“உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை, துக்கம், துன்பம், விரக்தி என்று ஏராளம் காணலாம்”.
கல்வி பயிலும் மாணவன் பாடங்களை, பரீட்சை மற்றும் பெறுபேற்றை நினைத்து கவலை, துன்பப்படுகிறான்.
‘நட்பு, ‘காதல் தோல்வி இதனால் கவலை, விரக்தி.
‘ஒழுங்கான தொழில் அமையவில்லை என்றாலும் இதே நிலமை. அது மட்டுமா! எதிர்ப்பார்த்த துணை கிடைக்கவில்லை, பிள்ளை பாக்கியம் இல்லை, திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை, கடன் தொல்லை இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் பல பிரச்சினைகளையும், சவால்களையும் தந்து விட்டுச்செல்கிறது.’
“இதனையெல்லாம் முகங்கொடுத்து முன்னேறிச்செல்வதே வாழ்க்கையின் யதார்த்தம்”
“அவன் எத்தகையேவனென்றால் உங்களில் எவர் செயலால் மிக அழகானவர் என்று உங்களை சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் படைத்திருக்கிறான்” (67:02)
இந்த உண்மைநிலையை புரிந்து வாழ்க்கை போராட்டத்தில் அனைத்தையும் முறியடித்து கடந்து செல்ல வேண்டும். அதிகமானவர்களுக்கு அந்த நிம்மதி, சந்தோஷத்தை எப்படி பெறுவது என்பதும் கேள்விக்குறியாக காணப்படுகின்றது.
இதற்காக பல முயற்சிகள் எடுக்கின்றார்கள். ‘யோகா என்றும் ‘உடற்பயிற்சி, ‘தியானம் அதேபோல் சுற்றுலா பயணிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர்கள், இன்னும் சிலர் அதிகமான சம்பாதிப்பு ஏன் இவையெல்லாம் கவலை, துன்பத்தை போக்கி நிம்மதியை பெறுவதற்கேயாகும்.
“ஒன்று மட்டும் நிதர்சனம்’ நினைத்த இடங்களுக்கெல்லாம் செல்வதன் மூலம், பணம் சம்பாதிப்பது போன்று நிம்மதியை பெறமுடியாது. அதனை இறைவனால் மட்டுமே தரமுடியும்.’
“இன்னும் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடையே இதயங்கள் அமைதி பெறுகின்றன. ” (13:28)
ஆக நிம்மதியின் இருப்பிடம் இறைவனின் புறமே என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
எனவே மிக இலகுவாக சொல்ல வேண்டும் என்றால் எமது தனிப்பட்ட, குடும்ப, பொருளாதார வாழ்க்கை அனைத்திலும் இறைநினைவோடும், இறைவனுக்காக என்றும் எப்போது அமைகிறதோ அந்த நொடியே நிம்மதி எம்மை தேடி வரும் இன்ஷா அல்லாஹ்.
“ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய வாழ்வு வாழச்செய்வோம். மறுமையிலும் அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம் (16:97)
எனவே நாம் ஒவ்வொருவரும் தொலைந்த நிம்மதி ஏன், எவ்வாறு தொலைந்து போனது என்று சிந்தித்தால் அதற்கான விடையை அறிந்துகொள்ளலாம். அதைவிட்டு விட்டு மனோ இச்சை படி ஓடினால் ஆரம்பத்தில் இனிப்பும், சுவையும் தரும் ஒரு கட்டத்தில் இறைவனின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்க நேரிடும்.
எனவே இந்தக்காலம் எமது வாழ்க்கை குறுகியது என்று உணர்த்தியிருக்கின்றது. அதை உணர்ந்து அங்கிகரிக்கப்பட்ட வாழ்க்கையை அவனின் பொருத்தத்துடன் இன்பம், சந்தோஷத்தை பெறுவோம். அதேபோல் தடை செய்யப்பட்ட விடயங்களையும் அவனுக்காக விட்டுவிடுவோம் எனின் நிம்மதியான வாழ்க்கையை பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இன்ஷா அல்லாஹ்.