அறிஞர்களின் பொன்மொழி

  • 11

 ‏قال الإمام ابن القيم -رحمه الله-:

من لم يعرف الحق فهو ضال، ومن عرفه وآثر غيره عليه فهو مغضوب عليه، ومن عرفه واتبعه فهو مُنعم عليه.

[اغاثة اللهفان (٢٤/١)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சத்திய கொள்கையை அறியாதவன் வழிகேடன் ஆவான், அதை அறிந்து அதை விட வேறொன்றை தேர்ந்தெடுத்தவன் சபிக்கப்பட்டவனாவான், அதை அறிந்து பின்பற்றியவன் அருள்பாலிக்கப்பட்டவனாவான். (நூல்: இஙாஸதுல் லஹ்ஃபான், பாகம்: 01, பக்கம்: 24)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فضل الأعمال وثوابها ليس لمُجرَّد صُورها الظاهرة، بل لحقائقها التي في القلوب .

(منهاج السنة النبوية (٢٢٦/٦)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நல்லறங்களின் சிறப்பும் அவைகளுக்கான கூலியும் வெறுமனே வெளிப்படையான தோற்றங்களை வைத்து கிடைக்காது, மாறாக உள்ளங்களில் உள்ள எதார்த்தங்களை கொண்டுதான் கிடைக்கும். (நூல்: மின்ஹாஜுஸ் ஸுன்னதின் நபவிய்யா, பாகம்: 06, பக்கம்: 226)

: قال الإمام ابن القيم -رحمه الله-:

الزهد ترك مالاينفع في الآخرة، والورع: ترك مايخشى ضرره في الآخرة.

(الفوائد( ٢٤١)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: துறவரம் என்பது மறுமையில் பயனளிக்காததை விடுவதாகும், பேணுதல் என்பது மறுமையில் தீங்குக்கு பயப்படுவதை விடுவதாகவும். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 241)

‏✿‏ قال الإمام ابن القيم -رحمه الله-:

فَإِن الْعَالم إِذا زرع علمه عِنْد غَيره ثمَّ
مَاتَ جرى عَلَيْهِ أجره وَبَقِي لَهُ ذكره وَهُوَ  عمر ثَان وحياة أخرى وَذَلِكَ أحق مَا تنافس فِيهِ الْمُتَنَافسُونَ وَرغب فِيهِ الراغبون.

[ مفتاح دار السعادة (١٤٨/١)]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (மார்க்க) அறிஞர் தனது (மார்க்க) அறிவை மற்றவருக்கு விதைத்துவிட்டு பின்பு மரணித்து விட்டால் அதனுடைய கூலி அவருக்கு கிடைக்கும், அவரை பற்றிய பேச்சு அவருக்காக இருக்கும், அதுவே இரண்டாவது வாழ்நாளும் மற்றொரு வாழ்க்கையுமாகும், அதுவே இதில் போட்டியிடுபவர்கள் போட்டியிடுவதற்கும், ஆசைப்படுபவர்கள் ஆசைப்படுவதற்கும் மிக தகுதியுள்ள ஒன்றாகும். (நூல்: மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 148)

 قال الإمام ابن القيم -رحمه الله-:

ومن رغب عن إنفاق ماله في طاعة الله، ابتلي بإنفاقه لغير الله وهو راغم.

مدارج السالكين 165/1

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யார் தனது செல்வத்தை அல்லாஹுக்கு வழிப்படும் விடயத்தில் செலவு செய்ய விரும்பவில்லையோ அவன் இழிவான நிலையில் அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றுக்கு செலவு செய்வதன் மூலம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவான். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 01, பக்கம்: 165)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ومن كان الله معه دفع عنه من أنواع الأذى والمضرات ما لا يدفع عنه أحد من خلقه.

قاعدة في الصب100

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ படைப்புக்களில் எவரும் தடுக்க முடியாத அனைத்து வகையான நோவினைகளையும் தீங்குகளையும் அவரை விட்டும் அவன் தடுத்து விடுவான். (நூல்: காயிததுன் பிஸ்ஸப்ர், பக்கம்: 100)

قال الإمام ابن القيم -رحمه الله-:

ﻣﻦ ﻋُﺮﺽ ﻋﻠﻴﻪ ﺣﻖٌ ﻓﺮﺩَّﻩ ﻓﻠﻢ ﻳﻘﺒﻠﻪ ﻋُﻮﻗﺐ ﺑﻔﺴﺎﺩ ﻗﻠﺒﻪ ﻭﻋﻘﻠﻪ ﻭﺭﺃﻳﻪ.

[ ﻣﻔﺘﺎﺡ ﺩاﺭ اﻟﺴﻌﺎﺩﺓ ٩٩/١ ]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யாருக்கு சத்திய கொள்கை எடுத்து காட்டப்பட்டு அதை அவன் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தால் அவனுடைய உள்ளம், புத்தி, அபிப்பிராயம் போன்றவை சீர்கெட்டு போவதன் மூலம் தண்டிக்கப்படுவான். (நூல்: மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 99)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

ﻣﻦ ﺗﻌﻮﺩ ﻣﻌﺎﺭﺿﺔ اﻟﺸﺮﻉ ﺑﺎﻟﺮﺃﻱ ﻻ ﻳﺴﺘﻘﺮ ﻓﻲ ﻗﻠﺒﻪ اﻹﻳﻤﺎﻥ .

[ ﺩﺭء التعاﺭﺽ ١٧٨/١

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அபிப்பிராயத்தை (சொந்தக்கருத்தை) கொண்டு மார்க்கத்தோடு முறண்பட யார் வழக்கமாக்கிவிட்டானோ அவனுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை தங்கிவிடாது. (நூல்: தர்வுத் தஆருள், பாகம்: 01, பக்கம்: 178)

 قال الإمام ابن القيم -رحمه الله-:

جُعِلَ العِلم للقلوب كالمطر للأرض، فكما أنهُ لا حياة للأرض إلا بالمطر، فكذلك لا حياة للقلب إلا بالعِلم.

[ مفتاح دار السعادة ١٦٨/١ ]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பூமிக்கு மழையை போல உள்ளங்களுக்கு கல்வியை ஆக்கப்பட்டுள்ளது, மழை மூலம் தான் பூமிக்கு வாழ்வு இருப்பதை போல கல்வி மூலம் தான் உள்ளத்துக்கு வாழ்வு உண்டு. (நூல்: மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 168)

قال الإمام ابن القيِّم -رحمه الله-:

قبيحٌ بالعبد أن يقول بلسانه الله أكبر وقد امتلأ قلبه بغير الله.

 بدائع الفوائد ٢ / ١٩٦

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியானின் உள்ளம் அல்லாஹ் அல்லாத வேறு ஒன்றின் மூலம் நிரம்பிய நிலையில் அல்லாஹ் மிகப்பெரியவன் என்று அவன் தனது நாவினால் கூறுவது அவனுக்கு அசிங்கமாகும்.  (நூல்: பதாயிவுல் பவாயித், பாகம்: 02, பக்கம்: 196)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 ‏قال الإمام ابن القيم -رحمه الله-: من لم يعرف الحق فهو ضال، ومن عرفه وآثر غيره عليه فهو مغضوب عليه، ومن عرفه واتبعه فهو مُنعم…

 ‏قال الإمام ابن القيم -رحمه الله-: من لم يعرف الحق فهو ضال، ومن عرفه وآثر غيره عليه فهو مغضوب عليه، ومن عرفه واتبعه فهو مُنعم…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *