தேவாவின் இறுதிக் கடிதம்

Advertisements

யார் நீ
காட்சி :03
களம் :ரஞ்சித்தின் வீடு ரஞ்சித்தின் ஆபிஸ்
கதாப்பாத்திரங்கள் : ரமனி,சாவித்திரி (வீட்டு வேலைக்காரி) தேவா, சுந்தரம் (காவலாளி)

நாட்கள் கடந்து செல்கையில் தேவாவின் வருகையும் சற்று குறையவே ராம்னியின் நடத்தையில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. ஆனால் இன்று ஓர் திருப்பு முனையான சம்பவம் இடம்பெற்றது. (அறையில் ரமனி பழைய சாமான்களை பார்வையிட்டு கொண்டு இருக்கையில் சாவித்திரியிடம் ஒரு டயரி கிடைத்தது. அதைப் புரட்டிப் பார்த்த தேவி.)

சாவித்திரி: ரமனி அம்மா இது தேவா சேரோட டயிரி தானே?

ரமனி: எங்க என் தேவாவோட டயிரியா? இங்க கொடு இத்தன வருஷமா எங்க போச்சுனே தெரில. இப்பதான் கெடச்சிருக்கு.

சாவித்திரி: டயிரில எழுதும் போதெல்லாம் தேவா சேர் சொல்லுவாரு. யென்னோட ரமனிக்கும் ஒனக்கும் தான் நா இதுல நெறய விஷயம் எழுதறேன். யென்னொட ரமனிய நீ தா பாத்துக்கணும்னு.

ரமனி: அவரு எறந்து போய் இப்ப மூனு வருஷமாகுது. ஆனா எனக்கு அவரு என் கூடவே இருக்குற மாதிரியே தோனுது.

சாவித்திரி: அது என்னவோ உண்மை தாமா தேவா எனக்கு தம்பி மாதிரி எங்கள இப்படி தவிக்க விட்டு போயிடாரே.

(சாவித்திரி சமயலறைக்குள் சென்ற போது தான் ரமனி க்கு கிடைத்தது.)

ரமனி: சாவித்திரி இங்க வந்து பாரு யென்னோட தேவா என்ன எழுதிருக்காருன்னு.

சாவித்திரி: ரமனி யம்மா என்ன அம்மா எழுதிருக்காரு!

ரமனி: நல்லா கேட்டுக்கு.

ரமனி நா தேவா எழுதுற இன்னக்கி 2018.05.03 ஆம் திகதி பெறும்பாலும் நாளைல இருந்து நா ஒங் கூட இருக்க மாட்டே. நித்தியா நான் நல்லவங்கன்னு நெனச்ச யெல்லாருமே என்ன ஏமாத்திட்டாங்கமா. யெனக்கிட்ட இருக்குற சொத்து பூராக அவங்களுக்கு எழுதி தரணும்னு கேக்குறாங்க கண்மனி. ரஞ்சித் ஒன்ன எப்படியாச்சும் அடஞ்சிக்கனும்னு குறியாக இருக்கான். ஒன்னோட அம்மா என்னோட சொந்த பூரா ரஞ்சித் பேர்ல எழுதி கொடுக்கும் இல்லன்னா நாம கொண்ணுறுவம்னு மெரட்டிட்டு கெடக்குறா!! அது போல தா ரோஷன் என்னோட க்ளோஸ் ப்ரன்ட், அவங்கள போல தா நம்ம பெமிலி டாக்டர் தேவராமன் எல்லாருமா சேந்து தா யென்ன மெரட்டிட்டு இருக்காங்க.

யென் தங்கமே எப்படியும் என்ன இவங்க விடப் போறதில்ல. யென்ன செளக் கைதி போல பிடிச்சு யென்னொட சொத்த யெல்லாம் அவங்க பெயருக்கு எழுதியெடுக்க போறாங்க! நா யென்னோட 150 கோடி சொத்து பூராகவும் ஒன்னோட பெயர்ல தான் எழுதி வச்சிருக்க. டீட் ஓட காபி ஒரிஜினல் எல்லாம் கபடா ரூம்ல இருக்குற அந்த பெரிய பெட்டில வச்சிருக்க. நான் எப்படியும் ஒன்ன ஆபத்துல தனியா விட்டுட்டுப் போக மாட்டே நித்தியா. சாவித்திரி கூட பத்துரமா இருக்கனும் ஓகே.

இப்படிக்கு
தேவா.

சாவித்திரி: கடவுளே தேவா தம்பி! இந்த அநியாயக்காரப் பசங்க யென் புள்ளய யென்ன பண்ணிருப்பாங்களோ? படுபாவிங்க.

ரமனி: சாவித்திரி இங்க பாரு இந்த டயரி நமக்கு கெடச்சது ரஞ்சித்கு தெரியக் கூடாது வழமய மாதிரியே நாம இருப்போம் ஒகே.

சாவித்திரி: இப்பதான் யாரு தேவா சார. கொல பண்ணிருக்காங்கன்னு தெரியுமே! அவனுங்கள விடக் கூடாது ரமனி யம்மா.

ரமனி: எப்படியும் என் தேவாவை கொல பண்ணுருக்க மாட்டானுங்க. சொத்தோட பத்திரம் எங்க இருக்குன்னு தெரிஞ்சிக்கும் வர்க்கிம் யெங்கயோ மறச்சி வெச்சிருப்பானுங்க.

சாவித்திரி: கடவுளே நீ தான் யெங்களுக்கு சரியான பாதய காட்டணும்.

ரமனி: அது தா இப்ப கடவுள் தெளிவா குத்தவாளிங்கள காட்டினானே. அப்புறம் எதுக்கு யொசிக்கனும்.

சாவித்திரி : எங்க இருந்தாலும் தேவா தம்பி நல்லா இருக்கனும்..

ரமனி: இந்த டயரிய வச்சு தேவா இருக்குற எடத்த கண்டுபிடிக்கணும்.

********************************

(இப்படியே இங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது ரஞ்சித்தின் பிடியில் ஏங்கிக் கொண்டிருக்கும் தேவா கவலையில் புலம்புகிறான்.)

தேவா: சுந்தரம் என் ரமனி என்ன பண்ணுறாளோ? நான் கடசியா அவளுக்கு எழுதி வெச்ச அந்த வரிகள் தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு! அத அவ பாத்திருப்பாளோ தெரியல. ஆண்டவா என் ரமனிக்கு, என் நித்தியாவுக்கு என் கடசி வரிகள காட்டிக் கொடுத்திடு.

சுந்தரம்: ஐயா! நீங்க கவல படாதிங்க ஆண்டவன் ஒங்க பக்கம் தான் இருப்பான். நிச்சயமாக ஒங்க ரமனி ஒங்கள தேடி வருவாள்.

தேவா: எப்ப தான் நீங்க சொல்ற இந்த வார்த்த கைகூடுமோ?

சுந்தரம்: ஐய்யா! நான் இப்போ பின்னால கேட்டு கிட்ட போயிருக்கே! இல்லன்னா நாம மாட்டிகிருவோம்!

தேவா: ஆமால்ல நீ இப்போ போகலாம் சுந்தரம்.

சுந்தரம்: சரி ஐய்யா நான் வாரேன்.

தேவா: நித்தியா நீ இப்போ எனக்கு சமீபத்துல தான் இருக்க. இன்னம் கொஞ்சம் நாட்கள் தான் நான் உங்கிட்ட வந்திருவேன். கொஞ்சம் பொருத்தக்கம்மா.

*****************************

(அதே வேலை ரமனி வீட்டில் இருந்த படியே தேவாவை நினைக்கிறாள்)

ரமனி: இன்னும் எத்தனை காலங்கள் தான் என் தேவா கிட்ட வராம தூரமா இருப்பாறோ? கடவுளே சீக்கிரமா என் தேவாவ என் கூட சேத்து வெச்சிடு.

(இப்படியாக வேறுபட்ட இடங்களில் சிறைப்பட்டு இருந்த பொழுதிலும் ஒரே நினைவால் பிணைந்திருக்கும் தேவா, ரமனி இருவரும் சிந்திப்பார்களா? இல்லையா?)

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

Leave a Reply

%d bloggers like this: