அறிஞர்களின் பொன்மொழி

  • 12

 قال الإمام ابن القيم -رحمه الله-:

ما مضى لا يدفع بالحزن، بل بالرضا والحمد والصبر والإيمان بالقدر، وقول العبد قدر الله وما شاء فـعل.

( زاد المعاد٢/ ٣٢٧)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:

நடந்தவற்றை கவலையின் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது, மாறாக திருப்பொருத்தம், புகழ், பொறுமை, இறை நம்பிக்கை, விதியை நம்புதல், போன்றவற்றால் நிவர்த்தி செய்ய முடியும், ஒரு அடியானின் வார்த்தை அல்லாஹுடைய விதித்தது, அவன் நாடியதை செய்து விட்டான் என்று இருக்க வேண்டும். (நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 02, பக்கம்: 327)

‏ قال الإمام ابن القيم -رحمه الله-:

مَتى أقحطت العين من البكاء من خشية الله
فاعلم أنّ قحطها مِن قسوة القلب
وأبعد القلوب من الله القلب القاسي.

( بدائع الفوائد ٣/٣٤٧)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வுடைய பயத்தின் காரணமாக கண்ணீர் வராமல் இருந்தால் கண்ணீர் வராமல் இருப்பது உள்ளம் கல்லாகி இருப்பதனால் என்று நீ அறிந்துகொள், அல்லாஹ்வை விட்டும் மிக தொலைவில் உள்ள நெஞ்சம் கல்நெஞ்சமாகும். (நூல்: பதாயிவுல் ஃபவாயித், பாகம்: 03, பக்கம்: 347)

قال الإمام ابن القيم -رحمه الله-:

مَنْ أَفْتَى النَّاسَ وَلَيْسَ بِأَهْلٍ لِلْفَتْوَى فَهُوَ آثِمٌ عَاصٍ .

( إعلام الموقعين  ١٦٦/٤ )

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மார்க்க விளக்கத்துக்கு தகுதியின்றி மக்களுக்கு யார் மார்க்க விளக்கம் கொடுக்கிறாரோ அவர் பாவியாவார். (நூல்: இஃலாமுல் முஅக்கியீன், பாகம்: 04, பக்கம்: 166)

قال الإمام ابن القيم -رحمه الله-:

إن القوم ليتواصلون وهم فجرة فتكثر أموالهم ويكثر عددهم ، وإن القوم ليتقاطعون فتقل أموالهم ويقل عددهم.

 |[ مختصر الصواعق (٨٨٦/٣) ]|

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு கூட்டம் கெட்டவர்களாக இருந்தும் (உறவினர்களோடு) சேர்ந்து நடக்கின்றனர், (அதனால்) அவர்களின் செல்வங்களும் எண்ணிக்கைகளும் அதிகரிக்கின்றன, மற்றுமொரு கூட்டம் (உறவினரை) பகிஷ்கரித்து நடக்கின்றனர், (அதனால்) அவர்களின் செல்வங்களும் எண்ணிக்கைகளும் குறைந்து விடுகின்றன. (நூல்: முக்தஸருஸ் ஸவாயிக், பாகம்: 03, பக்கம்: 886)

‏ قالَ شَيخُ الإسلَامِ ابنُ تَيميّة -رَحِمَه اللهُ-:

وَكُلّ مَا يُصِيبُ المُؤمِنَ مِن الشَرّ فَإنّمَا هُوَ بِذُنوبِه ، وَالإستِغفَار يَمحُو الذّنُوب ، فيزِيل العَذابَ.

 |[ جَامِعُ المَسائِلِ (٢٧٤/٦) ]|

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இறைவிசுவாசிக்கு ஏற்படும் அனைத்து கெடுதியும் அவனுடைய பாவத்தினால் ஏற்படுவதாகும், மாவமன்னிப்பு கேட்பது பாவங்களை அழித்து விடும், வேதனையை (தண்டனையை) நீக்கிவிடும். (நூல்: ஜாமிஉல் மஸாயில், பாகம்: 06, பக்கம்: 274)

قالَ الإمام ابنُ القيّم -رحمه الله-:

وَاللهُ سبحانه وتعالى كُلّما سَأَلتَه كُنتَ أقربَ إِلَيهِ وَأحبَّ إِلَيهِ وَكُلَّما ألحَحتَ عَلَيهِ فِي الدُّعَاءِ أحَــبَّـــكَ.

[ جلاء الأفهام (ص٢٢٩)]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்விடம் நீ (எதையாவது) கேட்கும் போதெல்லாம் அவனுக்கு மிக அருகிலும் அவனுக்கு மிக பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றாய், பிரார்த்தனையை அவனிடம் கெஞ்சி கேட்கும்போதெல்லாம் உன்னை அவன் விரும்புகிறான். (நூல்: ஜலாவுல் அப்ஹாம், பக்கம்: 229)

‏الشيخ صالح الفوزان -حفظه الله-:

‏لا يحصل الاختلاف والافتراق إلا بسبب عدم التمسك بكتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم.

(‏[شرح المنظومة ص٤٨)

அறிஞர் ஸாலிஹ் அல் ஃபௌஸான் (ஹபிளஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹுடைய வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் கடைபிடிக்காத காரணத்தினால் தான் வேற்றுமையும், முறண்பாடும் உண்டாகிறது. (நூல்: ஷர்ஹுல் மன்ளூமா, பக்கம்: 48)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

لا يحلُّ لأحدٍ أن يقنط من رحمة الله ولو عظُمت ذنوبه.

( مجموع الفتاوى ١٦/١٩)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவங்கள் பிரமாண்டமானதாக இருந்தாலும் எவருக்கும் அல்லாஹுடைய அருளை விட்டும் நிராசை அடைவது (நம்பிக்கை இழப்பது) கூடாது. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 19, பக்கம்: 16)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام ابن القيم -رحمه الله-: ما مضى لا يدفع بالحزن، بل بالرضا والحمد والصبر والإيمان بالقدر، وقول العبد قدر الله وما شاء فـعل. (…

 قال الإمام ابن القيم -رحمه الله-: ما مضى لا يدفع بالحزن، بل بالرضا والحمد والصبر والإيمان بالقدر، وقول العبد قدر الله وما شاء فـعل. (…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *