இத்தா இருக்கும் பெண் வெளியே செல்லலாமா?

இவ்விடயத்தை மூன்று வகைப்படுத்தலாம்

  1. தேவையின்றி வெளியே செல்லல்: இது முற்றுமுழுதாக தடையானது. உ+ம் சுற்றுலா செல்லல்
  2. இன்றியமையாத அத்தியவசியத் தேவைக்காக வெளியே செல்லல்: இவ்வேளையில் இரவோ பகலோ எந்நேரமாக இருப்பினும் வைத்தியரிடம் செல்லவேண்டியேற்படுமிடத்து கட்டாயம் செல்ல வேண்டும். உ+ம் திடீரென்று சுகமில்லாத நிலை ஏற்படுதல்.
  3. தேவைக்காக வெளியே செல்லல்: உ+ம் உதவி செய்வதற்கு ஆளில்லாத சந்தர்ப்பத்தில் உணவகத்திற்கு சென்று உணவு வாங்குதல், ஆசிரியையாக இருக்கும் பெண் இச்சம்பளம் தான் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பகலில் பாடசாலைக்கு சென்று கற்பித்தல் போன்ற தேவைகளை அளவுடன் செய்துகொள்ள முடியும்.

குறிப்பு: இத்தா இருக்கும் பெண் வெள்ளை ஆடை அணிய வேண்டிய அவசியமில்லை அத்துடன் வீட்டில் ஓர் அறையில் ஒதுங்கியிருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் இக்காலகட்டத்தில் குறிப்பாக வெளியே செல்வதாக இருப்பினும் அலங்கரித்துக்கொள்ளல், சுருமா பூசுதல், மேகப் பண்ணுதல், வாசனைத் திரவியங்கள் பூசுதல், வர்ண வர்ண புத்தாடைகளை அணிதல், அணிகலன்கள் ஆபரணங்கள் அணிதல் போன்றவற்றைத் தவிர்ப்பது கடமையாகும்.

Azhan Haneefa
Author: admin