கொரோனாவும் தகவல் தொழில்நுட்பமும்

  • 27

சமீப காலத்தில் உலகையே தன்வசத்தில் வைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் பிடியை சற்றும் தளர்த்தாமல் பெறுமதியான மனிதனின் உயிருடன் விளையாடி வருகின்றது. சிறியவர் பெரியவர் என்று பாராது தன்குணத்தை சற்றும் மாற்றாது ஒரே வகையான தாக்கத்தை காட்டி வருகின்றது. பல விதமான முயற்சிகள் எடுத்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை.

இவ்உயிர் கொல்லி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற இயற்கையாகவே தங்களை தனிமையாகவே வாழப்பழக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவானது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட வண்ணம் பரவி வருகின்றது. இன்றுவரை நோய்க்கான எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படாமை இன்னும் மனதை வாட்டுகின்ற நிகழ்வாக காணப்படுகின்றது.

கல்வி என்பது இவ்வுலகில் பெரிதும் மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது “நெல்சன் மண்டேலாவின் வாக்கு”, அதுபோலவே, ஒரு மரத்திற்கு எப்படி அதன் வேர்கள் முக்கியமோ அது போலவே மனிதனுக்கும் கல்வி இன்றியமையாதது.

இன்றைய காலகட்டத்தில் கல்வி அத்தியவசிய தேவையாக மாறிவிட்டது. கல்வியை கற்பதனாலே மனிதன் உயர்ந்த இடத்தை அடைகின்றான். ஒழுக்கம் உயிருக்கு மேலாக ஓம்பப்படும், என்பது முதுமொழி, இவற்றை எல்லாம் நோக்கும் போது கல்வியை எவ்வாறேனும் பெற வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகிறது.

எனவே, தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வீட்டினுள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவை, வங்கிச்சேவை, கல்விச்சேவை மற்றும் தனியார் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்ட போதும் எம்கரம் பிடிக்கும் நுட்பமாய் தொழிற்நுட்பம் காணப்படுகிறது.

இதன் வாயிலாகவே இலங்கை தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா மற்றும் வசந்தம் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசையிலே குறிப்பிட்ட பாடத்திட்டங்களை மாணவர்கள் மத்தியில் சென்றடையும் ஓர் தொலைநோக்கு தொழில்நுட்பமாகவே தற்போது மாணவர்களை வலம் வருவதை காணமுடிகின்றது.

இதனைத்தொடந்து அதீத தொழிநுட்பமாய் ஒன்லைன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி இன்னும் பல மாணவர்களின் அருகே பிண்ணிப்பிணைந்ததாய் ஸும் (Zoom) போன்ற கல்வி நடவடிக்கைகளும் மெஞ்ஞானமும் சிலிர்க்கும் வி்ஞ்ஞானின் விந்தையாய் தவழ்ந்து கொண்டே நடைப்பயணம் போடும் இவ் தொழிற்நுட்பத்தையே பறைசாட்டிநிற்பதை எம்மனைவராலும் கண்டுகொள்ள முடிகின்ற அரிய உண்மையாகும்.

எனவே, பொதுவாக நோக்கினால் கொரோனாவின் கொடிய தாக்கத்தின் சூழ்நிலையிலும் இவ்வுந்து சக்தியாய் தொழிற்படும் தொழிற்நுட்பமாம் தகவல் தொழில்நுட்பமே, அதீத சவால்களை முறையடித்த, தற்போதும் முறையடித்துக்கொண்டிருக்கும் ஓர் சாதனைச் சாதனமாய் மாணவர்களின் எதிர்காலத்தையும் நம் அன்றாட வாழ்க்கையையும் இயக்கிக் கொண்டுசெல்கின்ற ஓர் இயம்பு கோலாகவே கல்வி போன்ற அனைத்துமான முழுவதுமான செயற்பாடுகளுக்கும் பெரிதும் உதவுபொருளொன்றாகவே எல்லா மாணவர்கள், மாத்திரமன்றி சிறியார் பெரியார் கற்றார், கல்லாதார் என்று பாகுபாடின்றி வலம்வந்து கொண்டிருக்கும் ஒன்றாகவும், கோரோனாவின் கோரதாண்டவத்தையும் தாண்டி வீர நடை போடும் ஒன்றெனின் தொழில்நுட்பமேயன்றி வேறெதுவும் கிடையாது. இதுவே தொழில்நுட்பம்.

SALAHUDEEN FATHIMA SHAMA,
ANURADHAPURA,
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA.

சமீப காலத்தில் உலகையே தன்வசத்தில் வைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் பிடியை சற்றும் தளர்த்தாமல் பெறுமதியான மனிதனின் உயிருடன் விளையாடி…

சமீப காலத்தில் உலகையே தன்வசத்தில் வைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் பிடியை சற்றும் தளர்த்தாமல் பெறுமதியான மனிதனின் உயிருடன் விளையாடி…

3 thoughts on “கொரோனாவும் தகவல் தொழில்நுட்பமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *