ஆன்மாவின் அமைதி

Advertisements

புளகமும் புல்லரிப்பும்
உணரமுடியா நிஷ்டை
கலந்த தவத்தை
உறக்கம் என்று
விசும்பிக் கொண்டிருக்கிறது
விடியல்
அர்த்தம் புரியா
தனிமையின் அரும்புகளை
காலச்சுவடுகள்
வரைந்து கொண்டிருக்கிறது.

இருள் வடியும் ஓர் போதையில்
உயிர் கொண்டு தளைகிறது
மௌனம்.
தீர்ந்து போன ஓர் ஆன்மாவின்
அமைதி கலந்த ஒற்றை நிழல்
பிரக்ஞையின் மயக்கத்தில் ஊர்ந்து
தீயின் மௌனக் குரலாய்
தேகம் தொட்டு விம்முகிறது.

பௌர்ணமியை
தரிசித்துக் கொண்டிருக்கும்
சந்தன மடல்கள்
செத்துக் கிடக்கும்
சங்கீத வார்த்தைகளை
மயிலிறகால்
வருடிக் கொண்டிருக்கிறது.

மிஸ்ரா ஜப்பார்

Leave a Reply

%d bloggers like this: