உள்ளம் உடைந்து விட்டால்

  • 6

அது ஒரு ஹோட்டல். நேரம் காலை 10.30. அங்கு பலர் பொருட்களை கொள்வணவு செய்துகொண்டிருந்தனர். ஒருசிலர் உட்கார்ந்திருந்தனர். அந்த நேரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடும் களைப்புடனும் வியர்வையுடனும் உள்ளே நுழைகிறார்.

மிகவும் மெலிந்த, சோர்வடைந்த தோற்றம். அவரது ஏழ்மை நிலையை அவரது தோற்றமே காட்டியது. வந்தவர் பேன் காற்றின் கீழே உட்கார ஆசைப்பட்டு அருகிலிருந்த இரண்டு கல்விமான்களிடம் சற்று தள்ளியிருக்குமாறு கேட்கின்றார்.

அப்போது அவ்விருவரில் ஒருவர் “அப்பா வீட்டில் எப்போதும் AC யில் இருக்கின்றவர். அதுதான் அவரால் சூட்டைத் தாங்க முடியவில்லை போலும்”. இப்போது இரண்டாமவர் சிரித்துக் கொண்டே தன் பங்கிற்கு “அப்பாவுக்கு பேன் காற்று சரி வராதே காற்றுக்கு பறந்தே விடுவார்” என்று நக்கல் செய்ய இருவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர்.

மனமுடைந்த அந்த மனிதர் கலங்கிய கண்களுடன் தன் இயலாமையின் வெளிப்பாடாக “யா அல்லாஹ்” என்று கூறிக்கொண்டே வெளியேறுகின்றார்.

என் நண்பரொருவர் இந்தச் சம்பவம் சென்ற ஞாயிற்றுக்கிழமை தனக்கு முன் நடந்ததாக மிகவும் கவலையுடன் முழுவதுமாகக் கூறினார்.

இவ்வாறு பிறரால் தினமும் மனமுடைந்து கண்ணீர் வடிப்போர் ஏராளம். தான் சிரிப்பதற்காகவும் சந்தோஷம் அடைவதற்காகவும் அடுத்தவரை காயப்படுத்தி ரசிப்போரும் தாராளம்.

உங்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும் புன்னகையையும் வழங்க முடியாது போனாலும் காயத்தையும் கண்ணீரையும் வழங்காதீர்கள். அது மாறாது. தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாதே நாவினால் சுட்ட வடு.

பாமரன், ஏழையென்றால் ஒருவிதமான நடத்தை. படித்தவர், பணக்காரனென்றால் இன்னொரு விதமான நடத்தை. என்னவொரு கொடுமையான பேதமிது? மனிதனை மனிதனாகப் பார்க்காத உலகம். அதனால்தான் மனிதமே செத்துவிட்டது.

இயலாதவனைக் கண்டால் அவனை ஏளனம் செய்து, எள்ளி நகையாடி, அவன் மீது சவாரி செய்யத் துடிக்கும் பண்பாடும் ஒழுக்கமும் மனிதமும் அற்றவர்களை என்னவென்று சொல்ல.

ஏழை எளியோரென்றால் அவ்வளவு இளக்காரமா?

சாதாரண கடை முதல் தன் தேவையை நிறைவேற்றச் செல்லும் அரசாங்க அலுவலகங்கள் வரை எல்லா இடங்களிலும் ஒடுக்கி, ஒதுக்கப்படும் அந்த ஏழையின் கவலையும் கண்ணீரும் எத்தனை பேரை நாளை மறுமையில் வங்குரோத்துக்காரர்களாக மாற்றப் போகின்றதோ. யா அல்லாஹ்! எம்மை மன்னித்துவிடு.

படித்த கல்வியில் பண்பாடும் ஒழுக்கமும் இல்லையேல் நீயும் உன் கல்வியும் செல்லவேண்டிய இடம் குப்பைத் தொட்டிதான் என்பதை மறந்து விட்டாயே.

ஒன்று மட்டும் உண்மை: இங்கு மதிப்பும் மரியாதையும் பணத்துக்கும் பதவிக்கும் தான். உயிரும் உணர்வுமுள்ள மனிதனுக்கு அல்ல. உலகில் முகவரியே இல்லாதிருந்த எத்தனையோ பேர் மறுமையில் உயர் அந்தஸ்தில் இருப்பர். இங்கு பிரபல்யம் அடைந்த எத்தனையோ பேர் மறுமையில் முகவரியே இல்லாதிருப்பர்.

ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர! ஹதீஸ்

பாஹிர் சுபைர்

அது ஒரு ஹோட்டல். நேரம் காலை 10.30. அங்கு பலர் பொருட்களை கொள்வணவு செய்துகொண்டிருந்தனர். ஒருசிலர் உட்கார்ந்திருந்தனர். அந்த நேரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடும் களைப்புடனும் வியர்வையுடனும் உள்ளே…

அது ஒரு ஹோட்டல். நேரம் காலை 10.30. அங்கு பலர் பொருட்களை கொள்வணவு செய்துகொண்டிருந்தனர். ஒருசிலர் உட்கார்ந்திருந்தனர். அந்த நேரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கடும் களைப்புடனும் வியர்வையுடனும் உள்ளே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *