தியாகத் திருநாள்

Advertisements

ஏகனின் ஏவலை ஏகமனதாக ஏற்று
பாலகனையும் பத்தினையையும்
பாலைநிலத்தில் விட்டுவந்தார்
இறைதூதர் இப்ராஹீம்.

மனத்திடத்துடன் அவன் உதவுவான்
என்ற நம்பிக்கையுடன்
கால்தட்டி அழும் பாலகனுக்காக
சபா – மர்வா இடையில்
ஓடினார் தாகம் தீர்க்க.

என்பதை கடந்து பிறந்த
அருமை மகனை அல்லாஹ்வுக்காக
அறுத்துப்பலியிட துணிந்தார் தூதர்.

அல்லாஹ்வுக்காக அனைத்தையும்
அர்ப்பணிக்க துணிந்த
அபுல் அன்பியா எனும்
அழகிய நாமத்தை உடைய
தூதரின் தியாகத்தை
நினைவு கூறும் தினமே
ஹஜ்ஜுப் பெருநாள்.

குடும்பமாய் இணைந்து
இறைவனை களிப்புற செய்த
கலீலுல்லாஹ் இப்ராஹீம்.

உண்மை தூதரின் உதாரணத்தை
உலகம் போற்றும் உன்னத நாள்
ஹஜ்ஜுப் பெருநாள்
அதுவே தியாக திருநாள்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

Leave a Reply

%d bloggers like this: