இந்த டயிரிய எங்கயாவது பாத்திருக்க?

  • 12

யார் நீ
காட்சி:- 05
களம்:- ரஞ்சித்தின் ஆபிஸ்
கதாப்பாத்திரங்கள்:- ரஞ்சித், தேவா, ரமனி, கெளஷல்யா, ரோஷன், சாவித்திரி, சுந்தரம்

(ரஞ்சித்தின் பொறுமை எல்லை மீறியது. தேவாவின் சொத்துக்கள் பூராகவும் தன் பக்கம் வர வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்காக தேவாவை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கே ரமனியையும், மற்றும் அனைவரையும் அழைத்து வந்து தேவாவை மிரட்டி காரியம் சாதிக்க முனைந்தான்.

கோபத்தில் உச்சத்தில் இருந்த ரஞ்சித் ரமனியை இழுத்துச் சென்று ஒரு இருட்டறையில் தள்ளிவிட்டான்.

ரஞ்சித்:- வாடி ஒன்ன. ஒனக்கு இந்த யெடம் தான்டி மாளிக.. வா!

ரமனி:- அம்மா. கடவுளே என்ன பண்ண போற? ஒன்ன யெவ்வளவு நல்லவன்னுநம்பினே! ஆனா நீ இப்படி கொடூரமானவனா இருக்கியே!

ரஞ்சித்:- அன்னிக்கி என்னமோ பேசிக் கிழிச்சியே?
ஆமான்டி நீயும், தேவாவும் கூலா வாழ்க்க நடத்துவிங்க.
நா மட்டும் ஒங்களுக்கு வேலக்காரனா நடந்துகிட்டு இருக்கனுமா?

ரமனி:- என்ன நீ இப்படி எல்லாம் பேசுற??
ச்சசசசச நீ இப்படியா பட்டவனா?

ரஞ்சித்:- நீயெல்லாம் ஜோடியாக கொஞ்சிகிட்டு இருப்பீங்க!
நா ஏக்கத்தோட பாத்துக்கிட்டு இருக்கனுமா?
நா என்ன ஒனக்கும் ஓம் புருஷனுக்கம் வேலக்காரனா?

ரமனி:- டேய் வார்த்தைய அளந்து பேசு.
ஒரு புடி மண்ணுக்காக என் புருஷன தப்பா பேசாதடா!

ரஞ்சித்:- அடச்சே, சும்மா இரு.
டேய் அந்த கெழவிய இழுத்துட்டு வாடா இங்க.
அவதான் யெல்லா கள்ள வேலையும் பாக்குறது!

கெளஷல்யா:- விடுடா என்ன!
என்னடா இது என்ன இங்க அழைச்சிட்டு வந்திருக்க?
ரமனியை மட்டும் தானே கொண்டு வரனும்னு சொன்ன!
இங்க என்ன வெச்சு என்ன பண்ண பாக்குற?

ரோஷன்:- இனி ஒங்க யெல்லார்க்கும் இது தான் வீடு!
சாவோட வீடு!
ஒன்ன யெல்லா என்ன பண்ணுறேன்னு பாரு.

ரமனி:- கடவுளே இது என்ன சோதனடா?
யெதுக்காக எங்கள கஷ்டப்படுத்துற?

கெளசல்யா :- டேய் ரஞ்சித் என்ன யெதுக்குடா இங்க வச்சிருக்க?

ரமனி:- வாய மூடு நீயெல்லாம் ஒரு அம்மாவாடி?
நீ யொரு பொம்பளயே கெடயாது.
கொஞ்சம் காசுக்காக என் வாழ்க்கையே சூனியமாக்கிட்டியேடி!

ரோஷன் :- ஒங்க எல்லாருக்கும் இன்னொரு ஸர்ப்பரைஸ் காத்திருக்கு!
ஒங்களோட தேவா சார பாக்கணுமா?

ரமனி:- தேவா. என்னோட தேவாவ இத்தன வருஷமா இங்கயாடா வச்சிகிட்டு இருக்க?

சாவித்திரி :- எங்கள எதுக்குடா இப்ப இங்க வச்சிருக்க பதில் சொல்லுடா?

ரஞ்சித்:- சொத்தோட பத்திரம் எங்க இருக்குனு சொன்னா எல்லாத்துக்கும் பதில் கெடச்சிரும். அவ்வளவு தான்!

ரமனி :- ஒனக்கு யெதுக்குடா நா அதையெல்லாம் சொல்லனும்?
என் தேவாவ எனக்கு காட்டுடா!

ரஞ்சித்:- பதறாத நித்தியா! பொறுமயா இரு. ஒனக்கு காட்டாம இருப்பானா ஒன்னோட தேவாவ?

ரோஷன் :- டேய் இங்குட்டு வாரியா? இந்த நாய கூண்டுகுள்ள போட.

ரஞ்சித்:- யாரப்பா இவ்வளவு மரியாதைக்குரியவரு?

ரோஷன் :- இதோ இவருதான்! சத்தத்த கொரச்சிட்டு கம்முனு வாடா!

