கொத்துக் கொத்தாய்- உயிர்களைக்
கொன்று குவித்த
கொடிய கொரொனாவே.
இலங்கையில் மட்டுமல்ல
இங்கிலாந்து இந்தியாவென
இதர பல இடங்களிலும்
இன்னலையும் இடுக்கணையும்
அள்ளியிறைத்த
அற்ப உயிரி
கோவிட் 19 ஏ நீ
விட்டுவைத்த
வீரங்கள் பல
கற்றுக்கோடுத்த பாடங்கள் பற்பல
சுட்டிக்காட்டிய சூட்சுமங்களோ இன்னும்பல
கோவிட் 19 ஏ நீ
குடும்பமாய்க்கூடி நின்று
பாசங்கொள்ள
நேசமாய்
இறையன்பினில்
இனித்திட
இலகுவாய்
இசைவாக்கினாய்
ஓயாமல் சோராமல்
ஓடியோடி உழைத்திட்ட
உழைப்பெனும் கடிகாரத்திற்கு
இளைப்பாறக் களமமைத்தாய்..
பட்டினியால் படுத்துறங்கும்
பக்கத்து வீட்டாரைச்-சற்றுப்
பார்த்துவிட வாய்ப்பளித்தாய்.
இனியும் தொடரட்டும்.
உன் ஆட்சிக்காலத்தில்
மீளப் புதுப்பிக்கப்பட்ட உறவுகளின் சகவாசம்!
மஸ்ஜித்களாய் மாறிய
மனைகளின் இறைவாசம்!!
இனியும் தொடரட்டும்
ஏடுகள் உயர்ந்துவிட
ஏழைகளுக்காயென
எட்டி எடுத்துவைக்கும்
எட்டுத்திக்கினதும்
நீளும் கரங்கள்!
இனியும் நீளட்டும்
உள்ளத்தை உசுப்பிவிடும்
உன் இறையோனுடனான
உள்ளச்சம் பொதிந்த
உரையாடல்கள்
கோவிட் 19 ஏ
இனியும் தொடரட்டும்..
நீ ஏவிச்செல்லும்
நல்ல பல
ஏவல்கள்!!!
இவையும்
இன்னும் பல
இனிய நிகழ்வுகளும்.
இனியும் தொடர
இருகரமேந்தும்