உண்மையான தலைவர் மாமனிதர்

  • 28

நபிகள் நாயகம் அவர்கள்…எம் வாழ்வுக்கான அழகிய முன்மாதிரி, மிகச்சிறந்த ஆறுதல். நபியவர்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. சற்று நேரம் ஒதுக்கி வாசியுங்கள். உன் நிலையையும் நபிகளாரின் நிலையையும் ஒப்பிட்டுப்பார். மனம் திறக்கும். கஷ்டத்திலும் வழி பிறக்கும்.

நீ பெற்றோரை இழந்திருக்கின்றாயா? நபியவர்கள் பிறக்க முன் தந்தையை இழந்ததுடன் சிறு வயது முதல் அநாதையாகவே வளர்ந்திருக்கின்றார்கள். உன் பிள்ளைகளில் யாரையாவது இழந்திருக்கின்றாயா? பாத்திமா (ரழி) அவர்களைத் தவிர நபிகளாரின் ஏனைய அனைத்துப் பிள்ளைகளும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே மரணித்துவிட்டார்கள். பாத்திமா நாயகியும் நபிகளாரின் மரணத்தின் பின் சிறிது நாட்களில் இறையடி சேர்ந்தார்கள்.

உன் பிள்ளைகளில் எவரேனும் விவாகரத்துப் பெற்றனரா? நபிகளாரின் இரு பிள்ளைகள் விவாகரத்துப் பெற்றவர்கள். உன் மான விடயத்தில் எவராவது கலங்கம் ஏற்படுத்தினார்களா? நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா அவர்களின் மானத்தில் விபச்சாரக் குற்றம் சுமத்தி கலங்கம் ஏற்படுத்தினார்கள். அந்தக் கலங்கம் இறை வஹி மூலம் நீக்கப்பட்டது.

உன் வாழ்வில் கஷ்டமான சூழலை எதிர் கொண்டிருக்கின்றாயா? அல்லது அன்றாட உணவுக்குக் கூட கஷ்டப்படுகின்றாயா? நபிகளாரின் வீட்டில் பல நாட்கள் அடுப்பு பற்ற வைக்காமலேயே கழிந்திருக்கின்றன.

வாழ்வாதாரத்தில் கஷ்டப்படுகின்றாயா? அல்லது பிறர் உன்னை ஒதுக்கி நடக்கின்றனரா? நபிகளார் மூன்று வருடங்கள் உணவுமின்றி நீருமின்றி முற்றுகையிடப்பட்டார்கள். அவர்கள் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்.

எவரேனும் உன்னைப் பொய்ப்பித்து உன் வார்த்தைகளை ஏற்காமலிருக்கின்றனரா? நபியவர்களுடைய பேச்சைக் கேட்காது அவர்களது சமூகமே அவர்களைப் பொய்ப்பித்ததுடன் மிகக் கடுமையாக அநியாயமும் செய்தனர்.

உன்னை கேவலப்படுத்துகின்றனரா? நபிகளார் சந்தித்த அவமானங்கள் கொஞ்சமல்ல. அவர்கள் தொழும்போது அவர்களின் மீது அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கழிவுகளை வீசியதுடன் கேலி செய்தும் சிரித்தனர்.

உனக்கு அண்டை வீட்டான் நோவினை செய்கின்றானா? நபியவர்களுக்கு முழு ஊரும் சேர்ந்து அநியாயம் செய்தனர். இறுதியில் அவர்கள் நேசித்த மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வெளியேறினார்கள்..

நீ கடனாளியாக இருக்கின்றாயா? நபியவர்கள் மரணிக்கும் வேளை அவர்களது கேடயம் அடகு வைக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வை வணங்கும் விடயத்தில் களைப்பை உணர்கின்றாயா? நபியவர்கள் தமது கால்கள் வீங்குமளவு நின்று வணங்கியுள்ளார்கள்.

படிப்பினைகள் சில:
  1. நபிகளார் நம் வாழ்வின் அழகிய முன்மாதிரி.
  2. இந்த கஷ்டங்களில் பொறுமையுடன் இருந்து சாதித்து வெற்றி கண்டார்கள்.
  3. பொறுமை மிகப் பெரும் வணக்கம். அதனால்தான் அதற்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது.
  4. இவற்றில் ஓரிரு கஷ்டங்கள் வரலாம். ஆனால் இந்த அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர், மாமனிதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகள் எம் வாழ்வில் வரவேண்டும்.

யா அல்லாஹ்! எம் உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மறுமையில் சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருள்வாயாக!

பாஹிர் சுபைர்

நபிகள் நாயகம் அவர்கள்…எம் வாழ்வுக்கான அழகிய முன்மாதிரி, மிகச்சிறந்த ஆறுதல். நபியவர்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. சற்று நேரம் ஒதுக்கி வாசியுங்கள். உன் நிலையையும் நபிகளாரின் நிலையையும் ஒப்பிட்டுப்பார். மனம் திறக்கும். கஷ்டத்திலும் வழி பிறக்கும்.…

நபிகள் நாயகம் அவர்கள்…எம் வாழ்வுக்கான அழகிய முன்மாதிரி, மிகச்சிறந்த ஆறுதல். நபியவர்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. சற்று நேரம் ஒதுக்கி வாசியுங்கள். உன் நிலையையும் நபிகளாரின் நிலையையும் ஒப்பிட்டுப்பார். மனம் திறக்கும். கஷ்டத்திலும் வழி பிறக்கும்.…

2 thoughts on “உண்மையான தலைவர் மாமனிதர்

  1. Great – I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs as well as related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your client to communicate. Nice task.

  2. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly very often inside case you shield this hike.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *