மன அழுத்தம் ஒரு குறுகிய பார்வை

வரைவிலக்கணம்:

இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
 1. நாளாந்த நடவடிக்கைளை மேற்கொள்வதில் ஆர்வமின்மை
 2. வழமைக்கு மாற்றமான பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படல்
 3. நம்பிக்கையற்ற உணர்வு
 4. வெளிப்படையான எவ்வித காரணமும் இன்றி இடைக்கிடை அழுதல்
 5. தூக்கக் கலக்கம்
 6. ஒன்றில் உன்னிப்பாக கவனம் செலுத்துவதில் சிரமம்
 7. முடிவுகளை எடுப்பதில் சிரமம்
 8. பதட்டமான நிலை
 9. அதிக தடுமாற்றம்
 10. தற்செயலாக உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
 11. அதிகப்படியான உணரரும் திறன்
 12. சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்
 13. தன்னை தாழ்வுமனப்பாங்காக/ தரம் குறைத்து மதிப்பிடல்
 14. பாலியல் உணர்வுகள் அற்றுப்போதல்
 15. தற்கொலை எண்ணங்கள்/ தற்கொலை முயட்சிகளை மேற்றுக்கொள்ளல்

இவை மட்டுமல்லாது இன்னும் சில அறிகுறிகளும் உள்ளன, இவை ஆளுக்காள் வித்தியாசப்படும்.

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள்:
 1. தொடரான வேலைப்பளு
 2. நீண்ட நேர தொடர் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல்/ தொடராக சமூக வலைத்தளங்களை பாவித்தல்
 3. காதல்/பொருளாதார/ குடும்பப் பிரச்சினைகள்
 4. முக்கியமான, நெருக்கமானவரது/ விருப்பமான பொருள் இழப்பு
 5. நோயினால் பீடிக்கப்படுதல்
 6. நெருக்கமானவரது வெறுப்பு, புறக்கணிப்பு
 7. அதிகப்படியான கடன் சுமை
 8. தாங்கமுடியாத தோல்விகள்
 9. பாவம் நிறைந்த, பிரச்சனையான சூழல்
 10. அதிகமதிகம் பிரச்சினையான மனிதர்களை சந்தித்தலும், பிரச்சனை பற்றிய செவிமடுத்தல்களும்
மன அழுத்தத்தினால் ஏற்படும் விபரீதங்கள்:
 1. தற்கொலை
 2. போதைப்பொருள், புகைத்தல் பாவனைக்கு அடிமையாதல்
 3. சூழவுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தல்
 4. சமூகத்தை விட்டொதுங்கி அதிகம் தனித்திருப்பதை விரும்புதல்
 5. தேவையற்ற உள் குடும்ப மோதல்கள்
 6. குடும்ப உறவில் விரிசல் ஏற்படல்
 7. கல்வி நடவடிக்கைளில் ஈடுபாடு குறைதல்
 8. அனைத்து விடயங்களையும் பிரச்சனையாக நோக்குதல்
 9. மொத்தத்தில் அசாதாரண நிலைக்கு தள்ளப்படுதல்
மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிகள்:
 1. இறைவனை முறையாக வணங்குதல் மற்றும் அவனது கடமைகளை சரிவர நிறைவேற்றல்
 2. காலை, மாலை திக்ருகள், மற்றும் சந்தர்ப்ப துஆக்களை தவறாது ஓதி வருதல்
 3. நாளாந்தம் சிறு பகுதியேனும் திருமறையை (அல்குர்ஆனை) ஓதுதல், வாசித்து விளங்குதல்
 4. ஏற்படும் தோல்விகள், நஷ்டங்கள், சரிவுகள், இழப்புகள் அனைத்தும் இறைவனது விதி என்று நம்புவதுடன் அவற்றின் மீது பொறுமை கொள்ளுதல்
 5. ஆன்மீகம், பொது அறிவு மற்றுமுண்டான பயனுள்ள புத்தகங்களை வாசித்தல், பயனுள்ள அறிவுரைகள், காணொளிகளை பார்வையிடல்
 6. அதிகம் தனிமையைத் தவிர்த்தல்
 7. தொடர் வேலை/ கற்றல் என்பவற்றுக்கிடையில் இளைப்பாறி சற்று வேறு வெளி சிந்தனைகள்/ பேச்சுகளுக்கு செல்லுதல்
 8. பிரச்சினைகளை நெருக்கமான நம்பிக்கையானவரிடம் மனம்விட்டுப் பேசுதல்
 9. இருக்கும் சூழல்/நிலையை சற்று மாற்றுதல்
 10. தோல்விகள், சரிவுகள், அவலங்கள், இழப்புகளின் போது சோர்ந்துவிடாது இயலுமான அடுத்தகட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதுடன், துவண்டுவிடாது மேலெழுந்து வருதல்
 11. நல்லவர்களுடனான பழக்கம், தொடர்பு, நட்புகளை உருவாக்கிக்கொள்ளல்

வல்ல அல்லாஹ் அனைவரையும் இந்நோயிலிருந்து பாதுகாப்பானாக! பல்கலைக்கழகத்தில் கற்ற Guidance and Counselling இலிருந்து மக்கள் பயனடையும் நோக்கில் எழுதப்பட்டது.

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா
Author: admin