லீனா எடுத்த முடிவு சரியா? தவறா?

Advertisements

திருப்பு முனை
பாகம் 1

அது ஒரு இராப்பொழுது. இருளோடு சேர்ந்து குளிரும் கைகோர்த்து கொண்டது. தெருவோரத்தில் நின்ற ஒரு வீடு மட்டும் விழா கோலத்தில் காணப்பட்டது. எங்கும் சந்தோசமும் சிரிப்பும் காற்றில் சிறகடித்தன.

நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தாள் அவள். ஆம்! அவள் தான் கதையின் உயிர்ப்பான பாத்திரம். அவள் பெயர் லீனா. அவளது வாழ்வில் பெரும் பொறுப்புள்ள ஓர் பதவியை ஏற்க தயாராகி கொண்டிருக்கிறாள். ம்ம். அது தான் திருமணம் என்ற பதவி.

ஆம்! ஒவ்வாரு மனிதனும் தனித்து வாழ முடியாது. அது அசாத்தியமானது. எனவே தான் மார்க்கத்தில் திருமணம் கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் மிக முக்கிய தருணம் திருமணம் தான். அது ஆயிரம் காலத்து பயிர். அது ஒரு சிலரின் வாழ்வை வசந்தமாகவும் இன்னும் சிலரின் வாழ்வை கோடையாகவும் மாற்றும் திருப்புமுனையாக இருக்கும். சில நேரங்களில் நாம் வெடுக்கென்று எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்வையே தலை கீழாக மாற்றக் கூடியது. நம்மை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விட கூடியது. எதிலும் விளையாட்டு தனமாக இருந்தால் இறுதியில் வாழ்க்கையே அவனை வைத்து விளையாடி விடும். வாழ்க்கை குறித்து லீனா எடுத்த முடிவு சரியா தவறா? இனி ஒவ்வொரு கணமும் அவளுக்காக காத்து நிற்பது மகிழ்ச்சியா இல்லை அதிர்ச்சியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply

%d bloggers like this: