வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது எது

  • 8

பௌதீக விடயங்கள் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருந்தால், எமக்குத்தான் வெற்றி, நிச்சயமான எமது வெற்றி, இத்தனை வாக்குகள் நிச்சயம் எமக்குக் கிடைக்கும், இவர் நிச்சயம் தோல்வியடைவார் என்ற ஆரூடங்கள் தான் பேஸ் புக்கில் தற்போது அதிகம். அதுதான் ஹொட் நிவ்ஸ். தேர்தல் இன்னும் நடைபெறவே இல்லை. ஆனால் கணிப்பீடுகள் மூலம் மறைவான முடிவையே அறிவிக்க ஆரம்பித்து விட்டனர். நோக்கத்தை இறைவன் அறிவான். ஆனால் நமது வார்த்தைகள் நம் ஈமானில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக.

வெறும் மக்களின் எண்ணிக்கையை மையப்படுத்திய வெற்றி தோல்வியென்ற கணிப்பீடுகள், எதிர்வு கூறல்கள் பயனளிக்கமாட்டது. மார்க்க ரீதியாக அவ்வாறு முடிவு செய்வதும் கூடாது. அதுவும் கணிப்பீடுகள் என்ற பெயரில் நாளைய வெற்றி தோல்வியை ‘நிச்சயம்’ என்ற சொல் மூலம் உறுதிப்படுத்துவது ஆகுமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன், அனைத்தையும் மிகைத்தவன். அவனுக்கு மட்டுமே உரிய மறைவானவற்றில் நாம் பேச முடியாது.

அதுவும் சிலர் (இன்ஷா அல்லாஹ்) “அல்லாஹ் நாடினால்” என்ற வார்த்தையைக் கூடப் பாவிக்காது எதிர்கால விடயங்கள் பற்றிப் பேசுவது மிகக் கவலையாகும்.

நபியே! எந்த விடயத்தையும் அல்லாஹ் நாடினால் தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று கூறாதீர்கள். (அல்குர்ஆன்)

மக்களின் எண்ணிக்கை மற்றும் பௌதீக விடயங்களால் மட்டும் வெற்றி தோல்வி தீர்மானிக்கப் படுமென்றிருந்தால்,

பத்ர் களத்தில் பிரம்மாண்டமான குரைஷியர் படை ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் மிகச் சிறிய தொகையினரான முஸ்லிம்களே வெற்றிபெற்றனர்.

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்தபோது அல்லாஹ் ‘பத்ர்’ களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன்)

அதற்காக நபிகளார் சளைக்காமல் மேற்கொண்ட முயற்சிகள், பிரார்த்தனைகள் சொல்லில் அடங்காதவை.

ஹுனைன் களத்தில் எண்ணிக்கையில் மிகக் கூடுதலாக இருந்த முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. அவர்களது பெரும் எண்ணிக்கையும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. அல்லாஹ் அதனை இவ்வாறு கூறுகின்றான்:

அல்லாஹ் பல களங்களில் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் நாளில் உங்களின் எண்ணிக்கை மமதையளித்தபோது அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின் புறங்காட்டி ஓடினீர்கள்.

ஆக ஒரு முஸ்லிம் எண்ணிக்கை மற்றும் பௌதீக விதிகளின் மீது மட்டும் நம்பிக்கை கொள்ளக் கூடாது. அவற்றை மையமாக வைத்து ஒரு விடயத்தை அணுகவும் கூடாது. எவ்வளவு பிரம்மாண்ட பௌதீக ரீதியான விதியையும் விட வல்லமையும் ஆற்றலும் கொண்டவனே அல்லாஹ் என்பதுதான் நமது ஆழமான நம்பிக்கை.

எனவே மக்களின் ஆதரவு, கணிப்பீடுகள் போன்றவற்றை மாத்திரம் கொண்டு வெற்றி தோல்வியையை முடிவு செய்து பேசாதிருப்போம். அது அல்லாஹ்வுடனான ஒழுக்கயீனமான நடத்தையாகும். சிலவேளை எமது வார்த்தைகள் எமது ஈமானையும் பலமிழக்கச் செய்து விடும். ஆகக் குறைந்தது இதுதான் எமது கணிப்பீடு, ஆனால் யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! என்றாவது நாம் பேச எம்மைப் பழக்கிக் கொள்வோம்.

யா அல்லாஹ்! எம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவாயாக.

பாஹிர் சுபைர்

பௌதீக விடயங்கள் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருந்தால், எமக்குத்தான் வெற்றி, நிச்சயமான எமது வெற்றி, இத்தனை வாக்குகள் நிச்சயம் எமக்குக் கிடைக்கும், இவர் நிச்சயம் தோல்வியடைவார் என்ற ஆரூடங்கள் தான் பேஸ் புக்கில்…

பௌதீக விடயங்கள் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருந்தால், எமக்குத்தான் வெற்றி, நிச்சயமான எமது வெற்றி, இத்தனை வாக்குகள் நிச்சயம் எமக்குக் கிடைக்கும், இவர் நிச்சயம் தோல்வியடைவார் என்ற ஆரூடங்கள் தான் பேஸ் புக்கில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *