பெர்மூடா எல்லையை நெருங்கிய டேஞ்சர் வூட் கப்பல்

  • 12

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 18】

“அங்க பாருங்க யுவானை!” என்று ஜிம்சன் நடப்பதை காட்ட மூவரும் ஹெலிகாப்டரை விட்டு இறங்கினார்கள்.

“ஐரிஸ். அந்த எஞ்சின் போர்டை ரிலீஸ் பண்ணு.” என்று கட்டளையிட்டான். அவளும் அதுபடியே செய்தாள்.

அவர்கள் மூவரும் கடலுக்குள் போர்டை இறக்கி அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். யுவான் அவனுக்கு தேவையான சிலவற்றை எடுத்து ஐரிஸ் கிட்ட கொடுத்து விட்டு சுபிரீயண்டை இழுத்து கொண்டு போர்டில் ஏறினான்.

“என்ன பண்ற நீ அப்போ இவனை நம்ம கூடவே கூட்டிட்டு வரப்போறயா?” என்று கேட்டாள் ஐரிஸ்.

“ஆஹ்ஹ். அப்படித்தான் தோணுது. அங்க இருக்குற ஜெயில்லபோட்டு இவனை ஒரு வழி பண்ணிடனும்.” என்றாள் லில்லி

“இல்ல. அப்படி பண்ணப்போறதில்லை. சரி கொஞ்சம் இந்த ரிவாழ்வாரை கை மாத்தி கொள்ளுங்க. நான் போர்டை ஓட்டுறேன்.” என்றதும் ஜிம்சன் பாய்ந்து போய் அந்த பொறுப்பை ஏற்றிக்கொண்டான்.

“நீங்க பெரிய தப்பு பண்ணுறீங்க. உங்களுக்கு இதோட விளைவு புரியல்ல. என்ன விட்டுடுங்க.” என்றான் சுபிரீயண்ட்

“லில்லி! அங்க ஒரு துணி கிடக்குது பார். அதை எடுத்து அவன் வாயையும் கையையும் கட்டிபோடு.” என்றான் யுவான் .

அவன் சொன்னது போலவே ஐரீஸும் லில்லியும் இணைந்து சுபிரீயண்டை கட்டிப்போட்டனர். ஆராய்ச்சி தளத்தில் இருந்து எஞ்சின் போர்ட்டில் இவர்கள் தப்பிப்பதை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அங்குள்ளவர்கள் பார்த்து கொண்டிருந்தனர்.

ஜிம்சன் துப்பாக்கியை கீழிறக்கினான். யுவான் வேகத்தை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவந்து இளைப்பாறினான். அதே நேரத்தில் ஆராய்ச்சி கூடத்தில் இருந்த ஒருவன் ரகசிய அறைக்கு சென்று ஒரு ஆளியை அழுத்த உடனே அந்த ஆராய்ச்சி கூடமே அதிர ஆரம்பித்தது. அங்கிருந்த எல்லோரும் ஆளுக்கொரு கம்பியாக பிடித்து கொண்டனர். ஒரு ஐந்து நிமிடம் வரை மொத்த ஆராய்ச்சி கூடமும் ஒரு பெரிய சொகுசு கப்பலாக மாறியது. ஆனால் சொகுசையும் தாண்டி அது ஒரு போர்க்கப்பலாக இருந்தது. சுபிரீயண்டை காப்பாற்றுவதற்காகவும் யுவான் மற்றும் அவனுடைய ஆட்களை கொள்வதற்காகவும் அங்கிருந்த சுபிரீயண்டின் ஆட்கள் தயாரானார்கள். கப்பல் புறப்பட ஆரம்பித்தது. அப்போது ஒரு பெரிய ஒலி எழுப்பப்பட்டது. அது இவர்களுக்கும் கேட்டது.

“அது என்ன சத்தம். நான் இதுவரை கேட்டதே இல்லியே.” என்றாள் ஐரிஸ்.

அதை கூர்ந்து கேட்ட யுவான்.

“இது ஏதோ போர்க்கப்பல்ல இருந்து வரும் எச்சரிக்கை மணி போல இருக்கு.” என்றான்.

அப்போது சுபிரீயண்ட் தன் வாய்க்கட்டுகளையும் மீறி ஏதோ சொல்ல துடித்தான்.

“இந்த ஆளுக்கு வன் பாத்ரூம் போகணும் போல இருக்கு என்னு நினைக்குறேன்.” என்றான் ஜிம்சன்.

அதை பார்த்த யுவான் படகின் கட்டுப்பாட்டை ஐரிஸ் கிட்ட கொடுத்து விட்டு வந்து அவன் வாய்க்கட்டை அவிழ்த்தான்.

“அது என்ன சத்தம் என்று தெரியனுமா பாரு இன்னும் பத்தே செக்கனில் நீயே தெரிஞ்சிப்பே.” என்றான் மிடுக்காக,

இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை எதற்காக சுபிரீயண்ட் இப்படி சொல்ல வேண்டும் என்று எண்ணுவதற்கிடையில் வெகு வேகமாக அந்த கப்பல் இவர்களை நெருங்கி கொண்டிருந்தது. அதில் இருந்து தான் சத்தம் வருகிறது.

“வந்துட்டாங்க என் ஆளுங்க. இனி நீங்க காலி.” என்றான் சுபிரீயண்ட்.

“திடீரென இந்த கப்பல் எங்கிருந்து வந்திச்சு?”

என லில்லி சந்தேகமாக கேட்டாள். கப்பலை மிக உன்னிப்பாக கவனித்த ஐரிஸ் கப்பலின் பக்கவாட்டில் அவர்கள் மூவரும் தங்கியிருந்த அறைகள் கிடையாக இருப்பதை கண்டு.

“ஒஹ்ஹ் மை காட். இது நம்ம இருந்த ரூம் ஆச்சே. அப்படின்னா?” என்று சந்தேகத்துடன் இழுக்க.

“நீ கண்டுபிடிச்சிட்டே ஆமா இது ஆராய்ச்சி கூடம் கிடையாது. இது ஒரு கப்பல். தானாவே தன்னோட அமைப்பை அசம்பிள் பண்ணக்கூடிய ஒரு கப்பல்.” என்றான் சுபிரீயண்ட்.

என்ஜின் போர்டை ஓட்டை ஆக்குவதற்காக அக்கப்பலில் இருந்து ஈட்டி போன்ற ஆயுதங்கள் விசுக் விசுக் என வந்து விழுந்தன.

“யுவான்! அவங்க நம்மள தாக்குறாங்க. அவங்க போர்டை சேதப்படுத்துறாங்க. ஏதாவது பண்ணு.” என்றாள் ஐரிஸ்.

உடனே அவன் போர்டின் கட்டுப்பாட்டை ஐரிஸ் கிட்ட இருந்து வாங்கி கடலில் குறுக்கு மறுக்காக போர்டை வேகமாக செலுத்தினான்.

அந்த கப்பலும் விடாது இவர்களை துரத்தி கொண்டே தாக்கியது.

“இப்போ என்ன பண்ணுறது?” என கேட்டாள் லில்லி.

“அதான் நம்மகிட்ட பென் ட்ரைவ் ஆதாரம் இருக்கிறது இல்லியா. இவனை தூக்கி கடலில் போட்டுடுவோம்.” என்றான் ஜிம்சன்.

முதலில் அதற்கு மறுப்பு சொன்ன யுவான் பிறகு சம்மதித்தான். சுபிரீயண்டை கைகளையும் அவிழ்த்து விட்டு அப்படியே கடலில் தள்ளிவிட்டனர்.

அந்த கப்பலின் தலைவனை தண்ணீரில் தள்ளி விட்டதால் கப்பல் வேகத்தை குறைத்து சுபிரியண்டை காப்பாற்ற முற்பட்டது.

அதற்குள் சிறிதாக ஓட்டை விழுந்த கப்பலை யுவான் வேகமாக செலுத்த உள்ளே இருந்த தண்ணீரை எல்லாம் லில்லியும் ஐரிசுமாக சேர்ந்து இறைத்து கொண்டிருந்தனர்.

கப்பலில் இருந்து சிலர் கடலில் குதித்து நீரில் தத்தளித்து கொண்டிருந்த சுபிரியண்டை காப்பாற்றி கப்பலில் ஏற்றினார்கள். அவரை துடைக்க துண்டையும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

“அவங்க யாரையும் விடக்கூடாது. கப்பலை வேகமாக செலுத்துங்க. அவங்க கரையை அடையவே கூடாது. கடலோடு ஜலசமாதி பண்ணிடுவோம்.” என்று குரல் கொடுத்தான் சுபிரீயண்ட்.


அதேசமயம் டேஞ்சர் வூட் கப்பல் மாரியாவின் திட்டப்படி பெர்மூடா முக்கோண எல்லையை நெருங்கி கொண்டிருந்தது. கேப்டன் குக் அவனது ஆட்களுடன் மாரியாவின் இருப்பிடத்துக்கு வந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு.” என மிரட்டினான்.

“கொஞ்சம் இருங்க எப்படியும் இன்னொரு பத்து கிலோமீட்டர் தூரமே இருக்கும்.” என்றாள் மாரியா.

ஆனால் கொஞ்ச நிமிடத்திலேயே வானில் மேகங்கள் சுருண்டன. நீரோட்டம் அதிகமாக இருந்தது. சுற்றி கடலே தெரியாம புகைமூட்டம் போல இருந்தது. எல்லோரும் இது என்ன என்று சுதாரிப்பதற்குள் கப்பல் காணாமல் போனது.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 18】 “அங்க பாருங்க யுவானை!” என்று ஜிம்சன் நடப்பதை காட்ட மூவரும் ஹெலிகாப்டரை விட்டு இறங்கினார்கள். “ஐரிஸ். அந்த எஞ்சின் போர்டை ரிலீஸ் பண்ணு.”…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 18】 “அங்க பாருங்க யுவானை!” என்று ஜிம்சன் நடப்பதை காட்ட மூவரும் ஹெலிகாப்டரை விட்டு இறங்கினார்கள். “ஐரிஸ். அந்த எஞ்சின் போர்டை ரிலீஸ் பண்ணு.”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *