புத்தியை மழுங்கச் செய்யும் போதை

என்ன தான் இஸ்லாம் மனிதர்களுக்கு அழகிய முறையில் மிகச் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி இருந்தும் அந்த வழிமுறையை ஓர் அணுவளவேனும் பின்பற்றாத பலர் நம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரபல நகரத்தில் இன்று நடந்த சம்பவம். இஸ்லாம் எதை தடை செய்துள்ளதோ அதில் பற் பல நன்மைகள் உள்ளன.

ஒரு தாய் மற்றும் அவளது மகன் அவர்களுடைய குடும்பம் பாதை வழியாக வந்து கொண்டிருந்தார்கள். நானும் பஸ் தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தேன். அவர்களும் அவ் விடத்தை வந்ததடைந்தார்கள்.

அவர்களது முகத்தில் ஒருவித படப்படப்புடன் நிதானமற் நிலையில் சலசலப்புடன் இருந்தார்கள்.

சற்று நேரத்தில் தகாத வார்த்தை பிரயோகம் மற்றும் ஏச்சுப் பேச்சு நிறைந்த குரல் சத்தம் உரத்துக் கேட்கிறது. மக்கள் அவரவர்களுடைய வேலைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த மகன், தாய்க்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தகாத வார்த்தைகளால் ஏசுகின்றான். எந்தளவு பாரதூரமான வார்த்தைப் பிரயோகம் என்றால் புத்தியற்ற ஒரு மனிதன் கூட தன் தாயை இந்த அளவு மோசமாக வார்த்தைகளைக் கொண்டு பேச மாட்டான்.

அவன் அந்த தாய்க்கு பயன் படுத்திய வார்த்தை பிரயோகம். ஸுப்ஹானல்லாஹ்!

ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ள ஒரு விடயம் எனக்கு ஞாபகம் வந்தது அவ்விடத்தில்.

விலங்கினங்களில் எந்த ஒரு விலங்கும் தன்னை கஷ்டப் பட்டு சுமந்து பெற்றெடுத்த தாயுடன் உடலுறவில் ஈடுபட மாட்டாது. ஆனாலும் பன்றி தனது தாயுடன் உடலுறவில் ஈடுபடும். பன்றியுடைய புத்தி இந்த அளவுதான். அதான் அந்த அளவு இறைவன் அதை கேவலப்படுத்தி வைத்து இருக்கின்றான்.

அந்த மகன் தாய்க்கு பயன்படுத்தி வார்தைகள் இதை விட பாரதூரமானவை.

அந்த தாய் அருகில் வந்து தன் மகனை அடிக்குமாறு வேண்டினாள். ஒரு கணம் நான் நிதானம் இழந்து போனேன். அங்கிருந்த யாரும் இவ் விடயத்தை பார்க்கின்றார்கள் இல்லை .

அப்போது அந்த மகனை சற்று உற்று நோக்கினேன். அவன் இவ்வாறு இருக்கக் காரணம் எதுவாக இருக்க முடியும் என யோசித்தேன். திடீரென அந்த தாய் கூறினாள் “தனது மகன் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளான்” என்று மீண்டும் ஒரு முறை அவனை நான் உற்று நோக்கினேன்.

அவன் மது அருந்தி இருக்கின்றானா? என பார்த்தேன். அதற்கான அறிகுறி ஒன்றும் அவனிடம் தென்படவில்லை. திரும்ப அந்தத் தாய் “தன் மகன் கஞ்சா பாவனை செய்கின்றான்” எனக் கூறினாள்.

அதன் பின்னர் தான் விளங்கியது. ‘சொறி நாய் எப்போதும் சும்மா கத்தாது சொறி பிடித்தால் மாத்திரமே கத்துமென்று!’

ஒரு கணம் சிந்திப்போம் தான் பெற்ற பிள்ளை வழிதவறி போய் அவனால் அனைத்தையும் இழந்து நடு வீதியில் நிற்கும் தாய் தந்தையர்களின் நிலை என்னவாக இருக்கும்?

ஒரு கணம் அந்த தாய் சிந்திய கண்ணீர் துளி போதும் அந்த மகனின் வாழ்க்கை அழிந்து போவதற்கு! ஒருநாள் பத்து நிமிடம் நடந்த சம்பவம் இது. தினமும் அந்த தாய் இவனால்படும் அவஸ்தை என்னவாக இருக்கும்? சகோதர சகோதரிகளே!

பிள்ளைகளை கஷ்டப் பட்டு சுமந்து பெற்றெடுத்தும் தான் பெற்ற பிள்ளைகளின் செயல்களால் தினமும் இவ்வாறு வாழ்க்கையைத் துளைக்கும் பெற்றோர்கள் ஏராளம்.

இவைகள் அனைத்தும் நடப்பது எதனால்? இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களை நாம் செய்வதனாலும் இஸ்லாமிய வழிகாட்டல்களை நாம் உதாசீனம் செய்வதனாலேயேயாகும்.

“போதை என்பது புத்தியை மழுங்கடித்து எதையும் செய்யும் என்பதை விளங்காதவர்களாகவே நாம் இன்னும் இருக்கின்றோம்” என்பது மனதை வேதனையளிக்கும் விடயமாகும்.

என்னதான் போதை ஒழிப்பு மாநாடு நடத்தினாலும், எழுதினாலும், பேசினாலும் தாம் நினைத்து திருந்தா விட்டால் எம்மை யாராலும் திருத்த முடியாது என்பேதே நிதர்சனமாகும்.

இவன்
நபீஸ் நளீர்
(இர்பானி)

One Reply to “புத்தியை மழுங்கச் செய்யும் போதை”

Leave a Reply

Your email address will not be published.