிய சூழலில் அவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது.

போதைப் பொருளுக்கு எதிராக எவ்வித சட்டங்களை பிரயோகிப்பினும் அதனை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. மாறாக போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களை பாதுகாத்து விழிப்புணர்வூட்டும் முகமாகவே இத்தினம் காணப்படுகிறது.

ஆகவே ஒவ்வொரு மனித உள்ளத்திலும் நற்சிந்தனைகளை ஏற்படுத்துவதற்காக உண்மையான ஆத்மீக சிந்தனைகளை மனித மனங்களில் பதியவைத்து சீர்திருத்தங்களைச் செய்வதே ஆரோக்கியமானதும், நிரந்தரமானதுமான தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help