தேவராமன்:- ஐய்யோ! கடவுளே எங்கடா நா இருக்கே?
என்ன என்னடா பண்ண போறீங்க?
என்ன எடம்டா இது?
டேய் ரஞ்சித் சொல்லிட்டு போடா?

ரோஷன் :- இப்ப கம்முனு கெடக்குரியா இல்லயா?
ஓங்கி ஒன்னு வச்சன்னா!

ரஞ்சித்:- ஹாய் தேவா சார். எப்படி இருக்கீங்க நலம் தானா?
அதில்ல ஒங்களுக்கு ஒரு ஸர்ப்பரைஸ் வச்சிருக்கேன்.

தேவா:- அட கருமம் புடிச்சவனே நீயா? யெதுக்குடா நீ இங்க வந்த?

ரோஷன் :- தேவா நீ இந்த டயிரிய எங்கயாவது பாத்திருக்க? நல்லா பாத்து சொல்லு!

தேவா:- கடவுளே! இது எப்படிடா ஒனக்கு கெடச்சது? இது என்னோட ரமனி க்கு நா யெழுதி வச்சதாச்சே!

ரஞ்சித்:- நீ மறைச்சு வச்ச சொத்த ஒன்னோட மாமியாரே எங்கிட்ட கொடுத்துட்டா! இன்னக்கே சொத்து யெல்லா யெம் பேர்ல வரும்! ஸைன் பண்ண ரெடியா இரு!

ரோஷன் :- ஒனக்கான ஸர்ப்பரைஸ் என்னான்னா ஒன்னோட ரமனி ஒனக்கு பக்கத்துல தான் இருக்கா!

தேவா:- என்னது என்னோட ரமனியா?
அவள என்னடா செஞ்சிங்க?
இப்ப அவ இங்கயா இருக்கா?
சொல்லுடா, சொல்லுடா?

ரஞ்சித்:- ரோஷன் கதவ மூடிட்டு வெளில வா.

தேவா :- பதில சொல்லாம எங்கடா போற?
டேய் ரஞ்சித், என்னோட ரமனி எங்கடா இருக்கா?
ரஞ்சித்! ரஞ்சித்!

சுந்தரம் :- ஐய்யா! இங்கயா ரமனி அம்மா இருக்காங்க??
எப்படி சரி நா கண்டுபுடிச்சி கொடுக்குறேயா. பொறுமயா இருங்க. 1நா பேசுறது ஒங்களுக்கு கேக்குதா? ஐய்யா! ஐய்யா!

தேவா :- கேக்குது சுந்தரம் கேக்குது.
மொதல்ல போய் என்னோட ரமனி
எங்க இருக்கான்னு பாரு!

ரஞ்சித்:- நாளைக்கே நாம வீட்டுக்கு போய் பத்தரத்த எடுத்தாகனும். இல்லேன்னா காலம் வேஸ்ட் ஆயிரும்!

ரோஷன் :- சரி நண்பா அத கட்சிதமா பண்ணிடலாம். இப்ப நீ ரெஸ்ட் எடு. நாளைக்கு நடக்க போறத நாளைக்கு பாப்பம் ஒகே?

ரஞ்சித்:- நல்ல வேல ரமனி பெட்கு கீழால டயிரிய வச்சா! இல்லன்னா கெளஷல்யா எப்படி யெனக்கு கொடுப்பா?

ரோஷன் :- இருந்தாலும் டயிரி ரொம்ப பத்துரமா என் கிட்டே இருக்கட்டும். ஓகே.

ரஞ்சித்:- ஹ்ம்ம்ம் ஓகே நண்பா!

(பக்கத்தில் வந்த பின்பும் பார்க்க முடியாத சூழ்நிலை. எப்படித்தான் நாங்கள் சந்திப்போமோ? என ரமனியும், தேவாவாவும் ஒரு பக்கம் தனிமையில் வேதனையில் திண்டாட, புலி வேட்டைக்குச் செல்வது போல ரஞ்சித்தின் செயல்கள் தொடர்கின்றன. உண்மையில் பத்திரம் யார் வசம் செல்லப் போகிறது. பார்த்திருங்கள். அடுத்த காட்சியில் என்னுடையதும், உங்களதுமான கேள்விகளுக்கு பதில்கள் காத்திருக்கின்றன.)

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

யார் நீ காட்சி:- 05 களம்:- ரஞ்சித்தின் ஆபிஸ் கதாப்பாத்திரங்கள்:- ரஞ்சித், தேவா, ரமனி, கெளஷல்யா, ரோஷன், சாவித்திரி, சுந்தரம் (ரஞ்சித்தின் பொறுமை எல்லை மீறியது. தேவாவின் சொத்துக்கள் பூராகவும் தன் பக்கம் வர…

யார் நீ காட்சி:- 05 களம்:- ரஞ்சித்தின் ஆபிஸ் கதாப்பாத்திரங்கள்:- ரஞ்சித், தேவா, ரமனி, கெளஷல்யா, ரோஷன், சாவித்திரி, சுந்தரம் (ரஞ்சித்தின் பொறுமை எல்லை மீறியது. தேவாவின் சொத்துக்கள் பூராகவும் தன் பக்கம் வர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *