வாசிப்பை நேசிப்போம்

வாசிக்கக் கற்றுக்கொள்கின்றவன் வாழவும் கற்றுக்கொள்கின்றான். வாசிப்பு மனிதனின் சிந்தனையை விசாலமாக்குவதுடன், ஒரு நல்ல மனிதனை உருவாக்கும். நல்ல மனிதன் நல்லதொரு சமுதாயம் படைப்பான். படிக்கும் நற்கருத்துகளும் “பசுமரத்தாணி போல்” மனதில் பதிந்து விட ஒரு வாய்ப்பாக அமைவதோடு பல் துறையில் தேர்ச்சி பெற சரியான வாழிகாட்டியே இந்த வாசிப்பு. ‘கண்டது கற்க பண்டிதனாவான்’ எனும் முதுமொழி இதனை பறைசாற்றுகிறது.

மேலும், ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! என்று வீவேகானந்தரின் பொன்மொழிக்கமைய நல்ல நூல்கள் எமக்கு அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிப்பது மாத்திரமல்லாமல் தீயவற்றை விலகி நடக்க நன் நெறிகளையும் போதிக்கும்.

அறிவியலின் முதல் நுழைவாயிலே வாசிப்பு தான். எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன் மனதில் அறியாமை இருள் படிந்திருக்கும். அறியாமையை நீக்கும் விலை மதிப்பில்லா ஒளியூட்டும் மருந்தே வாசிப்பு. ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுவதோடு புதிய விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை விதைக்கிறது வாசிப்பு.

மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு அதற்கு வரம்புமில்லை; எல்லையுமில்லை. வாசிப்பு விரிவாக விரிவாக மனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளாதிருப்பதும், தன்னைப் பற்றியே அறியாதிருப்பதுவும் எவ்வளவு பெரும் துரதிஷ்டம்.

வளர்ச்சி தன்னம்பிக்கை ஆளுமை விருத்தி ஞாபகசக்தி, அதிகரிப்பு, கிரகித்தல் என்பன எம்முன் வளர்கிறது. எனவே, மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு வாசிப்பு. வாசிக்காதவன் அரை மனிதன் ‘வாசிப்பவனே’ முழு மனிதன் ஆகும்.

சிறந்த நூல்களும் சிறந்த ஆசிரியர்களே.

மாணவர்கள் சிறந்த நூல்கள் சஞ்சிகைகளை நூலகங்களில் தேடிச்சென்று வாசிக்கப்பழகிக்கொள்ளல் வேண்டும். மாணவர்களது அறிவுப்பசிக்குக் கணனி, முகப்புத்தகங் களால் தீனி போட முடியாது. அறிவுப் பசிக்குத் தீனிபோட பாடசாலை நூலகங்கள், பொதுநூலகங்கள், பல்வேறுபட்ட நூலகங்களும் மக்களோடு இணைந்திருக்கவேண்டும்.

வாசிப்பதில் தினமும் ஈடுபடுதல் என்பதே சிறப்பாகும். நெல்லிக்கனியை உண்ணும்போது அது கசப்பான அல்லது புளிப்பான தன்மையை ஏற்படுத்தினாலும், அதனை உண்டு முடித்தபின், இனிப்பும் இன்பமும் தாமதமாகவே ஏற்படுகின்றனவல்லவா? அதனைால்தான், நல்ல ஆக்கங்களைச் சிறிது வாசித்துவிட்டு இது சுவைக்கவில்லையெனத் தூக்கியெறிந்துவிடாது தொடர்ந்து பொறுமையுடன் வாசித்து முடிக்க வேண்டும்.

வாசிக்கக் கற்றுக்கொள்கின்றவன் வாழவும் கற்றுக்கொள்கின்றான். சிறு வயதில் சுய வாசிப்பில் ஈடுபடும் பிள்ளை, எதிர்காலத்தில் சிறந்தமேதையாக விளங்குவான். வாசிப்புக்கு வரம்புமில்லை; எல்லையுமில்லை. விஷேடமாக வாசிப்பதன்; மூலம் பல நன்மைகளைப் பெறலாம். மொழித்திறன் விருத்தி, சொல்வன்மை, சொல்லாட்சி, vocabulary power என்பன விருத்தியடைகின்றது.

வாசிப்பின் மூலம் சிறு பிள்ளைகளுடைய மொழித்திறன் விருத்தியும் கேட்டல் திறனும் அதிகரிக்கின்றது அவதானித்துக்கேட்டல் குறைவாகவுள்ளவர்கள் தொழிலும் வாழ்க்கையிலும் பலவற்றை இழக்கவேண்டி ஏற்படும். ஏனையவர்கள் தொடர்பு கொள்ள அல்லது எடுத்துக்காட்ட முனையும் விடயம் என்ன என்பதை சிறந்த வாசிப்புத்திறனுள்ளவர்கள் இலகுவாக விளங்கிக்கொள்வார்கள்.

பொது அறிவு வளர்ச்சியும் ஏனையவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றை அறியும் வாய்ப்பும் கிடைக்கின்றது. தன்னம்பிக்கை, ஆளுமை விருத்தி, ஞாபக சக்தி அதிகரிப்பு, கிரகித்தல் திறன் Comprehension Power என்பவை அதிகரிக்கின்றன. பிள்ளைகள் எழுத்துப்பிழையின்றி எழுதுவதற்கு வாசிப்பு உதவுகின்றது. Avoid spelling mistakes. தர்க்க சிந்தனையும் (Critical thinking power) விருத்தியடைகின்றது

“ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக முடியும். ஒரு சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த பேச்சாளனாக முடியும்” என்ற கூற்றுக்கிணங்க வாசிப்பை உற்ற நண்பணாகவே நேசித்து அதன் சுவையும், ரசனையும், இன்பத்தையும் உணர்ந்து வாழ்வில் பல சோதனைகளை தாண்டி சாதனை புரியலாம் .எனவே வாசிப்பை நேசித்து, நேசித்த வாபசிப்பினால் வாழ்வில் உச்ச பயணடைந்து வெற்றி பெறுவோம்.

AC. Fathima Sajidha
(Ummu Adheeba)
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help