கடற் கொள்ளையர்களுடன் போர்

Advertisements
கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 07】

“தலைவரே! அவங்க வெளிநாட்டு ஆளுங்க போல இருக்காங்க. நாம பார்க்காத புது புது ஆயுதங்கள் எல்லாம் வெச்சிருக்காங்க.” என்று பர்மீஸ் கிட்ட அவருடைய ஆட்கள் சொல்லி கொண்டே இருந்தார்கள்.

“பொறுமையா இருங்க ஊருக்குள்ள வந்து ஒருத்தனை கொன்னு போட்டிருக்காங்க. இந்த அராஜகத்தை நாம தான் தட்டி கேக்கணும்.” என்றார்.

அந்த நேரத்தில் வேறு ஒரு ஆளை துப்பாக்கி முனையில் நிறுத்தி கொண்டே கேப்டன் குக்கும் அவரது ஆட்களும் பர்மீஸ் இருக்கும் இடத்தை அடைந்து விட்டனர்.

இருபது அடி தூரத்தில் பர்மீஸும் அவரது ஆட்களும் நிற்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் கேப்டனின் துப்பாக்கி முனையில் இருந்த ஆளை சுட்டுவிட்டு, “உன் உதவிக்கு ரொம்ப நன்றி “என்றான்இந்த அக்கிரமத்தை கண்முன்னாடி பார்த்து கொண்டு இருந்த பர்மீஸ் அவரது ஆட்களிடம்,

“வெள்ளைக்காரர்கள் அவங்கள தாக்குங்க” என்று கட்டளை இட விஷ அம்புகளை எய்துவதற்கு இவர்கள் அனைவரும் தயாராக பர்மீஸின் ஆட்களில் சிலர் பொத்து பொத்தென்று விழுந்தனர். ஆம் கேப்டன் குக் அவர்களை குறிபார்த்து சுட்டிருந்தான். உடனே மற்றவர்கள் அம்பெய்ய ஆரம்பித்தனர். மாறி இவர்களும் சுட ஆரம்பித்தனர். ஆனால் துரதிஷ்ட வசமாக கேப்டன் குக் அவரது ஆட்கள் கொண்டுவந்த கேடயங்கள் அவர்களை காப்பாற்றி விட்டன. அது பட்டு இறந்தவர்கள் ஒரு சிலரே.

இவர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சண்டையும் கடும் பயங்கரமாக இருந்தது. ஆனால் எவ்வித அச்சமும் இன்றி குக் முன்னேறிக்கொண்டே இருந்தான்.

“சண்டையை நிறுத்துங்க.” என்ற பர்மீஸின் உரத்த சத்தம் எல்லோரையும் நிறுத்தியது.

“யார் நீ எதுக்காக எங்க மக்களை கொன்னுகிட்டு இருக்கே. என்ன வேணும் உனக்கு” என்று கேட்டார்.

“சரி நீங்களும் நிறுத்துங்க.” என்றபடியே குக் பர்மீஸை நெருங்கினான். அவரது மேற்சட்டை இல்லாத வெற்று உடம்பில் கடற்கொள்ளையர்களின் சின்னம் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

“எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சா போதும். அந்த தீவு எங்க இருக்கு.” என்று கேட்டான் குக்.

“தீவா. எந்த தீவை பற்றி கேக்குற?” என்று பர்மீஸ் திருப்பி கேட்க.

“டோரடோ தீவு எங்க?” என்று கேட்டு அவரை அடித்தான்.

“எனக்கு தெரியாது. அப்படி ஒரு தீவு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.” என்றார் பர்மீஸ்.

மீண்டும் அவரை அடித்து கேட்டான். கடைசிவரை அவர் சொல்ல மறுத்தார். அந்த ஊர்வாசிகள் எல்லோரும் மரண பீதியில் இருந்தனர்.

“அந்த தீவு பற்றி உனக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். அதுக்கு உன்னோட உடம்பில் இருக்கும் இந்த அடையாளமே சாட்சி.”

“அந்த இடத்தை சொல்ல முடியாது. என்னை கொன்றாலும் பரவாயில்லை. நாங்கள்லாம் கடற்கொள்ளையர் வம்சத்தில் பிறந்தவர்கள் தான். காலா காலமா பாதுகாத்துட்டு வர்ற இந்த ரகசியத்தை உன்னை மாதிரி ஒரு அரக்கன் கிட்ட நாங்க உயிரே போனாலும் சொல்ல முடியாது.” என்றார் இறுமாப்புடன்.

“நீ சொல்லாட்டி பரவால்ல. உன் பிள்ளைகளை வெச்சி நான் கண்டுபிடிப்பேன்.” என்றவன் அவர் கழுத்தை அறுத்து அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்த மக்களிடம் பேசினான்.

“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. இவனோட பசங்கள எங்க கிட்ட ஒப்படைச்சிட்டு நீங்க எல்லோரும் உயிரோட தப்பிச்சி கொள்ளுங்க. நான் பத்து எண்ணுறதுக்குள்ள அவங்கள ஒப்படைக்கலேன்னா. நான் இங்கிருக்குற ஒருத்தனையும் உயிரோட விடமாட்டேன். சுட்டுக்கொன்னுடுவேன்.” என்றான். அதோட எண்ணவும் ஆரம்பித்தான்.

குக் ஒன்பது என்னும் வரை எல்லோரும் என்ன செய்வது என்றே யோசித்தனர்.

“நாம எல்லோரும் சாகாம இருக்கணும் என்னா உண்மைய சொல்லிடனும்.” என்று ஒரு பெண் சொல்ல அவர்கள் பர்மீஸின் பிள்ளைகள் இருக்கும் இடத்தை சொல்ல முன்வந்தனர்.

“ஐயா… எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க. எங்க தலைவருக்கு ஒரே ஒரு பொண்ணு தான். அவங்க பெர்முடா பையன் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே தான் இருக்காங்க.” என்று அங்கு செல்வதற்கான வழியையும் சொல்லி முடித்தனர்..

“ஒரு வேளை நீங்க சொல்றது பொய்யா இருந்தா.” என்று கேட்கும் போதே பர்மீஸின் குடிசையில் இருந்து அவரது மகள் மாரியா வின் ஓவியத்தையும் கொண்டுவந்து கொடுத்தான் ஒருவன். அந்த ஓவியத்தில் இருந்தது நம்ம ஐரிஸ். கேப்டன் குக் சிரித்து கொண்டே .

“எடுங்கடா கப்பலை பெர்முடாவிற்கு” என கட்டளை இட்டான்.

*****

அதே நேரத்தில் நம்ம ஐரிஸ் யாருக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல கட்டுப்பாட்டு அறையை நெருங்கியிருந்தாள்.

தொடரும்
A.L.F. Sanfara

Leave a Reply

%d bloggers like this: