அரபு மொழி – சிறப்பியல்புகளும் முக்கியத்துவமும்

  • 857

பல்வேறுபட்ட மொழிகளையும் விதம் விதமான பாசைகளையும் வல்ல இறைவன் உலகத்தாருக்கு ஒரு பேரருளாகவும் அவனது படைப்பின ஆற்றலுக்கு ஒரு சான்றாகவும், மாந்தர்களுக்கிடையிலான உரையாடல் ஊடகமாகவும ஆக்கிவைத்துள்ளான். மனித வரலாற்றுத் தொடக்கம் தொட்டு இன்று வரை உயிர் வாழக்கூடிய மொழிகள் மற்றும் காலத்தால் அழிந்து பாவனையிழந்து இறந்து போன மொழிகள் சுமார் 7000 வரை இருப்பதாக மொழிகள் ஆய்வுக்கான சர்வதேச நிலையம் சொல்கிறது. அதில் இன்று வரை உயிர் வாழும் பிரதான மொழிகள் 200 மாத்திரமே உள்ளது.

அந்த வகையில் உலகளாவிய மொழிகளில் அரபு மொழி தொன்மையான மொழியாகவும் இன்று வரை உயிரோட்டமுள்ள மொழியாகவும் கருதப்படுகிறது. எகிப்தில் நடந்த தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட 4000 ஆம் வருடம் பழமைவாய்ந்த புராதன அரபு ஸ்கிரிப்ட் அதற்கு சான்றாக உள்ளது. சர்வதேச மொழிகளில் 6 ஆவது இடத்தில் உள்ள அரபு மொழி உலக வர்த்தக மொழியாகவும் கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் 18 ம் தேதி சர்வதேச அரபு மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

அரபு மொழியின் தனிச் சிறப்பம்சங்கள் – சில வரிகளில்.
  • ஐக்கியநாடுகள் சபையின் உலக மொழிகள் தரவரிசையில் அரபு மொழி ஆறாவது இடத்தில் உள்ளது.
  • உலகெங்கும் சுமார் 45 கோடி மக்கள் அரபு பாசையை தாய்மொழியாக பேசுகின்றனர்.
  • மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வட ஆபிரிக்க நாடுகள், ஈரான் துருக்கி போன்ற நாடுகளிலும் இம்மொழியை பேசுவோர் வாழ்ந்து வருகின்றனர்.
  • அரபு நாடுகளில் அரபு மொழியே முதல் தர உத்தியோகபூர்வ மொழியாக காணப்படுகிறது.
  • அரபு மொழி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் சமய வழிபாட்டு மொழியாக கருதப்படுகிறது.
  • துருக்கி, பாரசீகம், பிரஞ்சு, ஸ்பானிஷ், குர்திஷ், மலாய், ஆங்கில மொழிகளில் அரபு மொழியின் தாக்கமும் செல்வாக்கும் பரவலாக காணப்படுகிறது.
  • துருக்கி, குர்திஷ், மலாய், பாரசீக மொழிகள் அரபு எழுத்துக்களால் எழுதப்படுகிறது.
  • “ழாத்” மொழி என அரபு மொழிக்கு ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. ஏனெனில், அந்த உச்சரிப்பு அந்த மொழியில் மாத்திரமே உள்ளது.
  • உலக அழகியல் கலைகளில் அரபு எழுத்தணிக் கலை மிகப் பிரதானமானது.
  • ஆங்கில மொழியில் 600 ஆயிரம் சொற்களே இருக்க, அரபு மொழியில் 12.3 மில்லியன் சொற்கள் உள்ள சொல்வளம் மிக்க பாசையாகும்.
  • லத்தீன் மொழியில் 700 மூலச் சொற்களே இருக்க அரபு மொழியில் 16 ஆயிரம் மூலச் சொற்களைக் கொண்டுள்ளது.
  • பாரசீகம், ஹிப்ரு மொழிகள் போலவே வலது புறம் எழுதப்படும் மொழியாகும்.
  • 28 அகர முதலி எழுத்துக்களைக் கொண்டது.
  • அரபு மொழி உலகத்தாருக்கு நல்வழி காட்ட வந்திறங்கிய இறுதி வேதம் திருக்குர்ஆனின் மொழியாகும்.
ஏன் நாம் அரபு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்?

அரபு மொழி காலத்தால் அழியாது உயிர் வாழும் வல்லமை மிக்கது. அழிந்து போகவும் முடியாது. காரணம், அது இருதி வேதம் அல்குர்ஆனோடு தொடர்புற்ற மொழி என்பதாகும். யுக அழிவு நாள் வரை அது நிலைத்து நிக்க வேண்டிய வரத்தை பெற்றுள்ளது.

அரபு இலக்கிய மரபுகள் உலகப் புகழ்பெற்றவை. சொல்நயம் மிக்க அதன் எழுத்து நடையிலும் கவிதை நடையிலுமான பாரம்பரிய இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரபு மொழியை திறம்பட கற்பதற்கான இலக்கணங்களாக (علم الصرف – சொல்லிலக்கணம்) மற்றும் (علم النحو – எழுத்திலக்கணம்) காணப்படுகிறது. இம்மொழியை கற்பதற்கான நுழைவாயிலாக இவ்விரு கலைகளும் காணப்படுகிறது. இம்மொழியை அலங்கரிக்கும் ( علم البلاغة – பொருளிலக்கணம்) ஆனது அரபு மொழியின் தனித்துவமான சிறப்பாகும். இக்கலைக்குள் மாத்திரம் (علم البيان / علم الماني / علم البديع) என மூன்று அணியிலக்கணக் கலைகளை கொண்டுள்ளது.

முஸ்லிம்களின் சமைய வழிபாட்டு மொழி என்பதால் ஆன்மீக பாதையை செப்பனிட அரபு மொழியை கற்றுக்கொள்ளவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இன்றியமையாததாக உள்ளது. இஸ்லாத்தின் இரு புனித ஏடுகளான திருக்குர்ஆனும் நபி போதனைகளும் அரபு மொழியை மூலமாக கொண்டிருப்பதால் அதனை கற்றுக்கொள்வது ஒரு வணக்கமாகவும் இறைவனையும் ஆன்மீக வழியையும் கண்டறிந்து ஒழுக ஒரு சாதனமாகவும் காணப்படுகிறது. (ஒரு கட்டாயப் பணி செவ்வனே நடக்க உறுதுணையாக இருப்பவைகளை செய்வதும் கட்டாயப் பணியாகும் – ما لا يتم الواجب إلا به فهو واجب) என்ற சன்மார்க்க பொது விதிமுறைக்கு அமைய அரபு மொழி படிப்பது கடமையாகிறது.

இறைவனின் இறுதி வழிகாட்டியான அல்குர்ஆனை அதன் மூல மொழியான அரபியினூடாக ஒரு வசனத்தை புரிந்து கொள்வதற்கும் மொழி பெயர்புக்களினூடாக பல முறை அறிவதற்குமிடையில் பல நூறு வேறுபாடுகள் உள்ளது.

கருத்துச் செறிவும் கலை நயமும் நிறைந்து காணப்படும் அரபுப் பாசையினூடாக வஹியின் அர்தங்களையும் நோக்கங்களையும் அறியக்கிடைக்கும் இனிமையை அரபு மொழி படித்தால் புரிந்துகொள்ளலாம்.

இன மொழி வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்கம் இஸ்லாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவைகள் மூலம் இறைவனை அணுகவோ நெருங்கவோ முடியாது என்பதில் இரு கருத்தும் இல்லை. ஆனாலும் உலகத்தாரின் இறுதி வழிகாட்டலான அல்குர்ஆன் வேத வரிகளை அணுகும் ஊடகம் என்ற வகையில் அரபு மொழி சிறப்படைகிறது.

வர்த்தக, தொழில் வாய்ப்பு, மற்றும் உலகாயித நோக்கங்களுக்காக ஆங்கிலம், மற்றும் இதர மொழிகளின் முக்கியத்துவம் அறிந்த நமது சமூகம், அவைகளை கற்றுப் பயன் பெறவென இளம் சந்ததியினரை பல நூறுகள் செலவழித்து பகுதி நோர வகுப்புக்களுக்குக் கூட அனுப்பும் நாம் அரபு மொழியின் தேவை அவசியம் பற்றியும் புரிந்து அதைக் கற்க கரிசனம் காட்டப்படல் வேண்டும்.

Imran Farook

பல்வேறுபட்ட மொழிகளையும் விதம் விதமான பாசைகளையும் வல்ல இறைவன் உலகத்தாருக்கு ஒரு பேரருளாகவும் அவனது படைப்பின ஆற்றலுக்கு ஒரு சான்றாகவும், மாந்தர்களுக்கிடையிலான உரையாடல் ஊடகமாகவும ஆக்கிவைத்துள்ளான். மனித வரலாற்றுத் தொடக்கம் தொட்டு இன்று வரை…

பல்வேறுபட்ட மொழிகளையும் விதம் விதமான பாசைகளையும் வல்ல இறைவன் உலகத்தாருக்கு ஒரு பேரருளாகவும் அவனது படைப்பின ஆற்றலுக்கு ஒரு சான்றாகவும், மாந்தர்களுக்கிடையிலான உரையாடல் ஊடகமாகவும ஆக்கிவைத்துள்ளான். மனித வரலாற்றுத் தொடக்கம் தொட்டு இன்று வரை…

83 thoughts on “அரபு மொழி – சிறப்பியல்புகளும் முக்கியத்துவமும்

  1. Wow that was odd. I just wrote an extremely long comment but after I clicked submitmy comment didn’t appear. Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted tosay excellent blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *