வெலிகமையின் பாரம்பரிய கிலாஸ் லாம்புப் பவணி

Advertisements

தென் இலங்கையிலே மாத்தறை மாவட்டத்திலே முஸ்லிம்கள் அதிகமாகவும் இலங்கையிலே தஃவா துறையில் பிரபலமான உலமாக்களை உருவாக்கிய மத்ரஸாக்களும் அமைந்த ஊர் தான் வெலிகமயாகும்.

இந்த ஊரை தனித்துவமாக காட்ட ஒரு சில சம்பிரதாயங்களும், ஒரு சில உணவு வகைகளும் காணப்படுகின்றன. அந்த சம்பிரதாயங்களில் ஒன்று தான் சிறுவர்களால் “கிலாஸ் லாம்பு” என்ற விளக்கோடு ஊர் சிறார்கள் அனைவரும் தக்பீர் கூறிக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வரும் “தக்பீர் பவணி” ஆகும்.

இப்பவணி 30.07.2020 ஆந் திகதி இரவு வெலிகம கோட்ட கொடைப் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 200 சிறுவர்கள் கலந்து கொண்டனர். மஹ்ரிப் தொழுகயை தொடர்ந்து கோட்டகொடை பள்ளிவாசல் இமாம் இஷ்பாக் மௌலவி அவர்களின் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கு பிரதேசவாசிகள் சிற்றுண்டிகளை வழங்கி சிறுவர்களை மகிழ்வூட்டினர். இப்பவணியானது அன்று தொற்று இன்றுவரை வெலிகமயில் இடம்பெற்று வருகின்றது.

தென்னிலங்கை வெலிகமயில் இவ்வாறு காலாகாலமாக நடைபெற்று வரும் “கிலாஸ் லாம்புப் பவணி” என்பது ஒரு பாரம்பரிய கலாசார பவணியாகும். ஒரு வித வார்னிஸ் தாள்களை கொண்டு பல நிறங்களில் உருவாக்கப்பட்டு அதன் மையத்திலே ஒரு மெழுகு வர்த்தியை கொழுத்தி உருவாக்கப்பட்ட விளக்கு போன்ற அமைப்பு தான் கிலாஸ் லாம்பு (Glass lamp) என அழைக்கப்படுகின்றது.

தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் வந்தால் பெருநாளிற்கு முன்னைய இரவு மஹ்ரிப் தொழுகயை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம், முஅஸ்ஸின் அவர்களின் தலைமையிலும், பெற்றோர்கள் சிலரின் பாதுகாப்புனும், ஊர் சிறுவர்கள் தக்பீர் முழங்கிய வண்ணம் பவணி வருவார்கள். சிறுவர்கள் இந்த கிலாஸ் லாம்பை கையில் ஏந்திக் கொண்டு ஊரின் அனைத்து பாதைகளிலும் தக்பீரை உரத்துக் கூறிக் கொண்டு செல்வர். இவ்வாறு செல்லும்போது வீடுகளிலும், கடைகளிலும் உள்ளவர்கள் அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக அச் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களையும், குளிர் பானங்களையும் கொடுத்து சிறுவர்களை மகிழ்விப்பர். இறுதியாக இப்பவணி ஊர் முழுவதும் சுற்றி பள்ளிவாசலில் முடிவைடகிறது.

இந்த வழக்கம் பிற ஊர்களிலும் இருப்பதோ தெரியவில்லை கேட்ட வரைக்கும் யாரும் இப்படியான ஒரு வழக்கத்தை கேட்டதாகவோ, பார்த்ததாகவோ கூறவில்லை.

Farsan Fayis,
தில்ஷாத் இப்னு தலீல்
Weligama

Leave a Reply

%d bloggers like this: