தந்தையை நேசிக்கும் மகன்மார்களுக்கு சமர்ப்பணம்

  • 13

“நானும் தான் இங்கு பலரும் தான் தாய்க்கு கொடுக்கும் பாசத்தை தந்தைக்கு கொடுப்பதில் தவற விடுகிறோம்.”

தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலே பார்க்கிறோம். ஆனால் அவ்வாறு தோன்றுவதற்கான காரணத்தை புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘தன் மகனோ, மகளோ வளர்ந்து பெரியவனான பிறகும் சிறு பிள்ளையாகவே பார்க்கிறார்.’ ‘நான்பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது’, நல்ல பிள்ளைகளாக வளரவேண்டும் என்பதற்காகவே எங்களோடு கோபமாக நடக்கிறார். நாங்க நல்லா வரவேண்டும் என பாடுபடும் தந்தைக்கு நாம் கொடுக்கும் பரிசு அவர்களோடு பேசாமல் இருப்பது, அவர்களோடு கோபதாபமாக நடப்பது தானா?

‘எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர். அவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள். வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.

“எனவே தந்தை மீது பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையை வாசிக்க கிடைத்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன்.”

‘ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டை ஜீன்ஸ் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது.

பக்கத்திலிருந்து சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் மகனோ மிகவும் அமைதியாக அப்பா சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தந்தையை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப்பருக்கைகளை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான்.

இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர ரெஸ்ட்டோரண்ட் மிக அமைதியானது. மகன் கவுண்டருக்குச் சென்று பில்லிற்கு பணம் செலுத்தி தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான். அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார். மகனோ “இல்லையே நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார். அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிடுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்” என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.

மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் எம்மை கவனமாகப் பார்த்துக்கொண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் திறமைதான். எமது பெற்றோரும் முதியோரும் தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை எமக்காகத் தியாகம் செய்ததோடு எம்மை மிகுந்த மரியாதையோடு பார்த்துக்கொண்டார்கள். நீங்களும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை கொள்ளவேண்டும்.

உலகில் நாம் பெற்ற செல்வங்களை விட நம்மை செல்வங்களாக பெற்றவர்களே மிக உயர்ந்தவர்.

Faslan Hashim
Islahiyya Arabic College®️
South Eastern University of Sri lanka
BA®️

“நானும் தான் இங்கு பலரும் தான் தாய்க்கு கொடுக்கும் பாசத்தை தந்தைக்கு கொடுப்பதில் தவற விடுகிறோம்.” தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலே பார்க்கிறோம். ஆனால் அவ்வாறு தோன்றுவதற்கான காரணத்தை…

“நானும் தான் இங்கு பலரும் தான் தாய்க்கு கொடுக்கும் பாசத்தை தந்தைக்கு கொடுப்பதில் தவற விடுகிறோம்.” தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலே பார்க்கிறோம். ஆனால் அவ்வாறு தோன்றுவதற்கான காரணத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *