அரசியலும் அதில் சிந்திக்க வேண்டிய மார்க்க ரீதியான விடயங்களும்

  • 13

தலைமைத்துவம் மாபெரும் அமானிதம். மக்களின் நலனை நிறைவேற்றுவதற்கும் சமூகக் கட்டமைப்பை சீர்செய்வதற்கும் அந்த அமானிதம் மார்க்க வழிகாட்டலில் பயன்படுத்தப்பட வேண்டும். மார்க்கத்தை நிலைநாட்டி உலகத்தை நிர்வகிப்பதற்கான பாதை அது. ஆனால் இன்றைய அரசியலில் மார்க்கமே காணாமல் போய்விட்டதோ என்ற எண்ணம் மட்டுமல்ல, அச்சமே தோன்றுகின்றது.

உலக விடயங்களுக்காக சமூகத்தினுள் பிளவை ஏற்படுத்தாது ஒற்றுமையை ஓங்கச் செய்யவேண்டும் என்பது இறைக் கட்டளை அல்லவா. ஒற்றுமைதான் பலம். ஆனால் இன்றைய அரசியலில் கட்சி என்றும் வேட்பாளர் என்றும் பிரிந்து ஆதரவாளர்கள் என்ற பேரில் வார்த்தைகளால் விரோதங்களையும் குரோதங்களையும் வளர்த்து சமூகக் கட்டமைப்பை உடைக்கின்றோமே இதற்காக அல்லாஹ்விடம் எமது பதில் என்ன?

“தனிமனித நலனை விட பொது நலனே முற்படுத்தப்பட வேண்டும்” என்பது மார்க்க சட்ட விதிகளில் ஒன்று. அதற்கேற்பவே அரசியலிலும் சமூக விடயங்களிலும் நாம் செயற்பட வேண்டும். அனைவரது உள்ளத்தையும் அறிந்த அல்லாஹ்வின் முன் நாம் கீழ்வரும் விடயத்தை எம்மிடம் கேட்டுப் பார்ப்போம்.

“தேர்தலுக்காக நடைபெறும் அனல்பறக்கும் இந்தப் போட்டி, புறம், காரசாரமான விமர்சனம், கருத்து முரண்பாடு போன்றவையின் நோக்கம் உண்மையில் சமூகமும் பொது நலனும் தானா?” இதற்கான விடை இல்லையேனில் நமக்காக, நம் சொந்த நலனுக்காக அடியார்களின் உரிமைகளில் இவ்வாறான அத்துமீறல்களை செய்துவிட்டு மறுமையில் நாம் எப்படி தப்பிக்க முடியும்?

அரசியல் சமூகத்துக்குப் பொருத்தமானவர் என நமக்கு விளங்கும் ஒருவரை ஆதரிக்க எப்படி நமக்கு உரிமையுள்ளதோ அது போலவே பிறருக்கும் உள்ளது. ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் நடைபெறுவது நமது வேட்பாளருக்கான ஆதரவா? அல்லது மற்ற வேட்பாளர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் இழிவுபடுத்தலா? ஏன் மற்றவர்களை கேவலப்படுத்த வேண்டும்? அதற்கு என்ன அதிகாரம் நமக்கு உள்ளது?

சமூக நலன்கருதி யாரையும் ஆதரிக்கலாம். இவரைத்தான் ஆதரிக்க வேண்டும், மற்றவர்களை ஆதரிக்கக் கூடாது என்பது வஹியில்லையே. ஆனால் நம்மில் பலபேரின் கருத்துக்கள் வஹியின் அடிப்படையிலேதான் தமது வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் போலல்லவா இருக்கின்றன.

அல்லாஹ்வைப் பயந்து கொள்வோம். தலைமைத்துவம் எப்படி அமானிதமோ அதுபோல் தெரிவு செய்வதும் அமானிதம். அதிகாரத்தை வழங்குவதும் பறிப்பதும் பேராற்றலுடைய அல்லாஹ் ஒருவனே. பேராற்றலுடைய அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியைத் தருவானாக.

பாஹிர் சுபைர்

தலைமைத்துவம் மாபெரும் அமானிதம். மக்களின் நலனை நிறைவேற்றுவதற்கும் சமூகக் கட்டமைப்பை சீர்செய்வதற்கும் அந்த அமானிதம் மார்க்க வழிகாட்டலில் பயன்படுத்தப்பட வேண்டும். மார்க்கத்தை நிலைநாட்டி உலகத்தை நிர்வகிப்பதற்கான பாதை அது. ஆனால் இன்றைய அரசியலில் மார்க்கமே…

தலைமைத்துவம் மாபெரும் அமானிதம். மக்களின் நலனை நிறைவேற்றுவதற்கும் சமூகக் கட்டமைப்பை சீர்செய்வதற்கும் அந்த அமானிதம் மார்க்க வழிகாட்டலில் பயன்படுத்தப்பட வேண்டும். மார்க்கத்தை நிலைநாட்டி உலகத்தை நிர்வகிப்பதற்கான பாதை அது. ஆனால் இன்றைய அரசியலில் மார்க்கமே…

One thought on “அரசியலும் அதில் சிந்திக்க வேண்டிய மார்க்க ரீதியான விடயங்களும்

  1. Fantastic goods from you, man. I have understand your stuff prior to and you are simply extremely wonderful. I actually like what you’ve got here, certainly like what you are saying and the best way through which you are saying it. You make it entertaining and you still care for to keep it smart. I cant wait to read much more from you. This is actually a great web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *