இது கனவா? நிஜமா?

  • 10

திருப்பு முனை
பாகம் 11

வீட்டில் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருந்தாள் லீனா. வெகுநேரமாகியும் அழைப்பு வரவில்லை.

‘ஏன்? இவ்வளவு நேரம் கோல் எடுக்க? ஷெரீன் சொல்லி இரிப்பா தானே. ஒரு வேல மாமி ஊட்ல இரிக்கிறாவோ தெரியா.’ ம்ஹூம். என்று பெரு மூச்சு விட்டாள் லீனா.

“டொக் டொக்”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் போனை மறைத்து வைத்து விட்டு வந்து கதவை திறந்தாள். ஷரீப் வந்திருந்தான்.

“லீனா அந்திக்கி ஊட்டுக்கு போறதுக்கு ரெடியாகுங்க. வீல் வரும்”

“ஆ உண்மயாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் லீனா.

“ஆனா ஒன்டு இது கடசியா இரிக்கனும். இனி நா சொல்ற time கு மட்டும் தான் நீங்க எங்கயும் போவனும். நீங்க நெனச்ச time கு எல்லாம் நா கூட்டி போ மாட்டேன் சரியா?”

“ம்ம். சரி” என்றாள் மெதுவாக.

“உடுப்ப ரெடி பண்ணி வைங்க. இன்டக்கி பெய்த்துட்டு நாளக்கி வரனும். எனக்கும் இங்க நெரய வேல இரிக்கி. ரெடி பண்ணுங்க. நா வெளிய பெய்த்துட்டு வாறேன்.”

“ம். சரி அப்ப”

அவன் சென்றதும் கதவை மூடி விட்டு சஜ்தா ஷூக்ர் செய்தாள். அல்ஹம்துலில்லாஹ். அவளுக்குள் ஆனந்தம் கூத்தாடியது.

தாயை காணும் ஆவலுடன் பல கனவுகளோடு உடைகளை ஆயத்தம் செய்தாள். பிறகு சலீமா தாத்தாவை வரவழைத்து போனை கையளித்தாள்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவனுக்காக காத்திருந்தாள். அவன் வந்ததும் பகலுணவை உண்ட பின் அவள் ஆயத்தமாகி கொண்டிருந்தாள். அப்போது அவனும் ஆயத்தமாகி விட்டு அவளை அன்போடு பார்த்து,

“என்னா? கோவமா?” என்றான்.

அவளுக்கு எதுவும் புரியவில்லை. மெலிதாக சிரித்து விட்டு,

“இல்லயே”

என்றவளின் நெற்றியில் முத்தம் இட்டு விட்டு,

“ரெடியாகிட்டு சொல்லுங்க. வீல்க்கு சொல்லனும். உம்மாவ பாத்துட்டு மறுநாளே வந்துடனும் சரியா.”

“ஏன் அவசரமா வாரன்டு கேக்க மாட்டீங்களா?”

“ஏன்?”

“எஙட சாச்சா family ஓட உம்றாக்கு போறாங்க. அவங்க எஙலயும் கூட்டிட்டு போக போறாங்களாம் சரியா?”

“அவர் ஏன் எஙல கூட்டிப் போகனும்?”

சற்று சிந்தித்தவாறே கேட்டவளை பார்த்து,

“அவர் அவ்வளவ் எரக்கம் எனயோட. எங்க போறன்டாலும் எனய கூட்டிட்டு தான் போவாரு. அதே போல தான் சாச்சியும். இப்பமே உம்றா போறத பத்தி ஒஙட ஊட்ல யார்டயும் சொல்லாதீங்க. சரி okay. ரெடியாகுங்க.”

லீனா எதுவும் பேசாது சந்தோச மிகுதியால் சரி என்பது போல் தலையசைத்தாள்.

‘என்னடா இது கனவா? நிஜமா? முடிச்சி இத்தன நாளும் இல்லாத எரக்கம் இன்டக்கி வந்திரிக்கி. ஒரு வேல திருந்திட்டாரோ. அப்படி திருந்தினா எவ்வளவு நல்லம்.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் லீனா.

ஷரீப்பின் அந்த மாற்றம் அவளுக்குள் பேரின்பத்தை தந்தது. ஆனாலும் அது ஓர் மாயம் தான் என்பதை அவள் உணரவில்லை.

நேரம் 3.00 மணி. வீல் வந்தது. இவர்கள் பயணமும் ஆரம்பித்தது. அன்று அவன் நிறைய பேசினான். அவள் கேட்காமலேயே அவள் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளை வாங்கி கொடுத்தான். அவளை தனது தோளோடு சாய்த்து கொண்டு அரவணைத்தான். அப்போது அவள் நினைவில்.

அன்றொரு நாள் அவனுடன் கொழும்புக்கு சென்ற போது அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் சாய்ந்த மறுகணமே அவன்.

“ச்சே. ஏன்ட தோள்ல சாய வானா. வேணும்னா ஜன்னல் பக்கம் சாய்ங்க.”

என்று அவன் கூற அதற்கு அவள் அழுதது ஞாபகம் வந்தது. ஆனால் இன்று எல்லாமே அவளுக்கு புதிராய் இருந்தது. இத்தனை காலம் அவள் அவனிடம் எதிர்ப்பார்த்து ஏங்கிய அன்பு அவளுக்கு கிடைத்தது.

‘அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் நா இந்த எரக்கத்த தான் எதிர்பார்த்தேன். நா ஒவ்வொரு நாளும் கேட்ட துஆவ நீ கபூலாக்கிட்டாய் ரஹ்மானே. இது போதும் எனக்கு. கடசி வரக்கும் இவர் இப்பிடியே இருக்கனும். இவர்ட மனசுல நா மட்டும் தான் இரிக்கனும் ரஹ்மானே. அந்த ரோஸிய உட்டு
இவர் தூரமாக அருள்புரி. அவள் மட்டும் இல்லாட்டி ஏன்ட life எவ்வளவு சந்தோசமா இரிக்கும். நீ தான் இரிக்கிறாய் ரப்பே. எனய கை உட்டுடாத. இதுக்கு மொத இவர் எப்படி இருந்தாரோ அது ஒன்டும் எனக்கு தேவல்ல. ஆனா இனி சரி எனயோட ஒழுங்கா இரிக்க அருள்புரி. நா இவரோட எவ்வளவு எரக்கம் வெச்சிருக்கேன்டு ஒனக்கு மட்டும் தான் தெரியும் ரப்பே. அத இவர் புரிஞ்சுக்கனும்.’

லீனா மனதுக்குள் பிராத்தித்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைத்து இருந்தது. அதை ஷரீப் கண்டு கொண்டான்.

“ஏன் அழுறீங்களா.”

“இல்ல.”

“சொல்லுங்க ஏன் அழுதீங்க?”

“நீங்க இப்ப நல்லமாவி.. முந்தி மாதிரி இல்ல. அத நெனச்சி தான் அழுவ வந்துட்டு.”

“அத நெனச்சி சந்தோசப்படுங்க. அழாம.”

“நா அழுததே சந்தோசத்துக்கு தான்வா. நா ஒன்டு கேக்கவா.”

“கேளுங்க”

“நீங்க கடசி வரக்கும் இப்படியே இரிக்கிறீங்களா. please”

“இப்பிடி என்டா. இப்பிடியே உக்காந்துட்டு இரிக்க சொல்றீங்களா. பாவம் driver lost ஆக வேண்டிய தான்.”

என்று விட்டு ஷரீப் கலகலவென சிரித்தான். அவளும் சிரித்தாள். வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் அனுபவித்த ஓர் உணர்வு அவளுக்குள் ஊஞ்சலாடியது.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 11 வீட்டில் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருந்தாள் லீனா. வெகுநேரமாகியும் அழைப்பு வரவில்லை. ‘ஏன்? இவ்வளவு நேரம் கோல் எடுக்க? ஷெரீன் சொல்லி இரிப்பா தானே. ஒரு வேல மாமி…

திருப்பு முனை பாகம் 11 வீட்டில் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருந்தாள் லீனா. வெகுநேரமாகியும் அழைப்பு வரவில்லை. ‘ஏன்? இவ்வளவு நேரம் கோல் எடுக்க? ஷெரீன் சொல்லி இரிப்பா தானே. ஒரு வேல மாமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *