கண்ணே! என் மடலின் துவக்கம்
கண்ணெதிரே நீ இங்கு இல்லை.
ஆசையுடன் கவிகள் பாடவும்
ஆதரவாய் தோல் சாயவும்-என்
எதிரே நீ இன்று இல்லை.
கும்மிருட்டுப் பொழுதில்
கண்ணயர்ந்து உரங்க
கனாவில் தொடர்ந்தது உன் முகம்
கண்களும் உறக்கத்தில் தொலைந்திடவா?
இடையிடையாய் வந்த மெசேஜ்கள்
இடைவெளியின்றி கதைத்த கதைகள்
இனிமையாய் இனித்தது செவிகளுக்கும்,
இதயத்தில் காதல் பயிர் துளிர்த்திடவா?
கண்கலங்கிய பொழுதுகளில்
கரங்கொண்டு கண்ணீர் துடைத்து
கவலைகள் நீங்கிட
பலநூறு வழிகளும் உறைத்தாய்.
சீறிய வழியில் கரம் பிடித்து,
சீரமிகு மார்கத்தில் நிலைத்திட- நம்
சின்னஞ்சிறு இதயங்கள்
காதலை சுமந்தது குழந்தையாய்
குழந்தை தினத்தில் குறைவின்றி
சேட்டைகள் செய்து சோர்வாக்கி
விகடங்கள் கூறி வியக்கவைக்கும் – நீ
என் முதற் குழந்தை.
காதலின் துவக்கம் – என்
கவியின் ஆரம்பமாய்
காதலை காகிதத்தில் செதுக்கிட – இது
காதல் மடல் அல்ல – என்
கவியின் மடல்.