சுறா மீன்களுடன் விளையாட்டு

Advertisements
கடற்கொள்ளையர்களின் புதையல்
The treasure of pirates
பாகம் 06

மறுநாள் காலையில்..

“நீங்கல்லாம் யாரு? எதுக்காக வந்திருக்கீங்க.” என்று கடலருகே மீன்களை காயவைத்து கொண்டிருந்த ஒருவன் கேட்டான்.

“உங்க தலைவர் இருக்குற இடத்துக்கு எங்களை அழைச்சிட்டு போ அப்பறம் நாங்க யாருன்னு சொல்லுறோம்.” என்றான் கேப்டன் குக் கூட வந்தவன்.

“முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க? வெளியாளுங்க யாரையும் நாங்க ஊருக்குள்ள விடமாட்டோம்.”என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் குக் அவனை சுட்டு கொன்று விட்டான். இதனை பார்த்து கொண்டிருந்த பெண்களும் குழந்தைகளும் கலவரமடைந்து ஊருக்குள் ஓடினார்கள்.

“அவங்கள பிடிங்க, அவங்க தலைவன் இருக்குற இடத்துக்கு கூட்டிட்டு போகட்டும்.” என்று குக் கட்டளை இட்டதும் அவனது வீரர்கள் அங்கிருந்து ஓடிக்கொண்டு இருந்த ஒரு பெண்ணை பிடித்து விட்டனர்.

அவளது முடியை பிடித்து இழுத்து அடித்து அவர்களின் தலைவரை பற்றி விசாரித்தார்கள். அவள் கத்திகொண்டே வலியில் சில விடயங்களை உளறினாள்.

“ஆஹ் அவரை யாரும் பார்க்க முடியாது. அவர் ஊரோட மையத்தில் இருக்கார். வேறெதுவும் எனக்கு தெரியாது.” என்று அவள் சொல்ல அவளை இழுத்து வீசிவிட்டு ஊருக்கு நடுவில் செல்ல ஆரம்பித்தனர். இதற்குள் கரையில் இருந்து ஓடியவர்கள் தலைவரை அடைந்து விஷயத்தை சொல்லி விட்டிருக்க அந்த தீவின் தலைவர் பர்மீஸ் எப்போதாவது தீவுக்கு ஆபத்து ஏற்படின் உபயோகப்படும் என்றெண்ணி பதுக்கி வைத்த ஆயுதகிடங்கில் இருந்து விஷம் தடவப்பட்ட கத்திகள் மற்றும் அம்புகள் எல்லாவற்றையும் எடுத்து அவரும் ஒரு படையை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் கேப்டன் குக் உடைய துப்பாக்கி வீரர்களை சமாளிக்க முடியுமா என்று தான் எல்லோருக்கும் சவாலாக இருந்தது.

***************

கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் தங்குவதற்கு வேறாக அறைகள் அங்கு இருந்தன. கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆய்வுகூடம் இரண்டும் மிகுந்த பாதுகாப்பாக இருந்தது. ஆராய்ச்சியாளர்களையும் உள்ளார்ந்த டெக்னீசியன்களையும் தவிர வேறு எவராலும் உள்ளே நுழைய முடியாது. அன்றைய நாள் மேகங்கள் சூழ்ந்த இருண்ட வானமாக அது காட்சி அளித்தது.

ஜிம்சனும் லில்லியும் ஐரீஸுக்கு ஜுனியர் என்பதால் அவர்கள் கூடியளவு நேரம் அவர்கள் அறையில் இருந்து ஐரிஸ் கொடுத்து விட்டு போகும் சிக்கலான இயந்திரகோளாரை சரிபண்ணுவதிலேயே இருந்தனர்.

இவளுக்குக்கோ போரடித்து போய், “நான் போய் வெளில இருக்கேன்.” என்றுவிட்டு சுறாமீன்களுக்கு கொடுப்பதற்கு சாப்பாடும் அவற்றோடு விளையாட ஒரு சின்ன பந்தையும் கொண்டுவந்தாள்.

வழக்கமாக எழுப்பும் ஒருவித ஒலியை எழுப்பி அவளது மீன்களை அழைத்து விட்டு நீருக்குள் காலை போட்டு கொண்டு காத்திருந்தாள். அவையும் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தன. அவற்றுக்கு சாப்பாடு போட்டுவிட்டு அவை சாப்பிட்டு முடித்த பின்னர் பந்தை எறிந்து விளையாடினாள். அவையும் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து பந்து நீருக்குள் செல்லாமல் பார்த்து கொண்டன.

கொஞ்ச நேரத்தில் கொஞ்சம் பெரிய அலையொன்று மோத பந்து மீன் வாலில் படவும் மீன் வாலை அடிக்கவும் சரியாக இருந்தது.

அந்த ஷார்ட்டில் பந்து எகிறி பறந்து மேல் தளத்துக்குள் விழுந்தது. திரும்பி மேலே பார்த்தாள்.. வழக்கமாக அந்த நேரத்தில் கட்டுப்பாட்டு அறையும் ஆய்வு கூடமும் பூட்டியே இருக்கும். ஆனால் இப்போது ரெயான் அதை திறந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் போவது போலவே இவளுக்கு தோன்றியது.

“இவன். இன்னிக்கு என்னன்னு பார்த்திடனும்.” என்றெண்ணி கொண்டு மீன்களை அனுப்பி விட்டு இதுவரையில் செல்லாத மேல் தளத்துக்கு செல்ல முடிவெடுத்தாள்.

தொடரும்
A.L.F. Sanfara

Leave a Reply

%d bloggers like this: