ஐரிஸுக்கு புதையல் பற்றி தெரியுமா?

Advertisements
கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 12】

கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்கள் கொண்ட பெரிய கப்பல் இரவு பகல் பாராது குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணித்தது. எப்படியும் அவர்கள் தேடும் தீவு பெர்முடா வளைவில் தான் இருக்க வேண்டும் என்பது கப்பலில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆபத்து என்று அறிந்தும் அற்புதமான புதையல் கிடைக்கப்போகும் ஆனந்தத்தில் கேப்டன் குக்கும் அவனது சிப்பாய்களும் இருந்தனர். நீராகாரம் இன்றி மாரியாவுக்கும் நிகலஸுக்கும் உடல் சோர்வு பெற்று இருந்தது.

கேப்டனின் விசுவாசி ஒருவன் கடலிலே தூண்டிலை வீசி பொழுதுபோக்காக மீன் பிடித்து கொண்டு இருந்தான். கிட்டத்தட்ட ஆறேழு மீன்களை  பிடித்து கப்பலின் உள்ளே வீசிக்கொண்டிருந்தான். அது அப்போதுதான் உள்ளே இருந்து வந்த குக்கின் காலடியில் வந்து விழுந்தது.

“டேய்”

“ஐயையோ மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க” என்று அவர் காலடியில் வந்து விழுந்தான்.

“ம்ம். அவங்க நமக்கு வழி சொல்லவே இல்லை அப்படித்தானே.”

“ஆமாங்க கேப்டன். சரியான திமிர் பிடிச்சவங்க அவங்கள என்ன பண்ணுறதா இருக்கீங்க?” என்று கேட்டான்.

“அவங்க கிட்ட இருந்து எனக்கு ஒரு துருப்பு சீட்டு கிடைச்சிருக்கு. அதை வெச்சி நான் என்ன பண்ணுறேன் பாரு” என்றவன். அந்த மீன்களை எடுத்து கொண்டு மாரியா இருக்கும் இடத்துக்கு சென்றான்.

“சே.  நீயா! எதுக்கு வந்தே? எங்களை எதுக்கு இன்னும் வெச்சிருக்கே ஒரேயடியாக கொன்னுடு” என்று இறைந்தாள் மாரியா.

“ஒரேயடியாக கொல்லுறதுக்கா. உங்களை இவ்வளவு தூரம் தேடி வந்தேன். உங்க ரெண்டு பேரையும் வெச்சி தானே நான் என்னோட புதையலை அடைய போறேன்.” என்று விட்டு அந்த மீன்களை அவர்கள் மூஞ்சியில் விட்டெரிந்து,

“இன்னிக்கி இது தான் உங்களுக்கு சாப்பாடு. விடியிரத்துக்குள்ள உங்க பொண்ணு இருக்குற இடத்தை யாரு சொல்லுறீங்களோ. அவங்கள நான் கொன்னுடுவேன். மத்தவங்க ஈஸியா தப்பிச்சிகலாம்” என்றான் அப்படியே அங்கிருந்து சென்று விட்டான். என்ன செய்வதென்று அறியாமல் இருவரும் துடித்தார்கள். கீழே கிடந்த மீனை வயிற்றால் ஊர்ந்து ஒரு மிருகம் சாப்பிடுவது போல பச்சையாக உண்டார்கள். அவ்வளவு பசிக்கொடுமை.

“என்னங்க நாம என்ன பண்ண போறோம். நம்ம பொண்ணை இவன் கண்டிப்பா கொன்னுடுவான்.” என்றாள் மாரியா.

“அப்போ எதுக்காக யோசிக்குறே பொண்ணு இருக்குற இடத்தை சொல்ல முடியாது. ஆனா இந்த பிரச்சினையில் இருந்து உன்னால மட்டும் தான் நம்ம எல்லாரையும் காப்பாற்ற முடியும்.” என்றான் நிக்கலஸ்.

“என்னங்க சொல்லுறீங்க என்னால என்ன முடியும்?”

“தயவுசெய்து உங்க பூர்வீகம் அது இதுன்னு பார்க்காம அந்த பாழாப்போன புதையல் இருக்குற இடத்தை சொல்லிடு. அவன் நம்ம எல்லாரையும் விட்டுடுவான்.” என்றான் கெஞ்சும் படியாக.

“என்னங்க சொல்லுறீங்க? அது அது மட்டும் என்னால முடியாது.” என்றாள் மாரியா எச்சிலை விழுங்கிய படி.

“எப்போ நீ ஒரு கடற்கொள்ளையர் வம்சம் என்று தெரிஞ்சே உன்னை நான் கல்யாணம் பண்ணேனோ. அப்பாவே நாம சில விஷயங்களை பேசி முடிவெடுத்து இருந்தோம். நியாபகம் இருக்கா இல்லியா? நம்ம பொண்ணுக்கு இந்த விஷயங்களை எல்லாம் நீ சொல்லவே கூடாதுன்னு? நீ அவகிட்ட எதுவும் சொல்லல தானே” என்று கேட்டான்.

“எனக்கு புரியுதுங்க, ஆனா நான் ஒண்ணுமே சொல்லலீங்க. ஆனா ஒருவேளை அப்பா” என்று மாரியா இழுத்தாள்.

“அப்படின்னா ஐரிஸுக்கு புதையல் பற்றி தெரியுமா?” என்று கோபத்தோடு கேட்டான் நிக்கலஸ் அத்தோடு மேலும்,

“நீ நம்மளையும் நம்ம பொண்ணையும் கொல்லாம விடமாட்டே மாரியா. உனக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம். அவனுக்கு தேவை நாம இல்ல. அந்த ரகசியம் தான் அதை சொல்லிட்டா நம்ம எல்லோரையும் அவன் விட்டுடுவான். தயவுசெய்து புரிஞ்சிக்க”

நிக்கலஸ் கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை மாரியா எதிர்பார்த்திருக்க வில்லை. ஆனால் அடுத்து மாரியா சொல்லப்போகும் பதிலை நிக்கலஸ் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க வில்லை.

“ஐயோ கடவுளே எனக்கு அந்த புதையல் பற்றி எதுவுமே தெரியாதுங்க.” என்றதும் அதிர்ச்சி அடைந்தான் நிக்கலஸ்.

தொடரும்
A.L.F. Sanfara

 

Leave a Reply

%d bloggers like this: