அவள்

Advertisements

வலிமையானவன் என்கிறாய்
உன்னை வலி சுமந்து
பெற்றெடுத்தவள் – அவள்.

அனுபவ பொருள் என்கிறாய்
உன்னை அறிமுகப்படுத்தியவள் – அவள்.
செல்லாக்காசு என்கிறாய்
உன்னை செதுக்கியவள் – அவள்.

இரகசியம் காக்க தெரியாதவள்
என்கிறாய் உன்னை
இரசணையோடு சுமந்தவள் – அவள்.

அடுப்பூத லாயக்கு
என்கிறாய் உன்னை
ஆளாக்க பாடுபட்டவள் – அவள்.

பின்புத்தி கொண்டவள்
என்கிறாய் உன்னை
புத்திக்கொள்ள செய்தவள் – அவள்.

கண்ணீரால் சாதிப்பவள்
என்கிறாய் கண்ணிமைக்காமல்
உன்னை கண்காணித்தவள் – அவள்.

பலவீனமானவள் என்கிறாய்
உன்னை பாதுகாத்தவள் – அவள்.

இழிவாக எண்ணாதே
உன்னை இதயத்தில் சுமப்பவள் – அவள்…

பல பாத்திரங்களாக
மாறி மற்றவர்களுக்காக
வாழும் தியாகி – அவள்.

அவமதித்துவிடாதே
அரவணைத்துக்கொள்
உன்னில் பாதி – அவள்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

Leave a Reply

%d bloggers like this: