மார்க்கத்தை தரமான மார்க்க அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
“வீடுகள் மற்றும் ஏனையவற்றில் உள்ள மக்கள் வீரியமான மார்க்கத் தீர்ப்புகளைத் தவிர்த்து சரியான மார்க்கத் தீர்ப்புகளின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆதலால் நாம் பெரும்பெரும் மூத்த மார்க்க அறிஞர்களை சார்ந்திருத்தல் மற்றும் பிக்ஹ் (இஸ்லாமிய சட்டத்துறை) அறிவுள்ளவர்கள் என சாட்சியமளிக்கப்பட்டவர்களின் பால் எவ்வளவு தேவையுடையவர்களாக உள்ளோம்! மார்க்க சட்டதுறை சாராதவர்கள் அதன் சட்டங்களைப் பற்றி பேசினால், நீ அபூர்வங்களைத் தான் செவிமட்டுப்பாய்.

மார்க்கத்தின் மூலாதாரங்களது மூல வாக்கியங்களை மதிப்பளிக்கும் மார்க்க அறிஞர்களிடமல்லாமல் வேறு யாரிடமிருந்தும் மார்க்கத்தை கற்றுக்கொள்ளாதே! மார்க்கத்தை அலட்சியவாதிகள், உணர்ச்சிகளது அடிப்படையில் செயல்படுபவர்கள் மற்றும் மார்க்க அறிவற்ற அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை உன்னை எச்சரிக்கிறேன்.”

தகவல்: ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்களது டுவிட்டர் பக்கம், 15/03/2020
தமிழாக்கம்:அஸ்(z)ஹான் ஹனீபா
Author: admin